புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் போன்றவை குறித்து ‘சந்தைக்குப் புதுசு’ பகுதியில் இனி தொடர்ந்து பார்ப்போம்.

ஆக்ஸிஸ் ரிட்டயர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்

சம்பாதிக்கும் காலத்திலேயே ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு உதவும்விதமாக ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ‘ரிட்டையர்மென்ட் சேவிங்ஸ் ஃபண்ட்’ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் செய்யப்படும் முதலீட்டுத் தொகையை ஐந்து ஆண்டுகள் அல்லது ஓய்வூதிய வயது வரை எடுக்க முடியாது. இந்த இரண்டில் எது முந்துகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த ஃபண்ட் மூன்று முதலீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. அக்ரஸிவ் பிளானில் நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு 65-80% வரை இருக்கும். டைனமிக் பிளானில் நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு 65% மற்றும் 100 சதவிகிதத்துக்கு இடையே மாறும் வகையில் நிர்வகிக்கப்படும். கன்சர்வேட்டிவ் பிளானில் கடன் சந்தை சார்ந்த முதலீடு 40 - 80% வரை இருக்கும். நீண்டகால எஸ்.ஐ.பி முதலீட்டாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த ஃபண்டில் டிசம்பர் 13, 2019 வரை முதலீடு செய்யலாம்.

உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் டேர்ம் பிளான்

உடல்நலப் பிரச்னைகளுடன் உள்ளவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசியைப் பெற சிக்கலைச் சந்திக்கும் நிலையில், அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ ப்ரீசியஸ் லைஃப் [ICICI Pru Precious Life] என்ற புதிய டேர்ம் பிளானைக் கொண்டுவந்திருக்கிறது.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், உடல்பருமன் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களும் புற்றுநோய் மற்றும் பிற அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் காப்பீடு பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

பலவகையான உடல்நலப் பிரச்னைகளை உள்ளவர்கள், அவர்களுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தை உறுதி செய்ய இந்தக் காப்பீட்டுத் திட்டம் வகை செய்கிறது. பாலிசி காலத்தில் ஒரே முறையிலோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ பிரீமியம் தொகையைச் செலுத்தும் வாய்ப்பை இந்த பாலிசி வழங்குகிறது.

கடந்த இரு வருடங்களாக மிட்கேப் நிறுவனப் பங்குகளின் விலை சந்தையில் வெகுவாகக் குறைந்திருக்கிறது

பிரின்சிபல் மிட்கேப் ஃபண்ட்

கடந்த இரு வருடங்களாக மிட்கேப் நிறுவனப் பங்குகளின் விலை சந்தையில் வெகுவாகக் குறைந்திருக்கிறது. எனவே, மிட்கேப் பங்குகள் தற்போது கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கின்றன. இந்த நிலையில், மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்யும், பிரின்சிபல் மிட்கேப் ஃபண்ட் அறிமுகமாகி இருக்கிறது.

தற்போது இந்த ஃபண்டில் செய்யும் முதலீடு அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் நல்ல வருவாயை அள்ளித்தரும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில், இந்த ஃபண்டில் மொத்தமாக அல்லது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். புதிய ஃபண்ட் வெளியீடு, டிசம்பர் 6-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி நிறைவு பெறுகிறது.