Published:Updated:

சந்தைக்குப் புதுசு! : ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற முதலீடு!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு

சந்தைக்குப் புதுசு! : ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற முதலீடு!

முதலீட்டாளர்கள் கவனத்துக்கு

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

ற்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் குறித்துப் பார்ப்போம்.

சந்தைக்குப் புதுசு! : ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற முதலீடு!

சூப்பர் ஹெல்த்கேர் இன்ஷூரன்ஸ்

யூனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் (Universal Sompo General Insurance Company Limited), அலகாபாத் வங்கியுடன் இணைந்து சூப்பர் ஹெல்த்கேர் இன்ஷூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விநியோகம் விரைவில் ஆன்லைனில் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஷூரன்ஸ், டாப்-அப் மற்றும் சூப்பர் டாப்-அப் வசதியுடன் வெளியாகிறது. அதிகபட்ச கவரேஜ் தொகை ரூ.1 கோடி. இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு பிரீமியம் குறைவு என்பதால், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த பாலிசியைப் பரிசீலிக்கலாம்.

பே டிஎம் வாடிக்கையாளர்களுக்கு குரூப் பாலிசி

ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம், பே டிஎம் வாடிக்கையாளர்களுக்கு குரூப் ஹெல்த் பாலிசியை அளிக்கிறது. பே டிஎம் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ள முடியும். `மற்ற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைப்போல கே.ஒய்.சி நடைமுறைகள் தொந்தரவு இருக்காது’ என்கிறது இந்த நிறுவனம். இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் 149 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்

ஐ.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ஐ.டி.எஃப்.சி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்’ என்ற புதிய ஃபண்டை அறிமுகம் செய்திருக்கிறது. ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுக்குப் பிப்ரவரி 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் திரட்டப்படும் நிதியில், பெரும் பகுதியை ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யும்விதமாக இதன் போர்ட்ஃபோலியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கேற்ற ஃபண்டாக இது இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்-ல் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்

முதலீடு
முதலீடு

ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்’ என்ற ஃபண்டை அறிமுகம் செய்திருக்கிறது. ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு பிப்ரவரி 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் திரட்டப்படும் நிதியில் பெரும் பகுதியைப் பங்கு சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யும்விதமாக இதன் போர்ட்ஃபோலியோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டில் ரிஸ்க் அதிகம் என்பதால், குறைந்த வயதுள்ள மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் இதைப் பரிசீலிக்கலாம்.  

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் - சீரிஸ் 87 - 1163 நாள்கள் பிளான் சி (ICICI Prudential Fixed Maturity Plan - Series 87 - 1163 Days Plan C)’ என்ற ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.

குளோஸ்டு எண்டடு வகையைச் சேர்ந்த இதில், குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய பங்கு வெளியீட்டுக்கு பிப்ரவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். இதில் திரட்டப்படும் நிதியில் பெரும் பகுதி நிலையான வருமானம் தரக்கூடிய முதலீடுகளிலும், கடன் சார்ந்த ஆவணங்களிலிலும் முதலீடு செய்யும் விதமாக இதன் போர்ட்ஃபோலியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ரிஸ்க் அளவு குறைவு. எனவே, குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இந்த ஃபண்டை கவனிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism