Published:Updated:

ஃபிக்ஸட் டெபாசிட்... மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி..! - பயனுள்ள திட்டங்கள்..!

சந்தைக்கு புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்கு புதுசு

சந்தைக்கு புதுசு

ஃபிக்ஸட் டெபாசிட்... மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி..! - பயனுள்ள திட்டங்கள்..!

சந்தைக்கு புதுசு

Published:Updated:
சந்தைக்கு புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்கு புதுசு
ண்மையில் சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள சில திட்டங்கள்...

இ.எஸ்.ஜி ஃபண்ட்

ஐ.சி.ஐ.சி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் இ.எஸ்.ஜி ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000. இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி, சுற்றுப்புறச்சூழலை மதிக்கக்கூடிய சமூகத்தைப் பற்றி அக்கறை உள்ள மற்றும் நல்ல மேலாண்மைத் திறன் கொண்ட நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட்... மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி..! - பயனுள்ள திட்டங்கள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இந்த ஃபண்டில் 20% வரை வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். சுற்றுப்புறச் சூழலை மதித்து சமூக அக்கறையுடன் செயல்பட்டு மற்றும் நல்ல மேலாண்மையைக் கொண்டுள்ள நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை கடந்த காலங்களில் ஈட்டித் தந்துள்ளன. ஆகவே, இ.எஸ்.ஜி தீமில் நம்பிக்கை கொண்டவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்துகொள்ளலாம். இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 5. நுழைவுக் கட்டணம் கிடையாது. 12 மாதத்துக்குள் வெளியேறினால், வெளியேறும் கட்டணம் 1% ஆகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஸ்மால்கேப் இண்டெக்ஸ் ஃபண்ட்

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘நிப்பான் இந்தியா நிஃப்டி ஸ்மால்கேப் 259 இண்டெக்ஸ் ஃபண்ட்’ (Nippon India Nifty Smallcap 250 Index Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம் ஆகியவை கிடையாது. இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது என்பதால் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

சந்தைக்கு புதுசு
சந்தைக்கு புதுசு

டெபிட் கார்டு இ.எம்.ஐ

ஃபெடரல் பேங்க் தனது வாடிக்கையாளர் களுக்காக பிரத்யேகமான டெபிட் கார்டு இ.எம்.ஐ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்மூலம் டெபிட் கார்டு பயன்படுத்தி இ.எம்.ஐ ஆப்ஷன் மூலமாக பைக் வாங்கிக்கொள்ளலாம். ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் டி.வி.எஸ் ஷோரூம்களில் இந்தக் கடன் திட்டம் செல்லுபடியாகும் என ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக 3 மாதம், 6 மாதம், 9 மாதம், 12 மாதம் என்ற நான்கு கால அளவுகளில், ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த டெபிட் கார்டு இ.எம்.ஐ திட்டத்தைப் பயன்படுத்தி ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஷோரூம் களில் பைக் வாங்கும்போது, 5% கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும் எனவும் ஃபெடரல் வங்கி தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்.ஐ.சி டெத் க்ளெய்ம்

கொரோனா பிரச்னையால், எல்.ஐ.சி வாடிக்கையாளர்கள் க்ளெய்ம் பெறுவதில் சிரமப்படக் கூடாது என மெயில் வழியாகவே க்ளெய்ம் செய்யத் தேவையான டாக்கு மென்டுகளை வாங்கிக்கொள்ளும் முறையை எல்.ஐ.சி ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததால், கொரோனா காலத்திலும் எல்.ஐ.சி க்ளெய்ம் விகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றால் மரணத்தைச் சந்தித்த 561 (Check numbers) பேருக்கான க்ளெய்ம் தொகை 26.7 கோடி ரூபாயை எல்.ஐ.சி நிறுவனம் வழங்கியிருக்கிறது.

ஃபிக்ஸட் டெபாசிட்

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் சேமிப்புக் காலம் 7 நாள்கள் முதல் 10 வருடம் வரை. சேமிக்கும் காலத்தைப் பொறுத்து, வட்டி விகிதம் மாறுபடும். தனது வாடிக்கையாளருக்கு 3.5% முதல் 7.5% வரை வட்டி விகிதத்தை இந்த வங்கி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% அதிகரித்து, 4% முதல் 8% வரை வட்டி வழங்குகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism