சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள முதலீட்டு, காப்பீட்டுத் திட்டங்கள் சில...

மல்ட்டி அஸெட் ஃபண்ட்!

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘நிப்பான் இந்தியா மல்ட்டி அஸெட் ஃபண்ட்’ என்ற (Nippon India Multi Asset Fund) புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓப்பன் எண்டடு வகையைச் சார்ந்த இந்த மியூச்சுவல் ஃபண்டில், குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், கமாடிட்டி டெரிவேட்டிவ்ஸ் மற்றும் கோல்டு இ.டி.எஃப் திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

முதலீடு பல்வேறு சொத்துகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் ஓரளவுக்குக் குறைவு.

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்!

மஹிந்திரா மனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘மஹிந்திரா மனுலைஃப்ல் ஆர்பிட்ரேஜ் யோஜனா’ (Mahindra Manulife Arbitrage Yojana) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டடு வகையைச் சார்ந்த இந்த மியூச்சுவல் ஃபண்டில், குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, கடன் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். இதில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆகஸ்ட் 25 முதல் மறுமுதலீடு ஆரம்பிக்கிறது. அப்போது என்.ஏ.வி மதிப்பு அடிப்படையில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இந்த ஃபண்டுக்கு ஈக்விட்டி ஃபண்டுக்கு உரிய வருமான வரிச் சலுகை கிடைக்கும். அதேநேரத்தில், அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டில் வரிக்குப் பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

‘ரீ-அஸ்யூர்’ ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

மேக்ஸ் புபா ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம், ‘ரீ-அஸ்யூர்’ என்ற வரம்பற்ற காப்பீட்டுத் தொகை கொண்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியை தனிநபர் பாலிசி அல்லது ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியாகவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலிசியில் ‘கோவிட் -19’ தொற்றுக்கான மருத்துவச் செலவுகளையும் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும். பாலிசி எடுத்திருப்பவர் முதல் ஆண்டில் க்ளெய்ம் எதுவும் செய்யாமல் இருந்தால், காப்பீட்டுத் தொகையில் 50% அதிகரிக்கும்படி பாலிசி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டிலும் க்ளெய்ம் செய்யவில்லை என்றால், மேலும் 50% அடுத்த ஆண்டில் அதிகரிக்கும். ஆக, இரண்டு ஆண்டுகளில் 100% காப்பீட்டுத் தொகை அதிகரித்திருக்கும். இதுபோன்ற பல சலுகைகள் இந்த பாலிசியில் இருக்கிறது.

அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு மூலமும் அரசு மானியம்!

பென்ஷன் மற்றும் சமையல் எரிவாயு மானியம் போன்ற அரசு உதவிகளைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் வங்கி சேமிப்புக் கணக்குடன், ஆதார் எண் இணைக்க வேண்டும். அதைப்போல, இனி அஞ்சக்ச் சேமிப்புக் கணக்குடனும் ஆதார் எண்ணை இணைத்தால், அந்தக் கணக்கு மூலம் மத்திய அரசின் மானியங்களைப் பெற முடியும். இதற்கான அறிவிப்பை மத்திய அஞ்சல் துறை, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அஞ்சல் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறது.

இதன்படி அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் புதிதாகக் கணக்குத் தொடங்குபவர்கள் தங்களின் ஆதார் எண்ணை அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் அவரவர்களின் அஞ்சலக கிளைகளுக்குச் சென்று, இதற்கான விண்ணப்பங் களைப் பூர்த்திசெய்து கொடுக்கலாம். இப்படிச் செய்யும்பட்சத்தில் அரசு மானியங்களை தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கு மூலமே பெற்றுக் கொள்ளலாம்.