அண்மையில் சந்தைக்கு வந்திருக்கும் புதிய திட்டங் களில் சிலவற்றைப் பார்ப்போம்.

என்.சி.டி வெளியீடு...

கொசமட்டம் ஃபைனான்ஸ் (Kosamattam Finance) நிறுவனம், என்.சி.டி (NCD) வெளியிடுகிறது. வருகிற 2021-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பம் செய்யலாம். இதன் முகமதிப்பு ரூ.1,000. குறைந்த பட்சம் 10 என்.சி.டி-க்களுக்கு அதாவது, ரூ10,000-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதன் முதிர்வுக்காலம் 400 நாள்கள், 30 மாதங்கள், 39 மாதங்கள், 48 மாதங்கள், 66 மாதங்கள் மற்றும் 84 மாதங்கள். ஆண்டுக்கு 9.25% முதல் 10.25% வரை வட்டி கிடைக்கும். விண்ணப்பத் தேதி முடிந்து, ஆறு வேலை நாள்களுக்குள் இந்த என்.சி.டி, பி.எஸ்.இ சந்தையில் பட்டியல் இடப்படும். வங்கிகள் தற்போது டெபாசிட்டுகளுக்கு 5-8% மட்டுமே வட்டி வழங்கி வருவதால், இந்தக் கடன் பத்திரத்துக்கு வழங்கும் வட்டி கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.

பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்’ (ICICI Prudential Business Cycle Fund) என்ற ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது. இது ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயி லிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு டிசம்பர் 29-ம் தேதியிலிருந்து ஜனவரி 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங் களில் முதலீடு செய்யப்படும். இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இது ரிஸ்க் உள்ள ஃபண்டு என்பதால், இளம் வயதினரும், ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களும் இதில் முதலீடு செய்யலாம்.

கனரா வங்கி: எஃப்.டி வட்டி அதிகரிப்பு

பொதுத்துறை வங்கியான கனரா வங்கி, தனது 2 முதல் 10 வருடங்களுக் கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. 2 முதல் 3 ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 5.40%; மூத்த குடிமக்களுக்கு 5.90%; 3 - 10 ஆண்டுகளுக்கான சேமிப்புக்கு 5.5%; மூத்த குடிமக்களுக்கு 6%. இது இரண்டு கோடி ரூபாய்க்கும் குறைவான பிக்ஸட் டெப்பாசிட் சேமிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வாட்ஸ்அப் இன்ஷூரன்ஸ்!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியா வில் மைக்ரோ இன்ஷூரன்ஸ் மற்றும் மைக்ரோ பென்ஷன் திட்டங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ஏற்கெனவே இந்தத் துறையில் காலூன்றியிருக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, எஸ்.பி.ஐ ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத் துடன் இணைந்து இன்ஷூரன்ஸ் திட்டங்களை வழங்கத் திட்டமிட்டு வருகிறது வாட்ஸ்-அப்.

அஸ்யூர்டு இன்கம் ப்ளஸ்

ஆதித்யா பிர்லா சன்லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள இந்த பாலிசியில் 30 ஆண்டுகள் வரை மாதாந்தர வருமானம் தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பங்குச் சந்தை முதலீடு சாரா பாலிசி ஆகும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை 6, 8 மற்றும் 12 ஆண்டுகள் என மூன்று ஆப்ஷன்களில் செலுத் தலாம். பாலிசிதாரர் பாலிசி காலத்துக்குள் இறந்தால், அவருடைய நாமினி 10 ஆண்டுகள் வரை வருடாந்தர / மாதாந்தர முறையில் வருமானத்தைப் பெறும் வசதி உண்டு.

குறிப்பு: இது புதிய முதலீடுகள், காப்பீடுகள் பற்றிய தகவல்களின் தொகுப்புதான். பரிந்துரை அல்ல. முதலீட்டாளர்கள் அவர்களின் தேவை, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப முதலீட்டு முடிவை யோசித்து எடுக்கலாம்!