Published:Updated:

சிக்கல் இல்லா நீண்டகால வருமானம்... கைகொடுக்கும் புதிய ஃபண்ட்!

சந்தைக்குப் புதுசு!

பிரீமியம் ஸ்டோரி

ற்போது புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் பாலிசிகள், பங்கு வெளியீடுகள், கடன் பத்திரங்கள் குறித்துப் பார்ப்போம்.

சிக்கல் இல்லா நீண்டகால வருமானம்... கைகொடுக்கும் புதிய ஃபண்ட்!

இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘ஆக்ஸிஸ் இ.எஸ்.ஜி ஈக்விட்டி ஃபண்ட்’ என்ற புதிய ஃபண்டை அறிமுகம் செய்திருக்கிறது. இது ஓப்பன் எண்டடு திட்டம். சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் (Ethical, Social and Governance) என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால மூலதன ஆதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டது இந்த ஃபண்ட். இதன் நிதி மேலாளர் ஜினேஷ் கோபானி. புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு பிப்ரவரி 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அவசர மருத்துவமனைச் செலவுக்கு உதவும் ஹெல்த் இ.எம்.ஐ கார்டுகள்

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் இணைந்து ஹெல்த் இ.எம்.ஐ கார்டை அறிமுகப்படுத்தியுள்ளன. ஏற்கெனவே பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தில் இணைந்திருப்பவர்கள் இந்த கார்டைப் பெற்று, மருத்துவமனைச் செலவுகளைச் சமாளிக்கலாம். மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.30,000 உள்ளவர்கள் இந்தக் கார்டைப் பெற முடியும். ஒருவர் அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை மருத்துவச் செலவுகளுக்கு இந்த கார்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்தத் தொகையை 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் இ.எம்.ஐ-களாக மாற்றிக்கொள்ள முடியும்.

அப்போலோ மருத்துவமனைகள் குழுவும் பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனமும் அனைத்து சுகாதார மற்றும் நோய் கண்டறியும் சேவைகளுக்கு 100% நிதி வழங்க ஏற்கெனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற அடிப்படையில் அமைந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஃபண்ட் இது!

பான் அட்டை, ஆதார் அட்டை, ரத்து செய்யப்பட்ட காசோலை மற்றும் முறையாகக் கையொப்பமிடப்பட்ட இ.சி.எஸ் ஆணை போன்ற கே.ஒய்.சி ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்த கார்டைப் பெறலாம். நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் சென்று அட்டைக்கு விண்ணப்பித்து பெறக்கூடிய வகையில் அனைத்து அப்போலோ மருத்துவமனைகளிலும் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்தைக்குப் புதுசு
சந்தைக்குப் புதுசு

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் - சீரிஸ் 87 - 1,174 நாள்கள் பிளான் பி’ (ICICI Prudential Fixed Maturity Plan - Series 87 - 1,174 Days Plan B) என்ற ஃபண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குளோஸ்டு எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்கள் மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்விதமாக இதன் போர்ட்ஃபோலியோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ரிஸ்க் அளவு குறைவு. எனவே, குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இந்த ஃபண்டை கவனிக்கலாம்.

சுந்தரம் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்!

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ‘சுந்தரம் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Sundaram Arbitrage Fund)’ ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய ஃபண்ட் வெளியீட்டுக்கு ஜனவரி 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்ச ஏற்ற இறக்கத்துடன் வருமானம் பார்க்கக்கூடிய ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்விதமாக இதன் போர்ட்ஃபோலியோ வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இந்த ஃபண்டைப் பரிசீலிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு