Published:Updated:

சந்தைக்குப் புதுசு : ரிஸ்க்குக்கு ஏற்ற புதிய ஃபண்டுகள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு

சுந்தரம் புளூசிப் ஃபண்ட் சராசரியைவிட அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், ரிஸ்க் எடுப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

சந்தைக்குப் புதுசு : ரிஸ்க்குக்கு ஏற்ற புதிய ஃபண்டுகள்! - முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

சுந்தரம் புளூசிப் ஃபண்ட் சராசரியைவிட அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், ரிஸ்க் எடுப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

Published:Updated:
சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
சந்தைக்குப் புதுசு
ண்மையில் சந்தையில் அறிமுகமான புதிய திட்டங்களில் சில...

ஆக்ஸிஸ் புதிய ஃபண்ட்!

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘ஆக்ஸிஸ் குளோபல் ஈக்விட்டி ஆல்பா ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Axis Global Equity Alpha Fund of Fund) என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு செப்டம்பர் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதில் திரட்டப்படும் நிதி, உலகளாவிய நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். உலக அளவில் ஈக்விட்டித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளரின் ரிஸ்க் குறையும்.

முதலீடு
முதலீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நுழைவுக் கட்டணம் இல்லை. 365 நாள்களுக்குள் வெளியேறினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் உண்டு. இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களும் இளம் வயதினரும் முதலீடு செய்யலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்வெஸ்கோ இந்தியா ஃபோகஸ்டு 20 ஈக்விட்டி ஃபண்ட்

இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘இன்வெஸ்கோ இந்தியா ஃபோகஸ்டு 20 ஈக்விட்டி ஃபண்ட்’ என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

முதலீடு
முதலீடு

இந்தப் புதிய வெளியீட்டுக்கு செப்டம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, மல்ட்டிகேப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். நுழைவுக் கட்டணம் இல்லை. 365 நாள்களுக்குள் வெளியேறினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம்.

குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் உண்டு. இந்த ஃபண்ட் சராசரியை விட அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுந்தரம் புளூசிப் - புதிய ஃபண்ட்!

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘சுந்தரம் புளூசிப் ஃபண்ட்’ என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

திரட்டப்படும் நிதி, லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டு்ள்ளது. நுழைவுக் கட்டணம் இல்லை. 365 நாள்களுக்குள் வெளியேறினால், 1% கட்டணம் வசூலிக்கப்படும். இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். குரோத் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் உண்டு. இந்த ஃபண்ட் சராசரியைவிட அதிக ரிஸ்க் கொண்டது என்பதால், ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

மிரே அஸெட் - புதிய ஃபண்ட்!

மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘மிரே அஸெட் ஈக்விட்டி அலொகேட்டர் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்’ என்ற புதிய ஃபண்டை வெளியிட்டிருக்கிறது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; இந்தப் புதிய வெளியீட்டுக்கு செப்டம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும்.

திரட்டப்படும் நிதி, இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். குரோத், டிவிடெண்ட் ஆப்ஸன் உண்டு. இந்த ஃபண்ட் சராசரி ரிஸ்க் கொண்டது என்பதால் அனைத்துப் பிரிவினரும் இதில் முதலீடு செய்யலாம்.

லைஃப் லிகோ!

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் களின் கூகுள் அஸிஸ்டென்ஸ் உதவியுடன், ‘ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் லிகோ’ என்ற சேட்பாட் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வசதியை, ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கை யாளர்கள் ஸ்மார்ட்போன் உதவியுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism