அண்மையில் சந்தையில் அறிமுகமான முதலீடு, காப்பீட்டுத் திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

போன்பே டேர்ம் இன்ஷூரன்ஸ்!

டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்களில் ஒன்றான ‘போன்பே’ நிறுவனம் ‘போன்பே டேர்ம் இன்ஷூரன்ஸ்’ என்ற பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியை ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது. 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். பாலிசி எடுப்பதற்கு ஒருவர் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட வேண்டும் என்பது கட்டாயம். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் ஒரு லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. இதற்கான குறைந்தபட்ச பிரீமியம் 149 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த பாலிசியை எடுக்க எந்தவொரு மருத்துவப் பரிசோதனையும் தேவை யில்லை என போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்பே ஆப்ளிகேஷன் மூலமாகவே இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்!

கோட்டக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘கோட்டக் நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்’ (Kotak NASDAQ 100 Fund of Fund) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம். இந்தப் புதிய வெளியீட்டுக்கு ஜனவரி 25-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். திரட்டப்படும் நிதி, சர்வதேச இ.டி.எஃப் முதலீட்டுத் திட்டங் களிலும், ஃபண்ட் சார்ந்த நாஸ்டாக் 100 இண்டெக்ஸ் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யப்படும். நுழைவுக் கட்டணம், வெளியேறும் கட்டணம் ஆகியவை கிடையாது.

இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் சராசரி ரிஸ்க் கொண்டது என்பதால், அனைத்து வயதினரும் இதில் முதலீடு செய்யலாம்.

பேலன்ஸ்டு ஃபண்ட்!

பி.ஜி.ஐ.எம் இந்தியா நிறுவனம் ‘பி.ஜி.ஐ.ம் இந்தியா பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்’ (PGIM India Balanced Advantage Fund) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஓப்பன் எண்டட் வகையைச் சேர்ந்தது; குறைந்தபட்சம் எஸ்.ஐ.பி முறையில் 1,000 ரூபாயிலிருந்து (முதல் 6 மாதங் களுக்கு) முதலீட்டை ஆரம்பிக்கலாம். மொத்த முதலீடாகக் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை ஆரம்பிக்க முடியும்.

இந்தப் புதிய வெளியீட்டுக்கு ஜனவரி 29-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். நுழைவுக் கட்டணம் கிடையாது. 90 நாள் களுக்குள் எடுத்தால், வெளியேறும் கட்டணம் உண்டு. இதில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் மூலம் முதலீடு செய்யலாம். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது சராசரி ரிஸ்க் கொண்டது என்பதால், இளம் வயதினர்களும், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்களும் முதலீடு செய்யலாம்.

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்!

மூத்த குடிமக்களுக்காக எஸ்.பி.ஐ விகேர் டெபாசிட், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் கோல்டன் இயர் எஃப்.டி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் சீனியர் சிட்டிசன் கேர் எஃப்.டி ஆகிய சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. இந்தத் திட்டங்களில், வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களைவிட 0.25-0.30% அதிகமாக வட்டி கிடைக்கும்!