Published:Updated:

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநோய்க்கும் க்ளெய்ம் பெற முடியும்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

இன்ஷூரன்ஸ்

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநோய்க்கும் க்ளெய்ம் பெற முடியும்!

இன்ஷூரன்ஸ்

Published:Updated:
ஹெல்த் இன்ஷூரன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்த் இன்ஷூரன்ஸ்

னந்த் நன்றாகப் படிப்பவன்; பெற்றோரின் மனம் கோணாமல் நடப்பவன். அவனுடைய அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். பணத்துக்குப் பஞ்சமில்லை. அவன் கேட்டதையெல்லாம் பெற்றோர் வாங்கிக் கொடுத்தார்கள்.

முனைவர் க.பாலசந்தர்
முனைவர் க.பாலசந்தர்

ஆனந்தின் பெற்றோர், வேறு மாநகரிலுள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் 11-ம் வகுப்பில் அவனைச் சேர்த்தார்கள். அவன், பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கிப் படித்துவந்தான். அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பாடம் நடத்துவார்கள். தினமும் பரீட்சை நடக்கும். அவனுக்கு ஓய்வு மற்றும் தூங்கும் நேரம் சுருங்கிப்போனது.

புதிய ஊர், புதிய பள்ளிக்கூடம், புதிய நண்பர்கள், ஆசிரியர்கள், புதிய கல்வி கற்றல் முறை, புதிய சூழல் எல்லாம் சேர்ந்து அவனுக்கு மனவேதனையைத் தந்தன. சொந்த ஊரிலேயே இருக்கும் பழைய பள்ளிக்கூடத்தில் மீண்டும் 11-ம் வகுப்பைத் தொடர விரும்பினான். அது குறித்து அப்பாவிடம் மன்றாடினான். `புதிய பள்ளிக்கூடத்தில் படித்தால்தான் உனக்கு மாநிலத்திலேயே சிறந்த கல்லூரியில் இடம் கிடைக்கும்’ என்று அவன் அப்பா சொல்லிவிட்டார்.

ஆனந்தின் விருப்பத்தை பெற்றோர் காதுகொடுத்துக் கேட்கவே இல்லை; அத்தோடு அவனைத் திட்டி அனுப்பினார்கள். புதிய பள்ளிக்கூடம் அவனுக்கு எந்தவிதத்திலும் ஒத்துப்போகவில்லை. மனதுக்குப் பிடித்த நண்பர்கள் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் தன் கஷ்டத்தை யாருடனும் பகர்ந்துகொள்ள முடியாமலிருந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநோய்க்கும் க்ளெய்ம் பெற முடியும்!

அந்த மனவேதனை அவனுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கியது. அவனுடைய விருப்பம் நிறைவேறாததால் மன அழுத்தம் அவனுக்குத் தீராத மனநோயை (Mental illness) ஏற்படுத்தியது. இதனால் படிப்பைத் தொடரமுடியாமல் போனதுடன், அவனுடைய எதிர்காலமே கேள்விக்குறியானது.

ஆனந்தைப்போல லட்சக்கணக்கான இளைஞர்கள் வெவ்வேறுவிதமான மனநோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாறுபட்ட உணர்வுகள்

வயது வித்தியாசம், ஆண்-பெண் பாகுபாடு, ஏழை-பணக்காரன் வேறுபாடு என்ற எந்தப் பாரபட்சமுமின்றி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மனநோய் ஏற்படலாம். மனிதர்களின் உணர்வுகள், குணம், எண்ணம், சிந்தித்துச் செயலாற்றும் தன்மை போன்றவற்றில் ஏற்படும் மாற்றம்தான் மனநோய். மனிதனுக்கு உடல்ரீதியாக நோய் உண்டாவதைப்போல, உணர்வுரீதியாக மனநோய் உண்டாகிறது.

தங்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏதாவது நடந்து அதன் காரணமாகக் கோபப்பட்டால், அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமம்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநோய்க்கும் க்ளெய்ம் பெற முடியும்!

மனநோயாளிகளின் மாறுபட்ட குணங்களின் காரணமாக, அவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் வீட்டிலிருந்து துரத்திவிடப்படுகிறார்கள். மனநோய் முற்றிப்போய் அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

அதிகரிக்கும் மனநோயாளிகள்

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, உலகம் முழுக்க 30 கோடிப் பேர் மனச்சோர்வுடன் (Depression) வாழ்கிறார்கள். 2030-ம் ஆண்டில், உலக மக்களை ஆட்கொள்ளும் மிகப்பெரிய நோயாக மனநலக் கோளாறு இருக்கும்’ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், `உலகில் 15 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களில் சுமார் 8 லட்சம் பேர் மனநல பாதிப்படைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்’ என்கிறது அந்த அறிக்கை. `சுமார் 6.5% இந்தியர்கள் தீவிர மனநோயால் அவதிப்படுகிறார்கள். உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக மனச்சோர்வு அடைந்தவர்கள் இருக்கிறார்கள்’ என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மனச்சோர்வு, மனநலக் கோளாறு ஏற்படுவதற்கு கம்பெனியில் கொடுக்கப்படும் கடினமான பணி இலக்கு, முரண்பட்ட பண்பையும் செயல்பாடுகளையும்கொண்ட உடன் பணிபுரிவோர், புதுவகையான நாள்பட்ட நோய்கள், கணவன் - மனைவி ஒற்றுமை இன்மை ஆகியவை காரணங்கள்.

உடலில் ஏற்படும் பிற நோய்களைப்போல மனநோயை குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வு இந்தியாவில் குறைவு. உடலில் ஏற்படும் மற்ற நோய்களைப் போல இதுவும் ஒரு வகை நோய் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதற்குப் போதுமான மருத்துவ உதவிகளும் சிகிச்சைக்களும் இருந்தாலும், குடும்பத்தின் மதிப்பு பாதிக்க்கப்படுமோ என்ற தயக்கத்தில் நோயாளிக்கு சிகிச்சையளிக்கத் தயங்குகிறார்கள். இதன் விளைவாக நோய் முற்றிப்போய் தீவிரம் அடைந்த பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் வருந்துகிறார்கள்.

மனநோய்க்கு க்ளெய்ம்

இந்தியாவில் ஆறு பேரில் ஒருவர் மனநோயால் பாதிப்படைந்திருப்பதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறதுது. பாதிப்படைந்தவர்களில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களே அதிகம். அவர்களில் சுமார் 70% பேர் இந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு முறையான மருத்துவ உதவியை நாடவில்லை என்பது வருந்தத்தக்க செய்தி. இந்த பாதிப்பின் வீரியத்தை உணர்ந்துகொண்ட மத்திய அரசு மனநலச் சட்டம், 2017-ஐக் கொண்டுவந்தது. இதன்படி, மனநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சையளித்து, நோயிலிருந்து முற்றிலும் குணமாக்குவதே இதன் குறிக்கோள்.

ஹெல்த் இன்ஷூரன்ஸ்... மனநோய்க்கும் க்ளெய்ம் பெற முடியும்!

`ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் ஒருவர் மனநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டால், அதற்கு க்ளெய்ம் கிடையாது’ என்பது சில வருடங்களுக்கு முன்னர் வரை நடைமுறையில் இருந்துவந்தது. இதிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து மாற்றங்களைக் கொண்டுவர இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (IRDAI) நினைத்தது. அதற்காக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. எல்லோரும் பயனடையும் வகையில் நல்ல முடிவை எடுக்கச் சொன்னது. அந்த நிபுணர் குழு ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின்படி, `மனநோய் சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடையாது’ என்ற நிலைமை மாற்றியமைக்கப்பட்டது.

இதன்படி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கிய பாலிசிதாரர் மற்ற நோய்கள் ஏற்பட்டால் க்ளெய்ம் பெறுவதைப்போல, மனநலக் கோளாறு சிகிச்சைக்கும் க்ளெய்ம் தொகையைக் கோரலாம். இது இன்ஷூரன்ஸ் துறையில் மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் உத்தரவை ஏற்று சில இன்ஷூரன்ஸ் கம்பெனிகள், `ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர் மனநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டாலும் க்ளெய்ம் பெறலாம்’ என்ற மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு லட்சம் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்று, பொதுத்துறை இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் சாதனை படைத்திருக்கின்றன.

தானோ, தன் குடும்பத்தில் யாராவது ஒருவரோ மனநோயால் பாதிக்கப்பட்டால் வெட்கப்படவோ, கூச்சப்படவோ வேண்டிய அவசியமில்லை.உடல்ரீதியான நோயைப்போல இது மனரீதியான நோய்...

சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, `மனநோய்க்கு க்ளெய்ம் பெறலாம்’ என்பது பெரும்பாலான பாலிசிதாரர்களுக்குத் தெரியவில்லை. இன்ஷூரன்ஸ் துறையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் புதிய மாற்றத்தால், மற்ற இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் மனநோய்க்கு க்ளெய்ம் கொடுக்க முன்வந்திருக்கின்றன.

இந்தப் புதிய மாற்றத்தைப் பொதுமக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்க வேண்டிய முக்கியமான இடத்தில் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன. தானோ, தன் குடும்பத்தில் யாராவது ஒருவரோ மனநோயால் பாதிக்கப்பட்டால் வெட்கப்படவோ, கூச்சப்படவோ வேண்டிய அவசியமில்லை. உடல்ரீதியான நோயைப்போல இது மனரீதியான நோய் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நோயை குணமாக்க கால அவகாசம் மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்புபவர், வாங்கும் குறிப்பிட்ட பாலிசியின் மூலம் மனநோய்க்கு க்ளெய்ம் கிடைக்குமா என்பதை கவனத்தில்கொள்ள வேண்டிய தருணம் இது.

முனைவர் க.பாலசந்தர்