Published:Updated:

இணையமும் தொழில்முனைவும்: போர்ட்டர் சொன்ன ஐந்து சக்தி மாடல்!

இணையதளத்தால் நிறுவனங்கள் எப்படி மாறும் என்பதை ஆராய மைக்கேல் போர்ட்டரின் இந்த ஐந்து சக்தி மாடலைப் பயன்படுத்தலாம். அவர் கூறும் ஐந்து சக்திகள்

தொழில்முனை
தொழில்முனை

''இன்டர்நெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் மட்டும் யாரும் லாப‌ம் பார்த்துவிட முடியாது. அதில் வெற்றி அடையும் நிறுவனங்கள் எவை என்றால், அதைத் தனியாகப் பார்க்காமல் தங்கள் பாரம்பர்யத் தொழிலுடன் சேர்த்து எப்படி வித்தியாசமாக, இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்று யோசிக்கும் நிறுவனங்கள்தான்'' என்கிறார் மேலாண்மைத் துறையில் உலகமே போற்றும் மைக்கேல் போர்ட்டர். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/353GMj9

தொழில் யுக்தியைப் (Business Strategy) பாடமாகப் படிக்கும் எம்.பி.ஏ மாணவர்களிடம் பிரபலமான ஒரு தலைப்பு, 'போர்ட்டரின் ஐந்து சக்தி மாடல்' (Porter's Five Forces Model). இந்த ஐந்து சக்தி மாடலை அடிப்படையாகவைத்து ஒரு தொழில்துறை அல்லது நிறுவனம் சந்திக்கும் போட்டி, அதன் வடிவம், பலம் மற்றும் பலவீனம் போன்றவற்றை கணித்து, அதற்கேற்ற யுக்தியைக் கையாளலாம்.

இணையதளத்தால் நிறுவனங்கள் எப்படி மாறும் என்பதை ஆராய மைக்கேல் போர்ட்டரின் இந்த ஐந்து சக்தி மாடலைப் பயன்படுத்தலாம். அவர் கூறும் ஐந்து சக்திகள் என்னென்ன என்று இனி பார்ப்போம்.

சப்ளையர்களின் பேரம் பேசும் திறன்: இணையதளத்தால் தரகர்கள் நீக்கப்பட்டு, சப்ளையர்கள் பல வாடிக்கையாளர்களை அணுகும் நிலை உருவாகும்.

1. புதுவருகைக்குத் தடை: இணையதளத்தால் பல புதுத் தொழில்கள் தொடங்குவது சுலபமாகிவிட்டது. கணினியும் இணைப்பும் போதும். ஆனால், பல போட்டியாளர்களைச் சந்திக்கும் நிலை உருவாகும்.

2. ஏற்கெனவே இருக்கும் நிறுவ‌னங்களின் போட்டி: இணையதளம் மூலம் அளிக்கும் சேவைகளை அதிகம் வேறுபடுத்த முடியாததால் போட்டி, விலையை நிர்ணயம் செய்வதிலேயே இருக்கும். விலை சரியும் நிலை உருவாகும்.

3. வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் திறன்: பொருள்களைப் பற்றிய தகவல்களை (விலை, தரம், அம்சங்கள், விற்பனைக்குப் பிறகான சேவை, பராமரிப்பு) அனைவரும் சுலபமாக அணுகும்படி இணையதளம் செய்துவிடுவதால், வாடிக்கையாளர்களால் அதிகம் பேரம் பேச முடியும்.

4. சப்ளையர்களின் பேரம் பேசும் திறன்: இணையதளத்தால் தரகர்கள் நீக்கப்பட்டு, சப்ளையர்கள் பல வாடிக்கையாளர்களை அணுகும் நிலை உருவாகும்.

5. மாற்றுப் பொருள்களின் அச்சுறுத்தல்: புது அணுகுமுறைகள் மற்றும் கண்டுபிடிப்புகளால் ஒரு பொருள் அல்லது சேவைக்கு மாற்றாகப் பல வழிகள் இருக்கும்.

இணையமும் தொழில்முனைவும்: போர்ட்டர் சொன்ன ஐந்து சக்தி மாடல்!

போர்ட்டரின் அணுகுமுறையின்படி பார்த்தால், இணையதளத்தின் மூலம் வரும் வாய்ப்புகளைவிட, அதனால் உருவாகும் போட்டியும் தாக்கமும்தான் அதிகம்.

ஒரு நிறுவனம் அளிக்கும் பொருளையோ சேவையையோ தனிப்படுத்திக் காட்ட வேண்டியது முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். அனைவரும் போன அதே பாதையில் சென்று, மிகச் சிறந்த நிறுவனமாக வளர்வதைவிட, தொலைநோக்குப்பார்வையுடன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பதே யுக்தி என்பதை இன்றைக்கு ஒவ்வொரு தொழில்முனைவோரும் கற்றுக்கொண்டு செயல்பட வேண்டிய பாலபாடமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

- Infosys Knowledge Institute தொழில்நுட்ப ஆலோசகர் சு.ராமச்சந்திரன் 'நாணயம் விகடன்' இதழில் எழுதும் ரீஸ்கில்லிங் பற்றிய தொடர் பகுதியை முழுமையாக வாசிக்க > திறன் பழகு, திறமை மேம்படுத்து! - இன்டர்நெட்டை வைத்து எப்படி ஜெயிக்கலாம்? https://www.vikatan.com/news/general-news/series-about-reskilling-19

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > 'ஈஸி - நியூஸி' மாதாந்திர பேக் ரூ.99 மட்டுமே. > சப்ஸ்க்ரைப் செய்ய> https://bit.ly/2KccySR