Published:Updated:

நிதித் திட்டமிடல்... புதிய உலகம்... புதிய விதிமுறைகள்..! - கோவிட் 19-க்குப் பிறகு..!

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வரும் காலங்களில் பாதுகாப்புடன் வைத்திருக்க அவசரகால நிதியை உருவாக்குங்கள்.

பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19, ஒரு மாறுபட்ட உலகை நமக்குக் காட்டியுள்ளது. இதன் காரணமாக நிதித் திட்டமிடுதல் என்பது புதிய விதிமுறைகளுடன் பார்க்கப்பட வேண்டியதாக மாறியுள்ளது.

`தொற்றுநோயின் கடுமையான தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் காலகட்டத்தில் வேலை இழப்புகள் அதிகம் இருக்கும்’ என்று இந்தியன் சொசைட்டி ஆஃப் லேபர் எகனாமிக்ஸ் மதிப்பிட்டுள்ளது. இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின்படி, மார்ச் மாதத்தில் 8.8 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் சராசரி வேலையின்மை விகிதம் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு சுமார் 24 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலை மாற சில காலம் ஆகலாம். வேலை இழப்புகளின் காரணமாகப் பல குடும்பங்களின் வருமானம் பாதியாகக் குறைந்துள்ளது. எனவே, ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வி.

நிதித் திட்டமிடல்... புதிய உலகம்... புதிய விதிமுறைகள்..! - கோவிட் 19-க்குப் பிறகு..!

உங்கள் பணப்புழக்கத்தை நிர்வகித்தல்

மாத பட்ஜெட் திட்டத்தை உருவாக்குவதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை. நாம் மேற்கொள்ளும் அனைத்துச் செலவுகளையும் கட்டுப்படுத்துவது நோக்கமல்ல. ஆனால், சில அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து, பாதுகாப்பு சார்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவே இந்த யோசனை.

தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதற்கு மாத பட்ஜெட்டை உருவாக்குங்கள். பணத்தை எளிதில் எடுத்து உபயோகிக்கக்கூடிய வகையில் வைத்திருப்பது உகந்ததாகத் தோன்றினாலும், நீண்டகாலத்துக்கு இது பயனளிக்காது. எனவே, அவசரத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவு மட்டும் பணத்தை எளிதில் எடுக்கும் நிலையில் வைத்திருங்கள். இல்லாவிட்டால், உங்கள் கையிலிருக்கும் பணம் கரைந்துபோக வாய்ப்புண்டு.

முதலீடுகளை நிர்வகித்தல்

நீங்கள் ஒரு பட்ஜெட்டை உருவாக்கிய பிறகு, குறுகியகாலப் பணப்புழக்கத்துக்கான வழிகளைக் கண்டறிய உங்கள் நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்வது அவசியம். ஆனால், உங்கள் சொத்துகளை விற்பது போன்ற திடீர் முடிவுகளைத் தவிர்க்கவும். பணத்துக்கு அவசியம் இருப்பதாகத் தெரிந்தால், பங்கு சார்ந்த முதலீடுகளுக்கு பதிலாக, வங்கி வைப்புநிதி அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை முதலில் பயன்படுத்தவும். `உயிர்வாழ நிதி தேவை’ எனும் அவசியம் ஏற்பட்டாலொழிய, உங்கள் ஓய்வுக்காலம் அல்லது பிள்ளைகளின் எதிர்காலத் திட்டமிடலுக்காக ஒதுக்கப்பட்ட சேமிப்பில் கைவைக்க வேண்டாம்.

நிதித் திட்டமிடல்... புதிய உலகம்... புதிய விதிமுறைகள்..! - கோவிட் 19-க்குப் பிறகு..!

கடனை நிர்வகித்தல்

வேலை இழப்பு அல்லது சம்பளக் குறைப்புடன் கவலை தரும் இன்னொரு விஷயம், உங்கள் வீடு, கார் மற்றும் பிற தனிப்பட்ட கடன்களுக்கு மாதத் தவணைகளைச் செலுத்துவது. இந்த மாதத் தவணையைக் கட்ட சிரமப்பட்டால், சில மாதங்களுக்கு மாதத் தவணையைக் கட்டாமல் இருக்க உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களுடன் பேசுங்கள்.

நிதித் திட்டமிடல்... புதிய உலகம்... புதிய விதிமுறைகள்..! - கோவிட் 19-க்குப் பிறகு..!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். காரணம், இது உங்கள் நிதி நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். உங்கள் அட்டையில் நிலுவைத் தொகை இருந்தால், அதற்கு அதிக வட்டியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அடுத்த 2-3 மாதங்களுக்குள் உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தைத் தயாரிக்கவும்.

நிலையிலாத்தன்மை உணர்த்தும் பாடம்..!

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வரும் காலங்களில் பாதுகாப்புடன்வைத்திருக்க அவசரகால நிதியை உருவாக்குங்கள். உங்கள் சேமிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஓய்வூதியம் போன்ற நீண்டகால இலக்குகள் சார்ந்து நிதியைச் சேமியுங்கள். வருமான இழப்பால், உங்கள் குடும்பம் பாதிக்கப்படாமலிருக்க ஆயுள் காப்பீடு (டேர்ம் பிளான்) மற்றும் மருத்துவக் காப்பீட்டைக் கட்டாயம் எடுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு