பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் (Equity Mutual Funds) முதலீடு செய்தால், பெரிய அளவில் வருமானம் பார்க்கலாம் என நினைத்துதான் எல்லோருமே முதலீடு செய்கிறார்கள். ஆனால், நம்மவர்களில் பெரும்பாலானோர் ஏன் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் லாபம் பார்க்கத் தவறிவிடுகிறார்கள் என்றால், அவர்கள் குறுகியகால முதலீட்டாளர்களாகவே இருப்பதுதான்.

2019 டிசம்பர் நிலவரப்படி, பங்கு சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களில் சுமார் 37 சதவிகிதத்தினர்தான் இரண்டு ஆண்டுகளுக்குமேல் முதலீட்டை எடுக்காமல் வைத்திருக்கிறார்கள். இது 2018-ம் ஆண்டு டிசம்பரில் 29.7 சதவிகிதமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் இது ஒரு வளர்ச்சி என்றே எடுத்துக்கொள்ளலாம்.ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களில் ஃபண்டுகளை 12 முதல் 24 மாதங்கள் வரை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 29.8 சதவிகிதமாக உள்ளது.

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் குறுகியகால முதலீடு என்பது எதிர்பார்க்கும் லாபத்தைப் பெற உதவாது!

கடன் சார்ந்த ஃபண்டுகளில் இரண்டு ஆண்டுகளுக்குமேல் முதலீட்டைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, 21.7 சதவிகிதமாக உள்ளது. இது, 2018-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2017-ம் ஆண்டு டிசம்பரில் முறையே 23.9% மற்றும் 24.9% என இருந்திருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்டில் நீண்டகாலத்தில் முதலீட்டை வைத்திருந்தால்தான் லாபம் கிடைக்கும்.