ஆனந்தவிகடன்’ வாசகர்களுக்கு வாரந்தோறும் ஒவ்வொரு விஷயத்தைப் பரிந்துரைக்கிறார்கள் பிரபலங்கள். இந்த வாரம் சொந்த வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்துப் பேசுகிறார் பி.மணிசங்கர், தலைவர் - ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்டு ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன்.

சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி வாழ்வது, சொர்க்கத்தில் வாழ்வதற்குச் சமம். ஆனால் இன்று, வீட்டைக் கட்டுவதைவிடக் கட்டிய வீட்டை வாங்குவதிலே எல்லோரது கவனமும் இருக்கிறது.

வீடு வாங்கும் திட்டத்தைச் செயல்படுத்து வதற்குமுன் உங்கள் பட்ஜெட்டைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். வீட்டுக்கடன் மூலம் வீட்டை வாங்குவதாக இருந்தால், உங்களது வீட்டுக்கடன் வசதிவாய்ப்புகளைத் தெரிந்துகொண்டு பட்ஜெட்டை முடிவுசெய்வது பலவிதமான நிதி நெருக்கடிகளைத் தவிர்க்க உதவும்.

எந்த இடத்தில் எந்த மாதிரி இட வசதிகளுடன் வீட்டை வாங்கப் போகிறீர்கள் என்பதைச் சரியாகத் திட்டமிட வேண்டும். பொதுவாக, எல்லோரும் தங்கள் அலுவலகத்துக்கு அருகில் அல்லது குழந்தைகளின் பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் வீடு வாங்குவதை விரும்புவார்கள். அப்படி முதலீடுசெய்யும்போது பொதுப் போக்குவரத்து, மருத்துவமனைகள், விற்பனை வளாகங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள் போன்ற அம்சங்கள் இருப்பதை உறுதிசெய்துகொண்டு வீடு வாங்குங்கள்.

வீடு வாங்குவதற்காகத் தேர்வு செய்யும் பில்டர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை முதலில் ஆராய்வது முக்கியம். வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு நேரில் சென்று, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அந்தப்பகுதி குறித்தும், நிலத்தடி நீர், மழைக்காலங்களில் அப்பகுதியின் நிலை, பேருந்து வசதி ஆகியவை குறித்து விசாரிப்பது அவசியம். மின்சார வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்துக்கான சாலை இணைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதி ஆகியவற்றையும் பார்க்க வேண்டும்.

நீங்கள் வாங்குவது அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தால், உட்புறச் சாலைகள், மொட்டை மாடி, திறந்தவெளி இன்னபிற வசதிகள், சங்கம் ஆரம்பிப்பது ஆகியவற்றின் உரிமை குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்வது நல்லது. தாய்ப்பத்திரம், பத்திரம், பட்டா போன்ற முக்கிய ஆவணங்களை ஒரு வழக்கறிஞர் மூலம் சரிபார்க்க வேண்டும். பொதுச் சுவர், நடைபாதை, பார்க்கிங் வசதிகள் போன்றவற்றில் வில்லங்கம் ஏதேனும் வந்துவிடாமல் ஒப்பந்தத்தில் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. மேலும், லிஃப்ட் வசதி, பார்க்கிங் வசதி இவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வதோடு இரண்டாம் தளம், மூன்றாம் தளம் என மேலே போகப் போக விலை குறைந்திருக்கிறதா, எவ்வளவு விலை வித்தியாசம் என்பதை அருகிலுள்ளவர்களிடம் விசாரித்துக்கொள்ள வேண்டும்.

வாங்கப்போகும் கட்டடத்தின் ஆயுள் எவ்வளவு, கட்டுமானத் தரம் எப்படி என்பதை அனுபவமுள்ள சிவில் இன்ஜினீயரிடம் கேட்டு ஆலோசனை பெறுவது நல்லது. கட்டடம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா, மனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளதா, அல்லது பொது இடம் மற்றும் சாலை கால்வாய்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறதா, கட்டப்பட்டிருக்கும் முழுப்பரப்புக்கும் குடிநீர், கழிவுநீர், மின் இணைப்புகள் ஆகியவை சரியாக இருக்கின்றனவா என்பவற்றைக் கட்டட வரைபடத்தைக் கொண்டு ஆய்வு செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்கப்போகும் வீடு, பழைய வீடாக இருந்தால், முறையாகப் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா, வில்லங்கம் ஏதேனும் (வி.சி) உள்ளதா, பத்திரப்பதிவு முறையாகச் செய்யப்படுகிறதா என்பவை முக்கியம். அபார்ட்மென்ட் வீடாக இருந்தால், ஃபிளாட் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ், விற்பனை ஒப்பந்தம், எத்தனை ஃபிளாட்டுகள் உள்ளன, அதில் நாம் குடியேறப்போவது எந்த ஃபிளாட், அதற்குரிய கடிதம், எந்த ஆண்டில் ஃபிளாட் கட்டப்பட்டது என்பவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நீதிமன்றம் ஆகியவற்றிடமிருந்து ஏதேனும் நோட்டீஸ் வீடு கட்டும் நிறுவனம் மீதோ, விற்கப்படும் வீடு, இடம், மற்றும் விற்பனையாளர் மீதோ நிலுவையில் உள்ளதா என்பதை ஆராய வேண்டும். கட்டு மானம் தொடர்பான அனைத்து ஆவணங்கள், காப்பீடுகள், கட்டுமானத் திட்டம் உள்ளிட்ட ஆவண ங்களைப் பெறுவதும் அவசியம். பழைய கட்டடத்தை கிரயம் செய்யும் முன் ஆட்சேபனை உள்ளதா என்று நாளிதழில் விளம்பரம் செய்வது நல்லது. பங்குதாரர்கள் மற்றும் பரம்பரைச் சொத்தாக இருக்கும்பட்சத்தில் நேரடி வாரிசுகள், மறைமுக வாரிசுகள் ஆகிய வாரிசுகளின் தன்மை குறித்தும் தீர விசாரித்துக்கொள்ளுங்கள்.

இப்படி, மேலே குறிப்பிட்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டு வீடு வாங்கத் திட்டமிட்டால், கனவு இல்லம் எந்த வில்லங்கமும் இல்லாமல் சீக்கிரமாகவே கைகூடும்.