Election bannerElection banner
Published:Updated:

`குறைந்தது 1 கிராம்; அதிகபட்சம் 4 கிலோ!’ - ரிசர்வ் வங்கியின் `Sovereign Gold Bond’

தங்கம்
தங்கம்

``இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 1 கிராம் தங்கம் அளவுக்காவது முதலீடு செய்திருக்க வேண்டும். திட்டத்துக்கான கால அளவானது எட்டு வருடங்கள் ஆகும்.”

Sovereign Gold Bond:

ரிசர்வ் வங்கியின் சாவ்ரன் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bond) திட்டத்தில் சந்தா செலுத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் ஜூலை 6 முதல் ஜூலை 10-ம் தேதி வரை சந்தா செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது நவம்பர் 2015-ல் தங்கத்தை அப்படியே வாங்குவதைக் குறைக்கும் நோக்கிலும், நிதி சேமிப்பை ஊக்கப்படுத்தவும் கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 1 கிராம் தங்கத்துக்கான விலையானது ரூபாய் 4,852 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தா காலம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன் கடைசி மூன்று பணி நாள்களில் 999 சுத்த தங்கம் என்ன விலையில் இருந்ததோ அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சாவ்ரேன் கோல்ட் பாண்ட் திட்டத்தில் இணையம் மூலம் விண்ணப்பித்து பணம் செலுத்துபவர்களுக்கு கூடுதலாக ரூபாய் 50 தள்ளுபடி செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இவ்வகை முதலீட்டாளர்களுக்கு 1 கிராமின் விலையானது ரூபாய் 4,802 ஆகவே இருக்கும்.

தங்கம்
தங்கம்

வங்கிகள் மூலமே விற்கப்படும்

இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 1 கிராம் தங்கம் அளவுக்காவது முதலீடு செய்திருக்க வேண்டும். திட்டத்துக்கான கால அளவானது எட்டு வருடங்கள் ஆகும். ஆனால், ஐந்து வருடங்களுக்குப் பிறகு வேண்டுமானால் வட்டி பணம் செலுத்தும் தேதியில் இத்திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம். இதில் இந்திய குடிமக்கள், ஹெச்யூஎஃப் நபர்கள், பல்கலைக்கழகங்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை பத்திரங்களை வாங்கலாம். தனி நபரும் ஹெச் யூஃப்பும் அதிகபட்சமாக 4 கிலோ வரையில் சந்தா செலுத்தலாம். இவர்களைத் தவிர பிற நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை சந்தா செலுத்தலாம். தங்கப் பத்திரங்களானது வங்கிகள் மூலமே விற்கப்படும். இவை சிறிய அளவிலான நிதி வங்கிகள், SHCIL, அஞ்சலகங்கள், பங்குச்சந்தைகள் ஆகியவற்றில் விற்கப்படாது.

இதற்கு முன் ஜூன் 8 முதல் 12 வரையில் சந்தா தொகையானது ஒரு கிராம் தங்கத்துக்கு ரூபாய் 4 ,677 ஆக இருந்தது. கடந்த ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து ஆறு கட்டமாக செப்டம்பர் வரை தங்க பத்திரங்கள் விற்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

``கையில தங்கம் இருந்தா வெயிட் பண்ணலாம்; ஆனா என்கிட்ட?!''- `காக்டெய்ல்', `டேனி' ஓ.டி.டி ரிலீஸ் ஏன்?!

இன்றைய தங்க விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தை இங்கே அறிந்துகொள்ளவும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு