Published:Updated:

சந்தைக்கு புதுசு : ரிசர்வ் வங்கியின் சேமிப்புப் பத்திரம்! - உங்களுக்கு ஏற்றதா..?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

இந்தச் சேமிப்புப் பத்திரத்தில் இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் முதலீடு செய்யலாம்.

சந்தைக்கு புதுசு : ரிசர்வ் வங்கியின் சேமிப்புப் பத்திரம்! - உங்களுக்கு ஏற்றதா..?

இந்தச் சேமிப்புப் பத்திரத்தில் இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் முதலீடு செய்யலாம்.

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு
சந்தையில் புதிதாக வெளியாகும் திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் சேமிப்புப் பத்திரம்

மத்திய அரசு 2020-ம் ஆண்டுக்கான ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்துடன்கூடிய சேமிப்புப் பத்திரங்களை (Floating Rate Savings Bonds, 2020) வெளியிட்டுள்ளது. இவற்றில் ஜூலை 1-ம் தேதி முதல் முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதம் 7.15% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம், `ஒவ்வோர் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும்’ என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முதலீடு
முதலீடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே, ஆர்.பி.ஐ சேமிப்பு பாண்டுகளுக்கு ஆண்டுக்கு 7.75% வட்டி வழங்கப்பட்டது. அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, புதுத் திட்டம் குறைந்த வட்டியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மேலும், வட்டியானது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜூலை 1-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். கூட்டுவட்டியாக முதிர்வின்போது தரப்படாது. இந்த வட்டி வருமானத்துக்கு ஒருவரின் அடிப்படை வருமான வரம்புக்கேற்ப வரி விதிக்கப்படும்.

இந்தச் சேமிப்புப் பத்திரத்தில் இந்தியர்கள், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் முதலீடு செய்யலாம். வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்) முதலீடு செய்ய முடியாது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சேமிப்புப் பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான எந்த உச்சவரம்பும் இல்லை. குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். 1,000 ரூபாயின் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஏழு வருடங்களுக்குப் பிறகே இந்த முதலீடு திரும்பக் கிடைக்கும். மூத்த குடிமக்கள் முன்கூட்டியே பணத்தை எடுப்பதற்கான வசதி உள்ளது. வட்டி வருமானத்துக்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும்.

இந்தச் சேமிப்புப் பத்திரங்களில் ரொக்கப் பணமாக 20,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். பிற பணம் செலுத்தும் வகைகளின் (காசோலை / வரைவோலை / இணையம் மூலம் பணம் செலுத்துதல்) மூலம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

முதலீடு
முதலீடு

இந்தச் சேமிப்புப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களை எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் பெறலாம். இந்தப் பத்திரங்களை இரண்டாம் நிலைச் சந்தையில் வர்த்தகம் செய்ய முடியாது. மேலும், இவற்றை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் கடன்களில் பெறப்படும் கடன்களுக்கு ஜாமீனாகப் பயன்படுத்த இயலாது.

சேமிப்புப் பத்திரங்களை வைத்திருப்பவர் மட்டுமே தனது இறப்புக்குப் பிறகு கணக்குகளைக் கையாள்வதற்கான நபரை நியமனம் செய்ய முடியும். இந்தப் பத்திரம் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுவதால், முதலீட்டிலுள்ள ரிஸ்க் அளவு குறைவு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்!

ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஹெச்.எஸ்.பி.சி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் (HSBC Focused Equity Fund) என்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓப்பன் எண்டடு வகையைச் சேர்ந்த இதில் குறைந்தபட்சம் ரூ.5,000-லிருந்து முதலீட்டை ஆரம்பிக்கலாம்.

ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.நுழைவுக் கட்டணம் இல்லை. இந்தத் திட்டத்தில், ஓராண்டுக்குள் வெளியேற நினைத்தால் 1% வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்டில் ரிஸ்க் இருக்கும் என்பதால், அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள் மற்றும் இளம் வயதினர் முதலீடு செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism