முதலீட்டாளர்களால் மறக்க முடியாத நாள் 2020 ஏப்ரல் 23-ம் தேதி. அன்றுதான் ஆறு கடன் சார்ந்த ஃபண்டுகளுக்கு திடீரென மூடுவிழா நடத்தப்பட்டது. அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் நிறைய.

அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் மற்றும் ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ஆகியவற்றில் கிரெடிட் ரிஸ்க் அதிகமாக இருப்பது தெரியவந்தது. ஃபண்ட் பெயரைப் பார்த்து முதலீடு செய்வது அவ்வளவாக ரிஸ்க் விஷயத்தில் பலனளிக்கவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்ய செபி அமைப்பு அதிரடியாகப் புதிய மாற்றத்தை 2021-ம் ஜனவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

ரிஸ்க்கோ மீட்டர் 3.0 ஏன்?

கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறைவாக உள்ளது. காலப்போக்கில் திட்டத்தின் நிதி மேலாளர் செய்யும் மாற்றங்களால் ரிஸ்க் மிகவும் அதிகரிக்கிறது. இந்த வகையான மாற்றங்கள் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குத் தெரிய வருவதில்லை. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்த சில காலத்துக்குப் பின், அந்தத் திட்டங்களில் எதிர்பார்த்ததைவிட அதிக ரிஸ்க் இருப்பது தெரிய வருகிறது. இது பெரும்பாலும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல ஆகிவிடுகிறது. இதனால் மிகப்பெரிய நஷ்டத்தை முதலீட்டாளர்கள் அடைய நேரிடுகிறது. இதுபோன்ற ரிஸ்க் நிலை தற்போதுள்ள ரிஸ்க்கோ மீட்டரில் தெளிவாகத் தெரிவதில்லை என்பது ஒரு குறையாகவே இருக்கிறது.

தற்போதைய ரிஸ்க்கோ மீட்டரில் உள்ள அடுத்த குறை, ரிஸ்க்கோ மீட்டரில் உட்பிரிவு பங்குச் சந்தை சார்ந்தது, கடன் சந்தை சார்ந்தது மற்றும் கலப்பின ஃபண்ட் என்ற அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. எனவே, முதலீட்டாளர் களுக்கு எல்லாக் கடன் ஃபண்டுகளும் குறைந்த ரிஸ்க் உடையவை என்ற மேம்போக்கான எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. பங்குச் சார்ந்த ஃபண்டுகளில் குறைந்த ரிஸ்க் கொண்ட ஃபண்டுகளும் உள்ளன. கடன் ஃபண்ட் திட்டங்களில் அதிகமான ரிஸ்க் திட்டங்களும் உள்ளன என்பதை இப்போது எல்லோரும் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பழைய ரிஸ்க்கோ மீட்டரில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, புதிய மாற்றங்களுடன் புதிய ரிஸ்க்கோ மீட்டரைக் கொண்டு வருகிறது செபி.

ஆறு பிரிவுகள்

தற்போது இருக்கும் ரிஸ்க்கோ மீட்டரில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இனிவரும் காலத்தில் இது ஆறு பிரிவுகளாக மாறுகின்றன. புதிய பிரிவு மிக அதிக ரிஸ்க் என்பதை எடுத்துச் சொல்வதாகும். ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள ரிஸ்க்கை அறிய புதிய அளவுகோல் மிக விரிவாக அறிமுகபடுத்தப்படுகிறது. இனி ஒவ்வொரு ஃபண்டிலும், அதில் திரட்டப்பட்ட நிதி முதலீடு செய்யப்பட்டிருக்கும் கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளைப் பொறுத்து அதன் ரிஸ்க் அளவீடு குறிக்கப்படும். அவ்வாறு குறிக்கப்பட்ட அளவீடு அனைத்தையும் அந்தத் திட்டத்தில் உள்ள கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளின் விகிதாசார மதிப்புக்கு ஏற்றவாறு ஈடுசெய்து, முடிவாக ஃபண்டின் ரிஸ்க் அளவை சொல்லும் குறியீட்டு எண் கணக்கிடப்படும். இது, குறைவாக இருந்தால், அந்த ஃபண்டின் ரிஸ்க் குறைவு. அதிகமாக இருந்தால் அந்த ஃபண்டின் ரிஸ்க் அதிகம்.

இந்த மாற்றத்தால் ஃபண்டுகளின் வெளிப்படைத்தன்மை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

ரிஸ்க் அளவீடு முறை

கடன் பத்திரங்களில் ரிஸ்க்கை மூன்று வகைகளில் அளவீடும் முறை உள்ளன.

1. கிரெடிட் ரிஸ்க் - அளவீடு 1-14

அரசு கடன் பத்திரம் 1-யும், முதலீடு செய்யத் தகுதி இல்லாத கடன் பத்திரம் 14-யும் குறிக்கும்.

2. வட்டி விகித ரிஸ்க் (Interest rate risk)

மெக்காலே டியூரேஷன் < 0.5 - 1 வருடம்

மெக்காலே டியூரேஷன் > 4 - 6 வருடம்

3. லிக்யுட்டி ரிஸ்க் அளவீடு (Liquidity risk)

1 – 14

நிறுவனப் பங்குகளில் ரிஸ்க் அளவீடு முறையானது, பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு (Market capitalisation) அடிப்படையில் செய்யப்படுகிறது.

மிகப் பெரிய நிறுவனங்கள் (Large cap) - அளவீடு 5; சிறிய நிறுவனங்கள் (Small cap) - அளவீடு 9. மிட்கேப் நிறுவனங்கள் (Mid cap) - அளவீடு 7.

பங்குகளின் விலை ஏற்ற இறக்கங்கள் (Volatility) - தினசரி ஏற்ற இறக்கங்கள் < 1% - அளவீடு 5 ; தினசரி ஏற்ற இறக்கங்கள் >1% - அளவீடு 6

இம்பாக்ட் விலை - லிக்யுட்டி ரிஸ்க் அளவீடு (Impact Cost)

பங்குகள் வாங்கவோ, விற்கவோ செய்ய முயலும்போது, பங்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, சந்தையில் அதற்கு இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு அதற்கு ஆகும் செலவின் அடிப்படையிலும் அளவீடு மாறும். உதாரணமாக, சராசரி இம்பாக்ட் விலை அந்த மாதத்தில் < 1% - அளவீடு 5, சராசரி இம்பாக்ட் விலை அந்த மாதத்தில் > 2% - அளவீடு 9.

எனவே, ஒவ்வொரு திட்டத்திலும் முடிவான ரிஸ்க் அளவீடு குறியீட்டு எண் மாதம்தோறும் முதலீட்டாளர்களுக்குத் தெரியப்படுத்தப்படும். வருட முடிவில் ரிஸ்க் அளவீடு குறியீட்டு எண் எவ்வாறு மாறிவந்தது என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்கும்.

புதிய ரிஸ்க்கோ மீட்டரின் பயன்கள்

வேல்யூ ரிசர்ச் ஆன்லைன், மார்னிங் ஸ்டார் போன்ற ஃபண்ட் வலைதளங்கள் ரிஸ்க் வகைகளை அதிகம், நடுத்தரம், குறைவு (High, medium, Low) என்ற வகையில் இதுவரை பிரித்து வந்தன. இந்த வகையில் நடுத்தரம் என்ற பிரிவில் இரண்டு திட்டங்கள் இருந்தால், இவற்றில் எதில் ரிஸ்க் அதிகம், எதில் குறைவு என்று அறிந்துகொள்வது கடினம். செபி இப்போது செய்துள்ள மாற்றத்தால் ஒரே வகையான இரு ஃபண்டுகளில் ரிஸ்க் அளவீட்டு எண்ணை வைத்து எதில் ரிஸ்க் அதிகம், எதில் குறைவு என்பதை மிக எளிதாக நாம் அறிந்து கொள்ள முடியும்.

இனி நீங்களே முடிவு செய்யலாம்

நாம் ஒரு ஃபண்டில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் அளவீடு 4 என்றிருந்து, பின்னர் ஒரு வருடம் கழித்துப் பார்க்கும்போது, ஃபண்ட் மேலாளர் செய்த முதலீட்டு மாற்றத்தால் ரிஸ்க் அளவீடு 8 என்று ஆகியிருந்தால், நாம் அதை அறிந்து, அந்தத் திட்டத்தில் தொடர்ந்து இருக்கலாமா அல்லது வெளியேறலாமா என்று முடிவு செய்யலாம்.

முடிவாக, இந்த மாற்றத்தால் ஃபண்டுகளின் வெளிப் படைத்தன்மை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாற்றங்களைக் கொண்டுவந்த செபி அமைப்புக்கு முதலீட்டாளர்கள் அனைவரும் நன்றி சொல்லத்தான் வேண்டும்.