இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை சுமார் ரூ.26 லட்சம் கோடியை நிர்வகித்து வருகிறது. இவற்றில், கடன் பத்திரங்களை நிர்வாகம் செய்வதில் கடந்த ஒரு வருடமாகப் பல பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். கடந்த செப்டம்பரில் ஐ.எல் & எஃப்.எஸ் (IL&FS) பிரச்னையில் ஆரம்பித்து, இன்று டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) பிரச்னை வரை கடன் ஃபண்டுகள் சந்தித்துவரும் பிரச்னைகள் பலப்பல. இந்தச் சூழ்நிலையில், கடன் ஃபண்டுகள் நிர்வாகம் குறித்த புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது செபி. அந்தப் புதிய விதிமுறைகளையும் அதனால் ஏற்படவிருக்கும் தாக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

1. லிக்விட் ஃபண்டுகளில் கையிருப்புப் பணம்

புதிய விதிமுறை: லிக்விட் ஃபண்டுகளில் கையிருப்புப் பணம் 20% இருக்க வேண்டும். பணமாகவோ அல்லது எளிதில் பணமாக மாற்றக்கூடிய அரசுப் பத்திரங்களிலோ 20% முதலீடு இருக்க வேண்டும். தற்சமயம் பல லிக்விட் திட்டங்களில் இந்தக் கையிருப்புத் தொகை 20 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளன.

தாக்கம்: லிக்விட் ஃபண்ட் திட்டத்திலிருந்து முதலீட்டாளர்கள் எளிதில் வெளியேற இந்த மாற்றம் உதவி செய்கிறது. கடன் ஃபண்டுகளின் முதலீடு வாராக்கடன்களில் இருக்கும்போது, அந்த முதலீட்டைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும்போது கடன் ஃபண்டுகளின் முதலீட்டாளர்களுக்கு உடனே பணம் பெற முடியாத சூழ்நிலை உருவாவதை இது ஓரளவு தடுக்கும். கையிருப்புத் தொகை அதிகமாவதால், லிக்விட் ஃபண்ட்மூலம் கிடைக்கும் வருமானம் சற்று குறையும்.

2. துறை சார்ந்த கடன் பத்திர முதலீடுகள்...

புதிய விதிமுறை: துறை சார்ந்த கடன் பத்திர முதலீடு 25 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. உதாரணமாக, முன்னர் ஒரே துறையில் கடன் பத்திர முதலீடு 25% இருக்கலாம். கடந்த ஒரு வருடமாக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வீட்டுக் கடன் வசதி நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிடமிருந்து கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் சிக்கலைச் சந்தித்து வருகின்றன. ஆகவே, ஒரே துறையில் அதிக கடன் பத்திர முதலீட்டைத் தடுக்க, ஒரே துறையில் கடன் பத்திர முதலீடு 20 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.

தாக்கம் : கடன் சார்ந்த முதலீடுகள் பரவலாக்கப் படுகிறது; ஒரே துறையில் முதலீடுகள் குறைக்கப் படுகிறது. குறிப்பிட்ட துறை மூலம் வரும் பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

3. கடன் ஃபண்டுகளின் என்.ஏ.வி

புதிய விதிமுறை: தற்போது எல்லாக் கடன் பத்திர முதலீடு களும் சந்தை விலையில் மட்டுமே என்.ஏ.வி கணக்கிடப் பட வேண்டும் என்று மாற்றப் பட்டுள்ளது.

தாக்கம் : இதனால் லிக்விட் திட்டங்களின் என்.ஏ.வி மதிப்பு நேர்கோட்டில் செல் லாமல் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். முன்னர், லிக்விட் திட்டத்திலுள்ள கடன் பத்திர முதலீடு வாராக்கடனாக மாறி விட்டால் அல்லது அதன் சந்தை விலை பாதிக்கப்பட்டால் அதன் என்.ஏ.வி சில சமயம் பாதிக்கப்படுவதில்லை. இந்த நிலை மாறி, கடன் பத்திரங் களின் சந்தை விலை மாறி னாலும் லிக்விட் திட்டங் களின் என்.ஏ.வி பாதிப்புக்குள் ளாகும். இதுவே சரியான முறை என்று கருதப்படுகிறது.

4. ஓவர்நைட் ஃபண்டுகளில் ‘நோ’

புதிய விதிமுறை: கட்டமைக்கப்பட்ட (structured) கடன் பத்திர முதலீடு அதாவது, நிறுவனங்கள் கடன் கொடுக்கும்போது, கடன் பெறுபவர் களிடமிருந்து, அதற்குப் பிணையாக (collateral) நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வகையான பிணைகளின் மதிப்பும் பெறப்பட்ட முறையும் அவ்வப்போது விவாதத்திற்கு உள்ளாகிறது. தற்சமயம் இதுபோன்று மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த கடன்கள் சில வாராக்கடனாக மாறும் சூழல் உருவாகிவருகிறது. லிக்விட் ஃபண்ட் மற்றும் ஓவர்நைட் திட்டங்கள், ஃபண்ட் திட்டங்களிலேயே மிக ரிஸ்க் குறைந்த திட்டமாகும் எனவே, லிக்விட் ஃபண்ட், மற்றும் ஓவர்நைட் ஃபண்டுகள் கட்டமைக்கப்பட்ட கடன் பத்திர முதலீடுகள் செய்யக்கூடாது.

தாக்கம்: லிக்விட் ஃபண்ட், ஓவர்நைட் ஃபண்டு களின் ரிஸ்க் குறைகிறது. இது இந்த வகை ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதம்.

ஃபண்ட் நிறுவனங்கள் கடனுக்குப் பிணையாகப் பெறும்போது தற்போது இரண்டு மடங்கு பிணைகளைப் பெற்றுக்கொள்கிறது. வருங்காலங்களில் இந்தத் தொகை, நான்கு மடங்காக இருக்கவேண்டும்!

5. லிக்விட் ஃபண்டுகளுக்கு வெளியேறும் கட்டணம்

புதிய விதிமுறை: இதுநாள் வரை லிக்விட் ஃபண்டுகளில் வெளியேற கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. இனி வரும் காலங்களில் ஏழு நாள் களுக்குள் லிக்விட் ஃபண்டை விட்டு வெளியேறினால் வெளியேறும் கட்டணமாக சிறு தொகையைக் கட்டவேண்டும்

தாக்கம்: இப்போது ஏழு நாள்களுக்குள் வெளியேறும் போது நாம் வெளியேறும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏழு நாள்களுக்குள் முதலீடு செய்து, பின் கட்டணம் செலுத்தி பணம் திரும்பப் பெறும்போது வருமானம் சற்று குறையக்கூடும். எனவே, ஏழு நாள்களுக்கு குறைந்து, முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஓவர்நைட் ஃபண்டுகளில் முதலீடு செய் வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

6. முதலீட்டுப் பத்திரங்களைச் சந்தையில் பட்டியலிட வேண்டும்

புதிய விதிமுறை: கடன் ஃபண்டுகள், நிறுவன பத்திரங்களில் முதலீடு செய்யும்போது சந்தையில் பட்டியலிடப் பட்ட, சந்தையில் விற்க / வாங்க முடிந்த கடன் பத்திர முதலீடுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டை விட்டு வெளியேற நினைக்கும்போது சந்தையில் விற்றுவிட்டு, எளிதாக வெளியேற முடியும். தனிப் பட்ட, பட்டியலிடப்படாத பத்திர முதலீடுகளில் முதலீடு செய்யும்போது, முதலீட்டுப் பணத்தைப் பெற்று, எளிதாக வெளியேற முடிவதில்லை. ஆனால், பட்டியலிடப்பட்ட பத்திரங்களை விற்பதும் வாங்குவதும் எளிது.

தாக்கம்: பங்குச் சந்தையில் முதலீட்டு பத்திரங் களைப் பட்டியலிட நிபந்தனைகள் உள்ளன. இதனால் கூடுதல் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.

7. கடன் பத்திரங்களில் பிணை ஈடு நான்கு மடங்கு

புதிய விதிமுறை: ஃபண்ட் நிறுவனங்கள் கடன் கொடுத்து அதற்குப் பிணையாகப் பெறும்போது தற்போது இரண்டு மடங்கு பிணைகளைப் பெற்றுக் கொள்கிறது. வருங்காலங்களில் இந்தத் தொகை, நான்கு மடங்காக இருக்கவேண்டும். உதாரணமாக, ஃபண்ட் நிறுவனம் ஒன்று, சுமார் ரூ.100 கோடியை ஒரு நிறுவனத்திற்குக் கடன் கொடுக்கும்போது அதற்குப் பிணையாக ரூ.200 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பெற்றுக் கொள்கிறது. இனிவரும் காலத்தில் ரூ.100 கோடி கடன் கொடுக்கும்போது ரூ.400 கோடிக்கு மதிப்புவாய்ந்த பங்குகளைப் பிணையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தாக்கம்: மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ரிஸ்க் குறைகிறது. அதேசமயம், நிறுவனங்களிடம் ஃபண்டுகள் கடன் கொடுக்கும் வாய்ப்பு குறைகிறது. ஏனெனில், கடன் வாங்கும் நிறுவனம் நான்கு மடங்கு பிணை கொடுக்கச் சிரமப்படும் என்ற எண்ணமும் நிலவுகிறது.

முடிவாக, இந்த மாற்றங்களால் கடன் பத்திர முதலீடுகளில் ரிஸ்க் ஓரளவு குறைகிறது. ரிஸ்க் குறையும்போது வருமானமும் குறையும். கடன் ஃபண்டுகளில் வரும் லாப விகிதம் சற்று குறைய லாம். இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது அந்த ஃபண்டுகள் எந்த நிறுவனத்திற்குக் கடன் தந்்துள்ளன என்ற விவரத்தை நன்குப் பரிசீலித்து அதன்பின் முதலீடு செய்வது நல்லது.