Published:Updated:

செபியின் புதிய விதிமுறை... முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா? - என்ன செய்ய வேண்டும்?

செபியின் இந்த அறிவிப்பைப் பார்த்து உடனடியாக எந்தப் பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்!

பிரீமியம் ஸ்டோரி
ண்மையில் செபி அமைப்பு, மல்ட்டிகேப் ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதியை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்த விதிமுறையை மாற்றி அமைத்திருக்கிறது. இதற்குமுன் மல்ட்டிகேப் ஃபண்டில் லார்ஜ் கேப், மிட்கேப், மிட்கேப் & ஸ்மால்கேப் பங்குளில் 65% தொகையைப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும் என்று இருந்தது. எந்தப் பங்கு பிரிவில் எவ்வளவு எனக் குறிப்பிடவில்லை என்பதால், லார்ஜ்கேப் பங்குகளில் அதிக முதலீடு செய்யப்பட்டது.
செபியின் புதிய விதிமுறை... முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா? - என்ன செய்ய வேண்டும்?

செபியின் புதிய விதிமுறை...

இப்போது செபியின் புதிய விதிமுறைப்படி, குறைந்தபட்சம் தலா 25% லார்ஜ்கேப், மிட்கேப், மிட்கேப் & ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, இந்த மூன்று பிரிவுகள் மொத்தம் 75% முதலீடு செய்ய வேண்டும். புதிய விதிமுறையை 2021 ஜனவரி 31-ம் தேதிக்குள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

செபியின் புதிய விதிமுறை... முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா? - என்ன செய்ய வேண்டும்?

சில ஆண்டுகளுக்கு முன் செபி, அனைத்து ஃபண்டுகளின் வகைகளை மாற்றியமைத்தபோது, விதிமுறையைப் பின்பற்ற அதிக எண்ணிக்கையில் மிட்கேப் & ஸ்மால்கேப் பங்குகள் விற்கப்பட்டன. இதனால், மிட்கேப் & ஸ்மால்கேப் பங்குகள் அதிகம் முதலீடு செய்யப்பட்டிருந்த ஃபண்டுகளின் வருமானம் குறைந்துபோனது.

மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள், ஃபண்டுகள்!

இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. தற்போது மிட்கேப் & ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்படும் சூழ்நிலை செபியின் புது அறிவிப்பால் உருவாகியிருக்கிறது. தற்போது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மல்ட்டிகேப் ஃபண்டுகள் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை சுமார் ரூ.1,40,000 கோடியாக இருக்கிறது. பெரும்பாலான மல்ட்டிகேப் ஃபண்டுகளில் லார்ஜ்கேப் பங்குகளில்தான் அதிகமாக முதலீடு செய்யப் பட்டிருந்தது. அதாவது, 2020 ஆகஸ்ட் நிலவரப்படி, மல்ட்டிகேப் ஃபண்டுகளில் ஒட்டுமொத்தமாக, 68% லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மிட்கேப் பங்குகளில் 16%, ஸ்மால்கேப் பங்குகளில் 9% முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 7% தொகை ரொக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது.

பங்குகள்
பங்குகள்

செபியின் இந்த நடவடிக்கையால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டால், இல்லை என்றே சொல்லலாம். ‘‘செபியின் இந்த அறிவிப்பைப் பார்த்து உடனடியாக எந்தப் பெரிய முடிவையும் எடுக்க வேண்டாம்’’ என்று சொல்லியிருக்கிறார் கோடக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா.

‘‘செபியின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மல்ட்டிகேப் என்று சொல்லும்போது, எல்லா வகையான சந்தை மதிப்பிலும் உள்ள பங்குகளிலும் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று செபி சொல்வது சரிதான். எல்லா வகையான ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக வேல்யூவேஷன் குறைவாக பங்குகளில் முதலீடு செய்ய முடியாது’’ என்று நிலேஷ் ஷா சொல்லி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையில் அடுத்த சில வாரங்களில் தெளிவு பிறந்துவிடும். அதுவரை நாம் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு