Published:Updated:

விலை குறைவாக இருக்கும்போது வாங்குங்கள்! - முதலீட்டில் லாபம் பெறுங்கள்..!

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

தங்கம் விலை குறைவாக இருந்தபோது வாங்காமல், இப்போது வாங்க நினைப்பது சரியல்ல!

விலை குறைவாக இருக்கும்போது வாங்குங்கள்! - முதலீட்டில் லாபம் பெறுங்கள்..!

தங்கம் விலை குறைவாக இருந்தபோது வாங்காமல், இப்போது வாங்க நினைப்பது சரியல்ல!

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்
னவரி-மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில், நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஈர்த்த முதலீட்டுத் தொகை ரூ.30,703 கோடி.

அதே நேரத்தில், கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த அடுத்த காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்), இத்தகைய திட்டங்கள் 11,710 கோடி ரூபாயை மட்டுமே முதலீடாகப் பெற்றிருக்கின்றன. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட 60% குறைவு.

விலை குறைவாக இருக்கும்போது வாங்குங்கள்! - முதலீட்டில் லாபம் பெறுங்கள்..!

இந்தக் குறிப்பிட்ட காலத்தில் முதலீடுகள் சரிந்ததற்கு முக்கியக் காரணம், கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு நடவடிக்கைதான். இந்தக் காலத்தில் நிறுவனங்களின் வருமானம் குறையும் என்பதால், பலரும் ஏற்கெனவே செய்திருந்த முதலீட்டிலிருந்து குறைந்த லாபம் அல்லது சிறு நஷ்டத்துடன் வெளியேறினர்.

இப்படி வெளியேறியவர்களுக்கு வாரன் பஃபெட் சொன்னது தெரிந்திருக்கலாம். ‘‘முதலீட்டாளர்கள் அனைவரும் பயத்துடன் பங்குகளை விற்கும்போது, நான் அவசரப்படுவதில்லை. அதற்கு பதிலாக அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை நிதானமாக ஆராய்ந்து, அவற்றின் எதிர்கால வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகத் தோன்றினால், அந்தப் பங்குகளில் மேலும் முதலீடு செய்வேன்” என்று சொன்னது நினைவிருக்கலாம். ஆனாலும், பங்குச் சந்தையில் இறக்கம் என்று வரும்போது, அனைத்து முதலீட்டு விதிமுறைகளையும் மறந்துவிட்டு, எல்லா முதலீட்டுத் திட்டங்களிலிருந்தும் உடனே வெளியேறிவிடுகிறார்கள். சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தை உயர்ந்த பிறகு, மறுபடியும் முதலீடு செய்ய உள்ளே வருகிறார்கள். இதுபோல முதலீடுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதால், எந்த முதலீடும் அவர்களுக்கு நல்ல வருமானத்தைப் பெற்றுத் தருவதில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலீடுகளின் மூலம் வருமானம் ஈட்ட, முதலில் எந்தவிதமான முதலீட்டுச் சந்தையின் இறக்கமும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வாய்ப்புகளையும் லாபத்தையும் தரும்; அவை பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். இதைப் புரிந்துகொள்வதன் மூலம் உங்கள் முதலீடு எவ்வளவுதான் சரிவைச் சந்தித்தாலும், அவசரம்கொள்ளாமல் ஆராய்ந்து முடிவெடுப்பதில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது தெரியும்.

விலை குறைவாக இருக்கும்போது வாங்குங்கள்! - முதலீட்டில் லாபம் பெறுங்கள்..!

முதலீட்டைப் பொறுத்தவரை, இறக்கமும் சரிவுகளும் ஏன் கவனிக்கத்தக்கவை என்பதையும், அந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டின் மேலான பலன்களையும் சில உதாரணங்கள் மூலம் காணலாம்.

உதாரணம் 1: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. மார்ச் 23-ம் தேதி அன்று அதன் 52 வாரக் குறைந்த விலையான ரூ.875-க்கு வர்த்தகமானது. அதற்கடுத்த சில நாள்களில், அந்த நிறுவனத்தின் முக்கிய புரொமோட்டரான முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி, தங்கள் முதலீட்டை அதிகப்படுத்திக்கொண்டனர்.

அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் ஃபேஸ்புக், சில்வர் லேக், இன்டெல், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க, அந்தப் பங்கின் விலை வேகமாக உயரத் தொடங்கி, ரூ.2,198 வரை உயர்ந்து, பலரையும் ஆச்சர்யப்படவைத்தது.

உதாரணம் 2: நெஸ்லே இந்தியா பங்கின் விலை 2015-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.6,500-க்கு மேல் வர்த்தகமானது. அப்போது ஏற்பட்ட மேகி நூடுல்ஸ் பிரச்னையில், அந்தப் பங்கின் விலை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.5,000 என்ற அளவில் வர்த்தகமானது அந்தப் பங்கு. அந்த நேரத்தில் பல சிறு முதலீட்டாளர்கள் அந்தப் பங்கை விற்று வெளியேறினார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் வேகமான திருத்த நடவடிக்கைகளால் வாடிக்கையாளர் களின் மனதில் மீண்டும் இடம்பிடித்து விற்பனையை அதிகரித்து, லாபத்தையும் பெருக்கியது. இப்போது அந்தப் பங்கு 18,000 ரூபாய்க்கு மேல்.

உதாரணம் 3: மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் திட்டம் 23 ஜூலை, 2010 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டம் லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் வகையைச் சேர்ந்தது. ரூ.9,200 கோடி முதலீட்டை நிர்வகித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் 9 லட்சம் முதலீட்டாளர்கள் வரை முதலீடு செய்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை ஆண்டுக்குச் சராசரியாக 18% வருமானம் தந்துள்ளது. அதாவது, ஃபண்ட் ஆரம்பித்தது முதல், மாதம் 5,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்திருந்தால், மொத்தம் ரூ.6 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அது ரூ.16 லட்சமாகப் பெருகியிருக்கும். ஆனால், இந்தத் திட்டத்தில், தொடர்ந்து முதலீடு செய்து 10 வருட வருமானமான 18% லாபம் கண்டவர்கள் வெறும் 911 பேர் மட்டுமே.

தங்கம்
தங்கம்

உதாரணம் 4: செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்ய சில முதலீட்டாளர்கள் விரும்புவதுண்டு. அதிலும் சிலர், குறிப்பாக பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புவார்கள். கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு ஜனவரி வரை, இந்த வகை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், எதிர்பார்த்த வருமானத்தைத் தரவில்லை. அதிகபட்சமாக ஒற்றை இலக்க வருமானத்தையே தந்தன. எடுத்துக்காட்டாக, நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் திட்டத்தில் 2015-ம் ஆண்டு ஜூலை முதல் மாதம் 5,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆரம்பித்து, 2020 ஜனவரியில் வெளியேறியிருந்தால், வருடாந்தர வருமானமாக 4.72% கிடைத்திருக்கும். அதாவது, ரூ.2,70,000 ரூபாயை முதலீடு செய்து, 3,00,664 ரூபாயை மொத்தத் தொகையாகப் பெற்றிருப்போம். அதற்கு பதிலாக, இதே திட்டத்தில் ஜூலை 2020 வரை முதலீட்டைத் தொடர்ந்திருந்தால், வருடாந்தர வருமானமாக 12.81% அதாவது, ரூ.4,13,701 கிடைத்திருக்கும்.

இந்த உதாரணங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரே முக்கியமான விஷயம் இருக்கிறது... சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதும், பங்குச் சந்தையின் ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களில் தொடர் முதலீடு செய்வதும், தேவைப்படும் சமயங்களில் முதலீட்டை அதிகரிப்பதும் நீண்டகால முதலீட்டாளரின் முக்கியப் பணி என்பதுதான் அது.

பங்குகளிலும், மியூச்சுவல் ஃபண்டுகளிலும் மட்டுமல்ல, தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தாலும் இதுதான் அடிப்படை விதி. தங்கத்தின் விலை குறைந்தபோதெல்லாம், விலை இன்னும் சற்றுக் குறையட்டும் என்று இருந்துவிட்டு, இப்போது அதன் உச்ச விலையைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் போது அதைத் துரத்திக்கொண்டு ஓடுவது முறையல்ல. அதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியிலும் சிறிது சிறிதாகத் தங்கத்தை வாங்கிச் சேர்த்துவைக்கப் பழகியிருந்தால், இப்போதைய விலை ஏற்றம், நம் தங்க முதலீட்டுக்கு ஒரு நல்ல மதிப்பைத் தந்திருக்கும். அதேபோல்தான் ரியல் எஸ்டேட் துறையும். இப்போது அதன் விலை இறங்கியிருக்கிறது. அடுத்துவரும் காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரிய வளர்ச்சியடையும். விலை இன்னும் குறையட்டும் என்று காத்திருக்காமல், நல்ல இடங்களை இனங்கண்டு அவற்றில் முதலீடு செய்வதே சரியான முடிவாக இருக்கும்.

சரிவுகளிலும் இறக்கங்களிலும் நாம் மிகக் கவனமாக, நிதானமாக நடந்துகொண்டால், முதலீட்டின் மூலம் நாம் நல்லதொரு லாபத்தை நிச்சயம் பார்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!