உங்கள் முன்னே மூன்று கிண்ணங்களில் நீர் இருக்கிறது. ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான வெந்நீர்; இரண்டாவது கிண்ணத்தில் குளிர்ந்த நீர்; மூன்றாவது கிண்ணத்தில் அறை வெப்பநிலையிலுள்ள நீர்.

இப்போது சில நிமிடங்களுக்கு குளிர்ந்த நீரில் உங்களின் ஒரு கையை விடுகிறீர்கள். மற்றொரு கையை வெந்நீரில் விடுகிறீர்கள். அடுத்து, இரு கைகளையும் அறை வெப்பநிலையிலுள்ள நீரில் விடுகிறீர்கள். வெந்நீரில் இருந்த கைக்கு அது குளிர்ச்சியாகவும், குளிர்ந்த நீரிலிருந்த கைக்கு அது இதமாகவும் இருப்பதை உணர்கிறீர்கள். ஆனால், மூன்றாவது கிண்ணத்திலிருந்த நீரின் வெப்பநிலை ஒன்றுதான். ஆனால், அது நம் புலனுக்கு வேறுபட்டதாகத் தெரிகிறது. இது போன்றதுதான் பங்குச் சந்தை முதலீட்டில் நீண்டகாலத்துக்கும் குறுகியகாலத்துக்கும் இடையே உள்ள தொடர்பு.

மாறிப்போன கடந்தகால வரலாறு

பங்குச் சந்தை முதலீடு என்பது நீண்டகால முதலீடு. `இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தோராயமாக 12 முதல் 15 சதவிகிதமாக இருக்கும்’ என்று சொன்னது கடந்தகால வரலாறு. ஆனால், அந்த விவரம் இப்போது அடியோடு மாறிவிட்டது.

ஈக்விட்டி என்பது குறுகியகாலத்தைப் பொறுத்தவரை, மிக விரைவாக மாறக்கூடிய சொத்துப் பிரிவைச் சார்ந்ததாக இருக்கிறது. அதாவது, குறுகியகாலத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான நேரங்களில் வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருக்கும்.

பங்குச் சந்தை மூலம் ‘12-15% வருமானம் கிடைக்கும்’ என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம்; `7-8% இருந்தாலும் நிச்சயமான வருமானம் வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு இன்னொரு பக்கம். இந்த நிலையில், பங்குச் சந்தையில் முதலீடு செய்த குறுகியகாலத்தில் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கணக்கிடும்போது, உங்கள் மனதில் பலவிதமான எண்ணங்கள் வந்து செல்லும். அவை...

ஏமாற்றம்: `ஃபிக்ஸட் டெபாசிட் வருவாயைவிடக் குறைவாகக் கிடைக்கிறதே! எஃப்.டி-யில் முதலீடு செய்திருந்தாலே எனக்கு நல்ல வருவாய் கிடைத்திருக்குமே...’ என்று நினைக்கத் தோன்றும்!

கவலை: 10% வரை இழப்பு என்பது நமக்குக் கெட்ட செய்தியாகவே இருக்கும். அது நம் வயிற்றுக்குள் ஏதோ செய்யும். `பங்குச் சந்தை இன்னும் வீழ்ச்சியடையவே செய்யும்’ என்று நம்மை நினைக்க வைக்கும்!

வருத்தம்: 10 முதல் 20% வரை நமக்கு இழப்பு ஏற்படும்போது, ‘நான் நினைத்தது சரி. இன்னும் முன்னதாகவே என்னுடைய பங்குகளை விற்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல்விட்டது தவறுதான்’ என்று நினைக்க வைக்கும்.

அச்சம்: இழப்பு தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே போவது. இதனால், `உடனடியாகப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற வேண்டும். சூழ்நிலை தெளிவடைந்த பிறகு மீண்டும் வரலாம்’ என்று நினைக்க வைக்கும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, நம் எதிர்பார்ப்பு நீண்டகாலத்துக்கானதாக அமையவில்லை. நம்முடைய குறுகியகால அனுபவம், பங்குச் சந்தையிலிருந்து நம்மை வெளியேற்றுவதாக இருக்கிறது. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட, முதலில் ஆறு மாதங்களுக்கான எதிர்பார்ப்புடன் உங்கள் முதலீட்டைத் தொடங்குங்கள். ஆறு மாதங்கள் என்பது ஒரு நல்ல தொடக்கப்புள்ளியாக இருக்கும். அது மிக நீண்டதாகவோ, மிகக் குறுகியதாகவோ இருக்காது. இப்போது நீங்கள் இரண்டு விஷயங்களுக்குக் காரணியாக இருக்க வேண்டும்.

இயல்பான ஏற்ற இறக்கம்

இயல்பான ஏற்ற இறக்கம் என்பதை ஆறு மாத வருவாயாக நான் வரையறுப்பேன். இது, 95% கடந்தகால நிகழ்வுகளின் உச்சத்துடன் வெளியேறியதாக உள்ளது. வரலாற்று அடிப்படையில், கடந்த 29 ஆண்டுகளில் (1991 முதல் தற்போது 2019 வரை) ஆறுமாத வருவாய் வரம்பு, மைனஸ் 27 முதல் 61% வரை இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் இது எங்கே சென்று முடியும் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாலும் இந்த ஏற்ற இறக்கம் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இயல்பான விஷயமாகவே கருதப்படும்.

மோசமான பின்னடைவுகள்

எனினும், கடந்த காலத்தில் சில மோசமான பின்னடைவுகளும் நிகழவே செய்திருக்கின்றன. உதாரணமாக, சப்பிரைம் கிரைசிஸ் (2008), நிஃடி 50 மைனஸ் 60% அளவுக்குச் சந்தை சரிந்தது. ஆனால், இழப்பைச் சரிசெய்ய 150% ஏற்றம் தேவைப்பட்டது.

2000-2001-ம் ஆண்டு காலகட்டத்தில் டாட்காம் நிறுவனங்கள் சிக்கலைச் சந்தித்தபோது, நிஃப்டி 50% குறைந்தது. ஆனால், இழப்பைச் சரிசெய்ய 100% ஏற்றம் தேவைப்பட்டது. ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் ஈக்விட்டி போர்ட்ஃபோலியோ 50-60% அளவுக்குக் குறைகிறது. இதை எதிர்கொள்ளும் மனநிலை நமக்கு இருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களிடம் 50 லட்ச ரூபாய் இருக்கிறது. அதை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள். கடந்தகாலத்தின்படி பார்த்தால், `நீண்டகாலத்தில் குறைந்தபட்சம் 12 - 15% வருமானம் கிடைக்க வேண்டும்’ என நினைக்கிறீர்கள். ஆனால், ரூ.50 லட்சத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, அடுத்த ஆறு மாதங்களில் அது ரூ.36 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது.

2008-ம் ஆண்டு நிகழ்ந்ததுபோன்ற ஒரு மோசமான பின்னடைவைப் பங்குச் சந்தை சந்தித்தால், 60% வரையிலான இழப்பை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். அப்போது நீங்கள் செய்த முதலீடு ரூ.50 லட்சம், வெறும் ரூ.20 லட்சமாக இருக்கும்.

யாருக்கு நீண்டகாலம்?

பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, குறுகியகால அதீத ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்கும் திறன் ஒரு முதலீட்டாளருக்கு இருந்தால் மட்டுமே அவர் நீண்டகாலத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். குறுகியகாலத்தில் ஏற்படும் இழப்பை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதென்றால், கடன் சார்ந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.

நீண்டகாலம் மற்றும் குறுகியகாலத்தில் பங்குகளில் முதலீடு செய்யும்போது, அது ஓர் இனிய அனுபவமாக இருக்க, சரியான எதிர்பார்ப்புகளை முதலில் வரையறை செய்துகொள்வது அவசியம். இந்த வரையறையே நமக்கு ஏமாற்றத்தைத் தராத முதலீட்டை மேற்கொள்ள நல்லதொரு தொடக்கப்புள்ளியாக அமையும்.

தமிழில்: மரியா ஆண்டானியோ பிரிஸிகா