Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு... பான் கார்டு இல்லாமல் செய்ய முடியுமா? - எஸ்.ஐ.பி குறித்த கேள்விகள், பதில்கள்

எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஐ.பி முதலீடு

FAQ

எஸ்.ஐ.பி முதலீடு... பான் கார்டு இல்லாமல் செய்ய முடியுமா? - எஸ்.ஐ.பி குறித்த கேள்விகள், பதில்கள்

FAQ

Published:Updated:
எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
எஸ்.ஐ.பி முதலீடு
ஸ்.ஐ.பி - அதாவது, சிஸ்ட மேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்ற முதலீட்டு முறையின்மூலம் இன்றைக்குப் பலரும் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். இந்த முதலீட்டு முறை குறித்து பலருக்கும் பலவிதமான கேள்விகள் இருக்கவே செய்கிறது. எஸ்.ஐ.பி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்வி களுக்கான பதில்கள் இனி...

எஸ்.ஐ.பி என்பது முதலீட்டுத் திட்டமா?

“சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் (SIP – Systematic Investment Plan) அதாவது, எஸ்.ஐ.பி என்பது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் ஒரு முறை (Method) ஆகும். சிலர், எஸ்.ஐ.பி என்பதை ஒரு முதலீட்டுத் திட்டம் / ஃபண்ட் என நினைக்கிறார்கள். அது தவறு. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், ஆர்.டி போல் தொடர்ந்து முதலீடு செய்யும் ஒரு முறைதான் எஸ்.ஐ.பி குறுகிய காலம் / நடுத்தரக் காலம் / நீண்டகாலத் தேவைகள் என அனைத்துக் காலகட்டத்துக்கும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம்.”

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் மட்டும்தான் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியுமா?

“கடன் ஃபண்டுகள், ஹைபிரிட் ஃபண்டுகள், ஈக்விட்டி ஃபண்டுகள் என அனைத்து வகை ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி முறையின்மூலம் முதலீடு செய்யலாம்.”

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய, ஆரம்பிக்க பொருத்தமான நேரம் எது?

“அப்படி எதுவும் இல்லை. எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்க நேரம், காலம் பார்க்க தேவை இல்லை. மொத்தமாக முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாதவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த எஸ்.ஐ.பி முறை. வேலைக்குச் சேர்ந்து முதல் மாதத்தில் கிடைக்கும் சம்பளத்திலிருந்து எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.’’

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், முதலீட்டின் மதிப்பு குறையுமா?

“கடன் ஃபண்டுகளில் யூனிட்டுகள் என்.ஏ.வி (நிகர சொத்து மதிப்பு) பெரிதாக மாற்றம் இருக்காது. பொதுவாக, ஏறுமுகத்தில்தான் இருக்கும். ஆனால், ஹைபிரிட் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப யூனிட்டுகளின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஒருவர் முதலீடு செய்துவரும் காலத்தில் ஃபண்டின் யூனிட் என்.ஏ.வி குறைவாக இருந்தால், கூடுதல் லாபம். அந்த வகையில், பங்குச் சந்தை சரிவால் என்.ஏ.வி மதிப்பு குறைந்துபோனால் கவலைகொள்ளத் தேவையில்லை. என்.ஏ.வி குறைவாக இருந்தால், அதிக யூனிட்டுகள் ஒதுக்கப்படும். இதை ‘ருபி காஸ்ட் ஆவரேஜ்’ என்பார்கள். அதாவது, சராசரியாகக் குறைந்த என்.ஏ.வியில் அதிக யூனிட்டுகள் கிடைக்கும் என்பதால், இது குறித்து கவலைப்படத் தேவை இல்லை.”

மாதம்தோறும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு நேரில் சென்று பணம் செலுத்த வேண்டுமா?

“அவசியம் இல்லை. இ.சி.எஸ். (ECS - Electronic Clearing Service) முறையில் ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளப்படும். குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் முதலீட்டுக்கான பணத்தை வைத்திருப்பது உங்கள் கடமை.’’

ஹசன் அலி  நிதி ஆலோசகர், Siptiger.com
ஹசன் அலி  நிதி ஆலோசகர், Siptiger.com

எஸ்.ஐ.பி முதலீட்டு முறையின் முக்கிய நன்மைகள் எவை?

“ஈக்விட்டி, ஹைபிரிட் ஃபண்டுகளில் தொடர் முதலீடு, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டி, சராசரியாக வளர்ந்து, நீண்டகாலத்தில் நமது செல்வம் பெருக உதவுகிறது. கடன் ஃபண்டுகளில் செய்யப்படும் தொடர் முதலீடு, கூடுதல் வருமானம் கிடைக்க உதவுகிறது.”

மாதத்தின் எந்தத் தேதியையும் எஸ்.ஐ.பி தேதியாகத் தேர்வு செய்ய முடியுமா?

“முடியும். பொதுவாக 5, 10, 15 என்பதுபோல் எஸ்.ஐ.பி தேதி இருக்கும். உங்கள் சம்பளத் தேதியிலிருந்து சில தினங்கள் கழித்து எஸ்.ஐ.பி தேதி இருப்பது நல்லது.”

எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் தினசரி முதலீடு செய்ய முடியுமா?

“தாராளமாக முடியும். பல நிறுவனங்கள் இந்த வசதியை வைத்திருக்கின்றன. எஸ்.ஐ.பி முறையில் தினசரி, வாரம் ஒரு முறை, 15 நாள்களுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை, காலாண்டுக்கு ஒரு முறை என நீங்கள் கால அளவைத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை மற்றும் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் நிறுவனங்கள், ஃபண்ட் வகை களைப் பொறுத்து மாறும். தினசரி எஸ்.ஐ.பி எனில், தினம் ரூ.300 முதலீடு செய்ய வேண்டும்.”

எஸ்.ஐ.பி முறையில் குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

“நிறுவனம் மற்றும் திட்டத்துக்கு ஏற்ப ரூ.100, ரூ.250, ரூ.500, ரூ.1,000 என உள்ளது.’’

விண்ணப்பப் படிவத்தில் ஒரு எஸ்.ஐ.பி தேதி குறிப்பிட்டுவிட்டு, பிற்பாடு அதை மாற்ற முடியும்?

“விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் எந்தத் தேதியையும் ‘டிக்’ செய்யவில்லை எனில், ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி எஸ்.ஐ.பி தேதியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.”

எஸ்.ஐ.பி முறையில் எவ்வளவு காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்?

“இந்த முறையில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கி விட்டால், அது நீங்கள் விரும்பும் காலம் வரைக்கும் தொடரும். முதலீட்டை ஆரம்பிக்கும் தேதி மற்றும் அதை முடிக்கும் தேதியை நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அல்லது பெர்பீச்சுவல் (perpetual) என்னும் காலவரையற்ற முடிவு தேதி யையும் தேர்வு செய்யலாம்.”

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரும்போது இடையில் கூடுதலாக முதலீடு செய்ய முடியுமா?

“முடியும். நல்ல ஃபண்ட், ஆனால், சந்தையின் இறக்கத்தால் என்.ஏ.வி மதிப்பு மிக அதிகமாகக் குறைந்திருந்தால், உங்களால் முடியும்பட்சத்தில் எஸ்.ஐ.பி முதலீடு தவிர கூடுதலாக முதலீடு (Additional Investment) செய்து வரலாம். இந்தக் கூடுதல் முதலீடு ரூ.1,000 அல்லது ரூ.5,000 என்பதாக ஃபண்ட் மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.”

எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியுமா?

“ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் எஸ்.ஐ.பி தொகையை அதிகரித் துக்கொள்ள முடியும். இதை ‘எஸ்.ஐ.பி டாப்அப்’ என்பார்கள். எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்கும்போதே, எவ்வளவு நாளைக்கு ஒரு முறை எத்தனை சதவிகிதம் அல்லது எவ்வளவு தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.”

எஸ்.ஐ.பி முதலீடு
எஸ்.ஐ.பி முதலீடு

எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில் எத்தனை வகைகள் உள்ளன?

“ஃபிக்ஸட் எஸ்.ஐ.பி (Fixed SIP), நிரந்தர எஸ்.ஐ.பி (perpetual SIP), டாப்அப் எஸ்.ஐ.பி (Top Up SIP), ஃபிளெக்ஸி எஸ்.ஐ.பி (Flexi SIP), பவர் எஸ்.ஐ.பி (power SIP), இன்ஷூர் எஸ்.ஐ.பி (Insure SIP) எனப் பல வகைகள் உள்ளன.ஃபிக்ஸட் எஸ்.ஐ.பி-ல் முதலீட்டுத் தொகை கடைசி வரைக்கும் ஒன்றுபோல் இருக்கும். நிரந்தர எஸ்.ஐ.பி-யில் நீங்கள் முதலீட்டை நிறுத்தும்வரைக்கும் அது தொடரும். குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டை அதிகரிப்பது டாப்அப் எஸ்.ஐ.பி ஆகும். பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கேற்ப முதலீட்டுத் தொகை மாறுபடுவது ஃபிளெக்ஸி எஸ்.ஐ.பி எனப்படும்.’’

எஸ்.ஐ.பி முதலீட்டை இடையில் நிறுத்த முடியுமா?

“முடியும். 3 - 6 மாதத்துக்கு தற்காலிகமாகக்கூட நிறுத்தி வைக்க முடியும். எஸ்.ஐ.பி–யை நிறுத்தும் முடிவை எடுத்துவிட்டால், ஒரு மாதம் / 20 நாள் களுக்கு முன்னரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்கு அதற்கென உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். இல்லையெனில், நீங்கள் கடிதம் அனுப்பிய ஒரு மாதக் காலத்துக்குப் பிறகுதான் நிறுத்தும் சூழ்நிலை உருவாகும்.”

பான் கார்டு இல்லாமல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியுமா?

“பான் கார்டு இல்லாமல் ஓர் ஆண்டில் அதிகபட்சம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.50,000 முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பணத்தை எடுக்கும்போது பான் கார்டு எண் கொடுக்க வேண்டி வரும். எனவே, பான் கார்டு, ஆதார் கார்டைக் குறிப்பிட்டு முதலீடு செய்வது நல்லது. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த மைக்ரோ எஸ்.ஐ.பி-யை ஆதரிப்பதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.”

எஸ்.ஐ.பி தேதியை இடையில் மாற்ற முடியுமா?

“மாற்ற முடியாது. தற்போதுள்ள எஸ்.ஐ.பி–யை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஒன்றை ஆரம்பிப்பதுதான் தீர்வு.”

எஸ்.ஐ.பி முடிவுக் காலத்துக்கு முன் இடையில் பணம் எடுக்க முடியுமா?

“எடுத்துக்கொள்ளலாம். லாக்இன் பிரீயட் உள்ள வரிச் சேமிப்பு ஃபண்டில் மட்டும் இடையில் பணத்தை எடுக்க முடியாது.”

பிட்ஸ்

டாடா நிறுவனத்தில் சைரஸ் மிஸ்த்ரிக்குச் சொந்தமான சொத்து மதிப்பு ரூ.70,000 -ரூ.80,000 கோடி மட்டுமே இருக்கும் என டாடா மதிப்பிட்டு உள்ளது. மிஸ்த்ரி சொல்லும் மதிப்பில் இது 50% மட்டுமே!

பிட்ஸ்

காபி டே நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக மறைந்த வி.ஜி. சித்தார்த்தாவின் மனைவி மாள்விகா ஹெக்டே நியமிக்கப் பட்டிருக்கிறார். பெரும் கடன் காரணமாக சித்தார்த்தா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்!