வெற்றிகரமாக 30-ஆவது வயதை நெருங்குபவரா நீங்கள்?

கல்லூரிக் காலத்தில் தூள் கிளப்பியிருப்பீர்கள்; வேலையில் சேர்ந்த பின்னரும் விளையாட்டுத்தனத்தை அடியோடு விட்டு விடாமல் நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், கேரம், சுற்றுலா என்று பொழுது கழிந்திருக்கும். `சம்பாதிப்பதெல்லாம் செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தான்’ என்பதே உங்கள் கொள்கையாக இருந்திருக்கும்.

ஆனால், காட்டாற்று வெள்ளமாக ஓடிய மனம் முப்பது வயதில் கட்டுக்குள் வந்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் சில நிதிப்பழக்கங்களின் பலன்கள் வாழ்வின் எல்லை வரை துணைக்கு வரும். அவற்றைப் பார்ப்போமா?

கடன் நல்லது!

`கடன் பட்டார் நெஞ்சம் கலங்கினதெ’ல்லாம் பழைய காலம். இன்று எப்பேர்ப்பட்ட அசுரனாக இருந்தாலும் கடன் வாங்காமல் காலத்தை ஓட்ட முடியாது. எனவே, கடன் வாங்குவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் வாங்கும் கடன் நல்ல கடனாக இருக்க வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன், பிசினஸ் கடன் போன்றவை நம் முன்னேற்றத்துக்குத் துணைநிற்பதால், இவற்றையெல்லாம் `நல்ல கடன்’ என்று சொல்லலாம். கார், விலையுயர்ந்த செல்போன், பிராண்டடு ஆடைகள், வாஷிங் மெஷின், டி.வி போன்றவற்றுக்காக வாங்கும் கடன், `கெட்ட கடன்.’ ஏனெனில், இவற்றின் மதிப்பு குறைந்துகொண்டே போகும். கூடுமான வரை இந்தப் பொருள்களைக் கடனுக்கு வாங்காமல் இருப்பது நல்லது.

மிக மிகக் கெட்ட கடன் ஒன்று உண்டு. அது, கிரெடிட் கார்டு கடன். இதைக் கையாளத் தெரியாமல், இஷ்டத்துக்குக் கடன் வாங்கியவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள பத்து வருடங்களுக்கு மேலாகும். 24%, 36% என்று இதன் வட்டி விகிதம் மிக அதிகம். அத்துடன் கடலின் ஆழம் தெரியாமல் விளையாடுபவர்கள் ஒருகட்டத்தில் மீண்டு வர முடியாமல் முழுகுவதுபோல, சிறுகச் சிறுக நம்மைக் கடன் வலைக்குள் இழுத்துக்கொண்டு போவது இந்த கிரெடிட் கார்டுதான்.

ஆனால், இந்த ‘பிளாஸ்டிக் மணி’ யுகத்தில் கிரெடிட் கார்டை ஒரேயடியாக ஒதுக்கவும் முடியாது. நம் மாத வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே கிரெடிட் கார்டில் வாங்கும் பழக்கத்தைக் கறாராகக் கடைப்பிடித்தால், அந்தந்த மாத பில்லை முழுவதுமாகச் செலுத்தலாம்; சேரும் பாயின்ட்டுகளுக்கு இலவசப் பொருள் அல்லது கேஷ் பேக் பெறலாம்.

துணிவைத் தரும் அவசரகால நிதி்

வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கம் நிறைந்தது. எப்போது, எந்த வடிவில் சோதனைகள் வரும் என்று யாருக்குத் தெரியும்... தயார்நிலையில் இருந்தால் மட்டுமே எதையும் துணிச்சலாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இதற்குத் தேவை, `எமெர்ஜென்ஸி ஃபண்ட்’ என்ற அவசரகால நிதி. வரவும் செலவும் சரிசமமாக இருக்கும் நிலையில் அவசரமாவது, நிதியாவது என்கிறீர்களா..?

உற்று கவனித்தால், ஓர் உண்மை புலப்படும். செலவு வேறு; அநாவசியச் செலவு வேறு. காபி கண்டிப்பாகத் தேவை. அதை வீட்டில் தயாரித்து, அளவாக அருந்துவது செலவு; நினைத்த நேரத்திலெல்லாம் நண்பர்களுடன் கேன்டீன் சென்று வடை, பஜ்ஜி உள்ளிட்ட சேர்மானங்களுடன் உள்ளே தள்ளுவது அநாவசியச் செலவு.

இளமைப் பருவத்தில் கல்விக்கு, வீடு கட்ட, கார் வாங்க என்று எல்லாவற்றுக்கும் கடன் கிடைக்கும். ஆனால், ரிட்டயர்டு ஆனபின் வரும் செலவுகளைச் சமாளிக்க எந்தக் கடனும் கிடைக்காது!

செல்போனை அடிக்கடி மாற்றுவது, தேவையற்ற டி.வி சேனல்களை சரண்டர் செய்யாமல் இருப்பது, மழை, குளிர்காலங்களில் ஏசி பயன்படுத்துவது, பக்கத்திலிருக்கும் கடைக்குக்கூட பைக்கில் போவது போன்ற பழக்கங்களைக் கண்டறிந்து குறைத்துக்கொண்டால், மாதா மாதம் ஒரு கணிசமான தொகையைச் சேர்க்க முடியும். ஆறுமாத காலத்துக்குத் தேவையான சம்பளத்தைக் கையில் தயாராக வைத்திருந்தால் அதன் மூலம் கிடைக்கும் தைரியமே தனி.

காப்பீடு... மிக மிக அவசியம்!

உங்கள் முக்கியச் சொத்து எது... நீங்கள் வாங்கிய வீடா, காரா, நகையா? இவை எதுவுமில்லை. இவற்றை வாங்க ஆதாரமாக விளங்கிய உங்கள் உடல்நலம்தான் உங்கள் முக்கியச் சொத்து.

வாழும்போது ஏற்படும் நோய் குறித்த செலவுகளுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ்; வாழ்க்கைக்குப் பிறகு ஆதாரமின்றித் தவிக்கும் உறவுகளுக்கு உதவுவதற்கு லைஃப் இன்ஷூரன்ஸ். இவற்றை ஏஜென்ட் மூலம் வாங்காமல், ஆன்லைனில் வாங்கினால் 40% முதல் 60% வரை விலை குறையும். சிலர், `நாற்பதுகளுக்குப் பிறகுதானே நோய் நொடிகள் வரும்... அப்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அலட்சியமாக இருப்பார்கள். ஆனால், இன்ஷூரன்ஸ் பிரீமியமும் அப்போது அதிகமாகிவிடும், உஷார்!

60 முதல் ஆயுள் வரை!

முன்பெல்லாம் 58 வயதுக்குப் பிறகு பலரும் ஓய்வு பெறுவார்கள். இன்றைக்கு 50 வயதில் ஓய்வு பெற முடியுமா என்று யோசிக்கிறார்கள். 30 வயதிலேயே ஓய்வுக்காலத்துக்கான திட்டத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.

காரணம், இளமைப் பருவத்தில் கல்விக்கு, கல்யாணத்துக்கு, வீடு கட்ட, கார் வாங்க என்று எல்லாவற்றுக்கும் கடன் கிடைக்கும். ஆனால், ரிட்டயர்டு ஆன பிறகு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க எந்தக் கடனும் கிடைக்காது. அதனால் வரும் கஷ்டங்களைச் சமாளிக்க உடலில் தெம்பும் இருக்காது.

இதையெல்லாம் உணர்ந்துதான் அரசாங்கமே பிராவிடன்ட் ஃபண்ட், வாலன்டரி பிராவிடன்ட் ஃபண்ட், பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் என்றெல்லாம் திட்டங்கள் வைத்திருக்கிறது. இவற்றுடன் நேஷனல் பென்ஷன் ஸ்கீம், இ.எல்.எஸ்.எஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி வருமான வரித் திட்டம் 80சி-யின் கீழ் வரும் 1.5 லட்ச ரூபாய் வரிவிலக்கை முழுமையாக அடைந்தால்தான் ரிட்டயர்மென்ட் வாழ்க்கை இனிக்கும்.

`காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்...’ என்பதுபோலக் கையில் பணமும், உடலில் வலுவும் இருக்கும்போதே முழு வாழ்க்கைக்கும் தேவையான வசதிகளைத் தயார் செய்து கொள்வது அனைவருக்கும் அவசியம். அதை 30 வயதில் தொடங்குவது மிக மிக நன்று!