பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டைச் சுலபமாக்கும் முக்கிய வசதிகள்!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை இங்கே...

  • குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டைச் செய்யும் வகையில், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் எல்லா ஃபண்டுகளிலும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) வசதியை அளித்திருக்கின்றன.

  • ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டுக்கு சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி) மூலம் முதலீட்டை மாற்றிக்கொள்ளும் வசதி மியூச்சுவல் ஃபண்டில் இருக்கிறது. இந்த வசதியை ஒரே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஃபண்டுகளுக்குள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டைச் சுலபமாக்கும் முக்கிய வசதிகள்!
  • குறிப்பிட்ட தொகை அல்லது முதலீட்டுப் பெருக்கத்தை / டிவிடெண்டை நம் வங்கிக் கணக்குக்குக் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றிக்கொள்ள முடியும்.

  • தேவைக்குப் பணம் எடுக்க, சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளானை (எஸ்.டபிள்யூ.பி) பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முறையில் குறிப்பிட்ட தொகை அல்லது முதலீட்டுப் பெருக்கத்தை /டிவிடெண்டை நம் வங்கிக் கணக்குக்குக் குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றிக்கொள்ள முடியும்.

  • இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீடு வழங்கிவருகின்றன. காப்பீட்டுத் தொகை, எஸ்.ஐ.பி தொகையைப்போல் 10 முதல் 100 மடங்கு வரை உள்ளது.

  • புதிய ஃபண்ட் வெளியீட்டில் உங்களுக்கு யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே உங்களின் வங்கிக் கணக்கிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துக்குப் பணம் செல்லும். அதுவரை உங்கள் வங்கிக் கணக்கில் முதலீட்டுக்கான இந்தத் தொகை ‘லாக்இன்’ செய்யப்பட்டிருக்கும்.

  • மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆன்லைன், மொபைல் செயலி மூலம்கூட எளிதாக முதலீட்டைச் செய்ய முடியும்.

  • மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, யூனிட்டுகளை விற்றுப் பணமாக்குதல் குறித்த விவரங்கள் உடனே செல்போனுக்கு குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்) அனுப்பப்படும். மேலும், மாத முதலீட்டுத் தேதி குறித்த நினைவூட்டலும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும்.

  • மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.

  • மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வங்கிக் கணக்கையும் மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது.