சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுனில் சுப்ரமணியம், மியூச்சுவல் ஃபண்ட் ஏ.எம்.சி-களை நிர்வகிக்கும் மேலாளர்களில் மிகவும் முக்கிய மானவர். பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் சின்னதாக இருந்தாலும், அவற்றால் பங்குச் சந்தையில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று கணிப்பதில் அவருக்கு இருக்கும் திறமை அபாரமானது. பங்குச் சந்தையின் போக்கைப் பற்றி எடுத்துச் சொல்லி, நாம் பின்பற்ற வேண்டிய முதலீடு எப்படி இருக்க வேண்டும் என நாணயம் விகடன் வாசகர்களுக்கு அவ்வப்போது பேட்டி மூலம் சொல்வதுண்டு. 16-ம் ஆண்டுச் சிறப்பிதழில் அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டி இனி...

இந்தியப் பங்குச் சந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

“நடுத்தரக் காலத்தில் இந்தியப் பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறைய இருக்கிறது. கோவிட் தொற்றுநோயால் கடுமை யாகப் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் மந்தநிலையிலிருந்து மீண்டு வலுவான மீட்சியைப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.”

மியூச்சுவல் ஃபண்டுகளுக்காக எந்த வழியில் நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்கிறீர்கள்?

“பொருளாதார வளர்ச்சியை முன்கூட்டியே கண்டறிந்து, நடுத்தரக் காலத்தில் அந்த வளர்ச்சியால் பயன் அடையக்கூடிய துறைகளை முதலில் அடையாளம் காண்போம். அந்தத் துறைகளில் அதிகபட்ச நன்மைகளைப் தரக்கூடிய நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுப்பது எங்கள் முதலீட்டு வழியாக உள்ளது.

பங்குச் சந்தை, அந்த நிறுவனங் களின் வளர்ச்சித் திறனை உணர்ந்து கொள்வதற்கு முன்பு அந்த நிறுவனங் களின் பங்குகளை, சரியான விலை யில் வாங்க நாங்கள் காத்திருப்போம். இதை நியாயமான விலையில் வளர்ச்சி (GARP - Growth At a Reasonable Price) என்று அழைக்கிறோம்.’’

பங்குகளைத் தேர்வு செய்வதற்கான உங்கள் அளவுகோல்கள் என்ன?

“நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்யும்போது ஐந்து S-களை நாங்கள் பின்பற்றுகிறோம். எளிமையான வணிகம், அளவிடக்கூடிய வாய்ப்புகள், நிலையான வளர்ச்சி வாய்ப்புகள், நிலையான பணப் புழக்கம் மற்றும் வலுவான நிர்வாகம் (Simple business, Scalable opportunities, Sustainable growth prospects, Steady cash flows and Strong Corporate Governance) ஆகியவை அந்த ஐந்து S-கள் ஆகும்.”

ஒரு நிறுவனப் பங்கிலிருந்து எப்போது வெளியேறுவீர்கள்?

“குறிப்பிட்டத் துறை மோசமான வளர்ச்சியில் இருக்கிறது என்றாலோ, நாங்கள் கணித்த இலக்கு விலை மதிப்பை முழுமையாக எட்டி விட்டது என்றாலோ அந்தப் பங்குகளிலிருந்து வெளியேறிவிடுவோம்.”

முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் சமீப கால செயல்திறனை (வருமானம்) அடிப்படையாகக் கொண்டு மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு நிதி மேலாளராக நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணிகள் எவை என நினைக்கிறீர்கள்?

“கீழ்க்கண்ட மூன்று காரணி களின் அடிப்படையில் பங்குச் சந்தை சார்ந்த ஒரு நல்ல மியூச் சுவல் ஃபண்டைத் தேர்வு செய்ய முடியும்.

1. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நீண்டகாலமாக சிறப்பாக இயங்கி வர வேண்டும். குறிப்பிட்ட ஃபண்ட் திட்டம் எத்தனை ஆண்டுகளாகச் செயல் பட்டு வருகிறது என்பதை அதிகம் கவனிக்கத் தேவையில்லை.

2. நீண்டகால ரோலிங் ரிட்டர்ன் (Rolling Return) பகுப்பாய்வில் பல்வேறு கால கட்டங்களில், ஃபண்ட் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.

3. நல்ல மற்றும் மோசமான வணிகச் சுழற்சிகளின்போது அந்த ஃபண்டின் செயல்பாடு நன்றாக இருக்க வேண்டும்.”

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ஐந்து ஆண்டுகளில் நீண்ட காலத்தில் என்ன வருமானத்தை எதிர்பார்க்கலாம்?

“ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் + பணவீக்க விகிதம் + 3% = ஈக்விட்டி ஃபண்ட் ஆண்டு சராசரி வருமானம். உதாரணம், 5 + 5+ 3% = 13%

நல்ல வருமானத்தை எதிர்பார்க்கும் சிறு முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?

“எப்போதும் உங்கள் நிதி இலக்குகளின் அடிப்படையில் முதலீடு செய்யுங்கள். இலக்குகளை அடையும் வரை தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். பொருளாதார நிலைமைகள், பங்குச் சந்தை நிலைமைகள் மோசமாக இருக்கும்போது ஒருபோதும் பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளிலிருந்து வெளியேற வேண்டாம். ஏனெனில், அதுதான் முதலீடு செய்ய சிறந்த நேரம் ஆகும்.”

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்கு எந்தத் துறைகளில் முதலீடு செய்யலாம்?

“வங்கி மற்றும் நிதிச் சேவைகள், நுகர்வோர் பொருள்கள், வாகனங்கள், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகிய துறை களின் எதிர்காலம் அடுத்த 3 முதல் 5 ஆண்டு களில் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கிறோம்.”

தங்கத்தின் விலை ஏறுமா, இறங்குமா?

“கொரோனாவால் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் நெருக்கடி சரியாகும் வரை தங்கத்தின் விலை நிலையானதாக இருக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சி மீட்சிப்பெறும்போது, பணம் தங்கத்திலிருந்து வெளியேறும். அதன் பிறகு 2 முதல் 3 ஆண்டுகளில் அதன் விலை படிப்படியாகக் குறைந்துவரும் என எதிர் பார்க்கிறோம்.”

சிறு முதலீட்டாளர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயம் என்ன?

“குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் டைவர்சிஃபைடு ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) முறையில் முதலீடு செய்து வர வேண்டும்.”

புதிய முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

“உங்கள் முதலீட்டுத் தொகையில், 50 சத விகிதத்தை ஈக்விட்டி ஹைபிரிட் ஃபண்டு களிலும், 50 சதவிகிதத்தை லார்ஜ்கேப் ஃபண்டு களிலும் முதலீடு செய்ய தொடங்குங்கள். இதன்மூலம் அதிக ரிஸ்க் எடுக்காமல், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையின் அனுபவத்தைப் பெறுங்கள். அதன் பிறகுதான் மிட்கேப், ஸ்மால்கேப் மற்றும் செக்டார் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்” என புதிய முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தந்தார் சுனில்.

எனக்குப் பிடித்த 3 முதலீட்டு மந்திரங்கள்!‘‘

‘‘1. ஒவ்வொரு முதலீட்டையும் எப்போதும் ஒரு ‘குறிக்கோளை’ மனதில் கொண்டு மேற்கொண்டு வாருங்கள்.

2. இலக்கு வருமானத்தை எட்டியதும் தயக்கமின்றி முதலீட்டிலிருந்து வெளியேறிவிடவும்.

3. நீங்கள் ஒரு முதலீட்டிலிருந்து வெளியேற விரும்பும்போது, நீங்கள் அதை எந்த விலைக்கு வாங்கினீர்கள் என்பதைப் பார்க்க வேண்டாம்.

எனது ரிஸ்க் எடுக்கும் திறன் மிக அதிகம் - பங்குகள், கடன் சந்தைகள் மீண்டு எனது இலக்கை அடையும் வரை கணிசமான காலத்துக்கு எனது முதலீட்டுக் கலவை இழப்பில் இருந்தால் அதைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு தயாராக இருக்கிறேன். எனது தனிப்பட்ட பணத்தை நிறுவனப் பங்குகள், ரியல் எஸ்டேட் (குடியிருக்கும் வீடு) மற்றும் எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடுகளில் (Liquid investments) வைத்திருக்கிறேன்’’ என்றார் சுனில் சுப்ரமணியம்.