Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்... தமிழகத்துக்கு 9-வது இடம்! - இன்னும் விழிப்புணர்வு தேவை..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

நாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் போக வேண்டிய தூரம் மிக அதிகம்!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அண்மைக் காலமாக நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த முதலீடு இன்னும் அதிகமான மக்களைச் சென்றடைய வேண்டியுள்ளது. உலக அளவில் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் பங்களிப்பு சராசரியாக 55 சதவிகிதமாக உள்ளது. இது இந்தியாவில் சுமார் 11 சதவிகிதமாக இருக்கிறது.

2020 ஜூன் நிலவரப்படி, மாநிலத்தின் ஜி.டி.பி-யில் மகாராஷ்டிராவின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு 47.9% பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் டெல்லி (30.6%) கோவா (19.7%), சண்டிகார் (15.9%), ஹரியானா (14.2%), மேற்கு வங்காளம் (11.8%) குஜராத் (11.1%), கர்நாடகா (11%), தமிழ்நாடு (7.2%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால், டெல்லியில் தனிநபர் ஒருவர் சராசரியாக 1.20 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார். இது கோவா மற்றும் மகாராஷ்டிராவில் முறையே ரூ.98,467 மற்றும் ரூ.94,541-ஆக உள்ளது. சண்டிகார் (ரூ.58,377), ஹரியானா (ரூ.36,242), மேற்கு வங்காளம் (ரூ.14,397) குஜராத் (ரூ.24,599), கர்நாடகா (ரூ.25,932) ஆகியவற்றில் ஓரளவுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளது. தமிழ்நாட்டில் இது 15,878 ரூபாயாக மட்டுமே உள்ளது.

அந்த வகையில் நாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் போக வேண்டிய தூரம் மிக அதிகம். மக்களிடம் இன்னும் கூடுதலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாக இருக்கிறது!