Published:Updated:

டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்... எது நல்லது?

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

பிரீமியம் சாதாரணமான டேர்ம் பாலிசிகளைவிட சற்று அதிகமாக இருக்கும். ஆகவே, பிரீமியம் ரிட்டர்ன் பாலிசிகளைத் தவிர்த்துவிடுவதே நல்லது.''

முழுமையான ஆயுள் காப்பீட்டு பாலிசியான டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் குறித்து நாணயம் விகடன் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் நிதி ஆலோசகரும், வெல்த் லேடர் (Wealthladder.co.in) நிறுவனத்தின் நிறுவனருமான எஸ்.ஸ்ரீதரன்.

> டேர்ம் பிளான் எடுக்க வருமான வரிக் கணக்கைக் கண்டிப்பாகத் தாக்கல் செய்ய வேண்டுமா... சம்பள ரசீது கொடுக்க முடியாதவர்களுக்கு மாற்று வழி என்ன?

- சங்கர் பண்டரிநாதன், முகநூல் மூலம்

''டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஒருவரின் வருமானத்தை வைத்தே எந்த அளவுக்குக் காப்பீடு எடுப்பது / கொடுப்பது என்று முடிவு செய்யப்படும். ஆகவே, வருமான வரிக் கணக்கு தாக்கல் என்பது அவசியம். அது இல்லாதபட்சத்தில் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை அறிக்கையைச் சமர்ப்பித்து ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.''

> டேர்ம் பிளான் உடன் எந்த மாதிரியான ரைடர்களை எடுக்க முடியும்?

- சுரேஷ் பாபு, சென்னை–32

''டேர்ம் பிளானுடன் விபத்தால் உண்டாகும் மரணம், நிரந்தரச் செயலிழப்பு அல்லது ஏதோ ஒரு சில உடல்பாகங்கள் இழப்பு என்பது ஒருவகையான ரைடர். இந்த ரைடரைப் பொறுத்தவரை, பிரீமியம் சற்று குறைவாகவும், கவரேஜைப் பொறுத்தவரை அதிகமாகவும் இருக்கும்.

டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்... எது நல்லது?

இது தவிர, 'கிரிட்டிக்கல் இல்னெஸ்' எனப்படும் ஒரு சில தீவிர நோய்களுக்கான ரைடர் என்பது அடுத்த வகை. இதைப் பொறுத்தவரை, பாலிசியின் பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். இந்த ரைடரில் அதிகபட்சமாக 15 வகையான தீவிர நோய்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். ஆகவே, கிரிட்டிகல் இல்னெஸைப் பொறுத்தவரை, ஒரு தனி பாலிசியாக அவரவரின் குடும்பப் பாரம்பர்ய மருத்துவ குணங்களைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம்.''

டேர்ம் பிளான், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான் இவை இரண்டில் எதை எடுப்பது நல்லது?

- கே.ஜெய்சங்கர், காஞ்சிபுரம்

''எப்போதுமே இன்ஷூரன்ஸையும் முதலீட்டையும் ஒன்றாக இணைக்காமல், இன்ஷூரன்ஸைத் தனியாகவும், முதலீட்டைத் தனியாகவும் செய்ய வேண்டும். டேர்ம் பிளானைப் பொறுத்தவரை, தாங்கள் செலுத்தும் பிரீமியம் இன்ஷூரன்ஸுக்கு மட்டுமே செல்வதால், இந்த பிளானில் எந்தவிதமான முதிர்வுத் தொகையும் இருக்காது. இதுவே பிரீமியம் ரிட்டர்ன் பாலிசிகளில் தாங்கள் செலுத்தும் பிரீமியத்தில் ஒரு தொகை காப்பீட்டுக்காகவும், ஒரு தொகை முதலீட்டுக்காகவும் பிரிக்கப்பட்டு பாலிசி முடியும்போது செலுத்திய பிரீமியத்தைத் திருப்பித் தருகின்றனர். இவ்வகையான பாலிசிகளின் பிரீமியம் சாதாரணமான டேர்ம் பாலிசிகளைவிட சற்று அதிகமாக இருக்கும். ஆகவே, பிரீமியம் ரிட்டர்ன் பாலிசிகளைத் தவிர்த்துவிடுவதே நல்லது.''

50 வயதுக்கு மேல் டேர்ம் பிளான் கிடைப்பது கஷ்டம் என்கிறார்களே, உண்மையா?

- மோகன சுந்தரி, திருநெல்வேலி

''டேர்ம் இன்ஷூரன்ஸை குறைந்த வயதில் எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். மேலும், இன்றைய நிலையில் 40 வயதுக்குமேல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் ஏற்படுதல், உணவுப் பழக்கவழக்கம் மாறுவது ஆகியவற்றால் உண்டாகும் நோய்கள் மிகவும் பொதுவானவையாக இருப்பதால், பிரீமியம் தொகை மாறுபடுவதுடன், பாலிசி எடுப்பதிலும் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள் இன்ஷூரன்ஸில் உச்சவரம்பான 60 வயது வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.''

டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான்... எது நல்லது?

> மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைக்காது என்பது சரியா?

> டேர்ம் பிளான் பாலிசிகளில் ஆண்களைவிட பெண்களுக்கு பிரீமியம் குறைவா?

> 'டேர்ம் பிளானை ஏஜென்ட் மூலம் எடுப்பதைவிட, ஆன்லைனில் எடுத்தால் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும்' என்கிறார்கள்... இது உண்மையா?

- இந்த சந்தேகங்களுக்கான பதில்கள் உள்ளிட்ட முழுமையான பகுதியை நாணயம் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... > டேர்ம் பிளான் ஆன்லைனில் எடுக்கலாமா? - 'வெல்த் லேடர்' எஸ்.ஸ்ரீதரன் https://bit.ly/3h7IB5f

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு