Published:Updated:

ரூ.500 to ரூ.1,50,000... எளிதாகத் தொடங்கி வருவாய் ஈட்ட உதவும் 'பி.பி.எஃப்' திட்டம்!

பி.பி.எஃப்
பி.பி.எஃப்

அப்படிச் செய்தாலும் உங்களின் முதிர்வுத் தொகையும், மாத வருமானமும் நீங்கள் 28 வயதில் ஆரம்பித்ததைப் போல் வராது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க முடியாது.

பி.பி.எஃப்: முதலீட்டாளர்கள் மிகவும் எளிதாகத் தொடங்கக்கூடியது 'பி.பி.எஃப்' என்று சொல்லப்படும் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டம். வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள்மூலம் இந்தக் கணக்கைத் திறந்து கொள்ளலாம். இது 15 வருடகாலத் திட்டம். பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என நீட்டித்துக்கொள்ளலாம்.

தற்போது இந்தத் திட்டம் ஆண்டுக்கு 7.90% வருமானம் தருகிறது. இதில் ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.500. அதிகபட்ச முதலீடு ரூ.1,50,000. வருடத்துக்கு ஒரு முறை முதல் 12 முறை முதலீடு செய்யலாம். 80சி பிரிவின்கீழ் இந்தத் திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு வரி விலக்குக் கிடைக்கும். மேலும், வட்டி வருமானம் மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரிவிலக்கு இருக்கிறது.

மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை

இந்தத் திட்டத்தின் வட்டி வருமானத்தை அரசு அவ்வப்போது மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்கும். நீண்ட காலத்தில் இந்தத் திட்டம் 7.50% வருமானத்தைத் தரும் என நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/39b8TPV

இந்தத் திட்டத்தில் ஒருவர் ஓராண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் முதலீடு செய்வதாகவும், 61-வது வயதில் ஆண்டுக்கு 7% வருமானம் கிடைக்கும் எனவும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். (பார்க்க அட்டவணை 1)

பி.பி.எஃப் முதலீட்டை இளமையில் ஆரம்பிப்பதே நல்லது. மேலும், பி.பி.எஃப்-ல் அதிகபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் என்பதால், 48 வயதில் நீங்கள் அதிகமாக முதலீடு செய்ய முடிந்தாலும், விதிமுறைகள் அதற்கு இடம் தராது. உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் மற்றொரு கணக்கைத் தொடங்கி, இன்னொரு 1.5 லட்ச ரூபாயை முதலீடு செய்யலாம். அப்படிச் செய்தாலும் உங்களின் முதிர்வுத் தொகையும், மாத வருமானமும் நீங்கள் 28 வயதில் ஆரம்பித்ததைப் போல் வராது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் சேமிக்க முடியாது.

- மாறிவரும் வாழ்க்கைச்சூழலில், இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இன்றைய இளைஞர்கள் கடந்தகாலத்தைப் போலல்லாமல், குறுகியகாலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ரூ.500 to ரூ.1,50,000... எளிதாகத் தொடங்கி வருவாய் ஈட்ட உதவும் 'பி.பி.எஃப்' திட்டம்!

இந்த நிலையில், பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பதும், குழந்தைகளையும் / குடும்பத்தையும் பராமரிப்பதும் நிகழ்காலத்தில் நடந்துவிடுகிறது. ஆனால், எதிர்காலத்துக்காகச் சேமிக்க வேண்டும் என்பதை உரியகாலத்தில் பலரும் செய்யத் தவறிவிடுகிறார்கள். 40 – 45 வயதில்தான் பலரும் ஓய்வுக்காலத்தைப் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்குகிறார்கள். அந்த வயதில் முதலீட்டைத் தொடங்கும்போது, பலருக்கும் முதலீட்டைப் பெருக்கப் போதுமான கால அவகாசம் இருப்பதில்லை.

எனவே, எதிர்காலத்துக்காக எல்லோருமே இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம்பிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் எதிர்கால முதலீட்டுக்கேற்ற முக்கியமான ஆப்ஷன்களின் ஒன்றுதான் இந்த பி.பி.எஃப் – பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்.

இதேபோல், கவனத்துக்குரிய ஆப்ஷன்களான என்.பி.எஸ் – நேஷனல் பென்ஷன் சிஸ்டம் மற்றும் பிற ரிட்டையர்மென்ட் பிளான்களைப் பற்றியும் நாணயம் விகடன் இதழில் முழுமையாக அறிய > 30-ல் முதலீடு... 60-ல் வருமானம்! - கைகொடுக்கும் முதலீட்டு வழிகள்! https://www.vikatan.com/news/investment/some-investing-methods-to-gain-benefits-during-retirement-age

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், ப்ரைம் கன்டென்ட்டுகளின் அப்டேட்களையும் தவறாமல் பெறுவதற்கு, விகடன் டிஜிட்டல் சந்தா செலுத்துங்கள். உங்களுக்காகவே இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு