Published:Updated:

பங்கு, ஃபண்ட்... டிவிடெண்ட் - என்ன வித்தியாசம்?

மியூச்சுவல் ஃபண்டிலிருந்து கிடைக்கும் டிவிடெண்ட் என்பது நம் பணத்தை எடுத்து நமக்கே தருவது!

பிரீமியம் ஸ்டோரி
‘மியூச்சுவல் ஃபண்ட்... இன்றைய முதலீடு நாளைய வெகுமதி!’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாணயம் விகடனும், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து மார்ச் 7-ம் தேதி திருப்பூரிலும், 8-ம் தேதி கோவையிலும் கோலாகலமாக நடத்தின.
மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு

ஹெச்.டி.எஃப்.சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், கோவை பிராந்தியத்தின் தலைமை மேலாளர் ஆர்.குரு விட்டல் இந்தக் கூட்டங்களில் பேசினார். “மியூச்சுவல் ஃபண்டில் நிறைய ரிஸ்க் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ரிஸ்க் இல்லாத முதலீடு என்று எதுவுமில்லை. நாம் சேமிக்க நினைக்கும் பணத்தில் ஒரு பகுதியை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மாதம் 500 ரூபாயைக்கூட முதலீடு செய்யலாம். மற்ற முதலீடுகளில் இல்லாத வசதியாக நமது பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஃபேக்‌ட் ஷீட் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். அடுத்த 10, 15 ஆண்டுகளுக்குத் தேவைப்படாத பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், நீண்டகாலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு
மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு
நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி
நாணயம் விகடன், ஹெச்.டி.எஃப்.சி

இந்தக் கூட்டங்களில் பேசிய மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் அழகப்பன் ராமநாதன், “சம்பாதிக்கும் பணத்தை எஃப்.டி., ஆர்.டி., தங்கம் எனப் பல வகைகளில் சேமிக்கிறோம். ஆனால், அ வை எதிர்காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டி நமக்கு வருமானம் தருமா என்று யோசிப்பதில்லை. ஷேர் மார்க்கெட் என்றால் சூதாட்டம் என்று பலரும் நினைக்கிறார்கள். காய்கறி மார்க்கெட்போல இதுவும் ஒரு சந்தை. காய்கறிகளின் விலை ஏறி இறங்குவதைப்போல, பங்குகளின் விலையும் ஏறி இறங்கும். அவ்வளவுதான்’’ என்றவர், ‘‘பங்குகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்டும், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் டிவிடெண்டும் ஒன்றல்ல.

மியூச்சுவல் ஃபண்டிலிருந்து கிடைக்கும் டிவிடெண்ட் என்பது நம் பணத்தை எடுத்து நமக்கே தருவது.

எனவே, ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனை இனியும் தேர்வு செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்’’ என்றார். நிகழ்ச்சியின் முடிவில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் நிபுணர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு