Published:Updated:

கொரோனா விளைவு: எந்தத் துறை பங்குகளுக்கு 'நோ'? - சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருக்கும் அனுபவம் அல்லது பங்குச் சந்தைச் செயல்பாட்டின் வரலாறுதான் பல நேரங்களில் நமக்குச் சிறந்த ஆசானாக விளங்குகிறது.

வெள்ளிக்கிழமை அன்று இந்தியப் பங்குச் சந்தை அதிக இறக்கத்தைச் சந்திருக்கிறதே?

ஷேர்லக்: "வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் ஒருகட்டத்தில் 1450 புள்ளிகளுக்கு மேல் இறக்கம்கண்டது. இதிலிருந்து 565 புள்ளிகள் மீண்டு, சந்தை 894 புள்ளிகள் இறக்கத்தில் நிறைவு பெற்றது. நிஃப்டி புள்ளிகள் 11000-க்கு கீழே இறங்கி முடிந்தது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சர்வதேசப் பொருளாதாரத்தின் போக்கு மிகவும் மந்தநிலையில் காணப்படுகிறது.

குறிப்பாக, உலக நாடுகளுக்கு இடையேயான பயணமும் வர்த்தகமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. இது பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. `இந்த இறக்கம் குறுகியகாலத்துக்குத் தொடரும்’ என்று பெரும்பாலான பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்; தற்போதைய சூழலில் சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து விலகி உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.’’

கொரோனா விளைவு: எந்தத் துறை பங்குகளுக்கு 'நோ'? - சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

யெஸ் வங்கி அதிர வைத்திருக்கிறதே!

ஷேர்லக்: "திவாலாகும் நிலைமைக்குச் சென்றுவிட்ட யெஸ் வங்கியின் பங்கு விலை வெள்ளிக்கிழமை மதியம்வாக்கில் 57% சரிந்து, 17.85 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது. வியாழக்கிழமை வர்த்தகம் முடியும்போது 26% அதிகரித்து, ரூ.36.85-ஆக இருந்தது. இந்த நிலையில், இந்த வங்கியை மீட்கும் வகையில் இதன் பங்குகளை வாங்குமாறு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி-யை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. எஸ்.பி.ஐ-யும் எல்.ஐ.சி-யும் இணைந்து 49% பங்குகளை வாங்க முன்வந்திருக்கின்றன.

ஆர்.பி.ஐ-யின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் யெஸ் வங்கி சென்றுள்ளது. இந்தப் பங்கில் முதலீடு செய்வது மிக மிக ரிஸ்க் என்பதை சிறு முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’

- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் ரூ.6,554 கோடி முதலீடு செய்திருக்கிறார்களே... | டாடா மோட்டார் பங்கின் விலை சரியக் காரணம் என்ன? | பி.வி.ஆர்., ஐநாக்ஸ் திரையரங்குகளின் பங்கு விலை இறக்கத்துக்கு என்ன காரணம்? | பி.எஸ்.இ 500 பங்குகளில் 24 பங்குகள் நிகர இழப்பைச் சந்தித்திருக்கின்றனவே? - ஷேர்லக் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை முழுமையாக வாசிக்க > ஷேர்லக் : இறக்கத்தைச் சந்திக்கும் பங்குச் சந்தை... https://www.vikatan.com/news/share-market/shareluck-share-market-march-15-2020

ஏறும் வாய்ப்புள்ள பங்குகள்!

கொரோனா வைரஸ், உள்நாட்டு - சர்வதேசக் காரணிகள் ஆகியவற்றால் இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தைச் சந்தித்து வருகிறது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதிலிருக்கும் அனுபவம் அல்லது பங்குச் சந்தைச் செயல்பாட்டின் வரலாறுதான் பல நேரங்களில் நமக்குச் சிறந்த ஆசானாக விளங்குகிறது. பங்குச் சந்தையில் ஏதாவது பிரச்னை எழும்போதெல்லாம் முந்தைய காலங்களில் இதுபோன்ற சூழலில் முதலீட்டாளர்களின் செயல்பாடு எப்படி இருந்தது என்று கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். அது போன்ற சூழ்நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேசப் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இது, உலகம் முழுவதுமுள்ள முதலீட்டாளர்களை ஒருவித பயத்தில் மூழ்கடித்திருப்பதுடன், முதலீட்டுக்கான வாய்ப்பாகவும் பார்க்கவைத்து ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இதே போன்ற சூழலை இதற்கு முன்னர் நம் பங்குச் சந்தைகள் எப்படி எதிர்கொண்டன என்பதையும் முக்கியமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இதுதான் இந்த விஷயத்தில் ஓர் ஆரோக்கியமான விவாதத்துக்கு தொடக்கமாக அமையக்கூடும்.

கொரோனா விளைவு: எந்தத் துறை பங்குகளுக்கு 'நோ'? - சிறு முதலீட்டாளர்கள் உஷார்..!

குறிப்பிட்ட தொற்றுநோய் பாதிக்கப்பட்ட காலகட்டங்களில் அமெரிக்காவின் எஸ் & பி 500, இந்தியாவின் சென்செக்ஸ் இண்டெக்ஸ்கள் எவ்வாறு செயல்பட்டன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்த அட்டவணையில் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துவதாக இருக்கின்றன. இதற்கு முன்னர் நடந்த வைரஸ் தாக்குதல்களில் 2003-ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் தாக்குதல், 2009-ம் ஆண்டில் ஸ்வைன் புளூ வைரஸ் தாக்குதல் ஆகிய இரண்டைத் தவிர மற்ற வைரஸ் தாக்குதல்கள் பங்குச் சந்தைகளில் பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பு பங்குச் சந்தைகளில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய வங்கிகளும்கூட வட்டி விகிதங்களைக் குறைத்திருக்கின்றன. விநியோகச் சங்கிலியில் தொடர்பு அறுபட்டிருப்பதால், உலகளாவிய வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படியான சூழலில், முதலீட்டாளர்கள் எந்த மாதிரியான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம், கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் வரை எதிலெல்லாம் முதலீடு செய்யலாம் என்பதைக் கண்டறிய எளிய முறை எதிர்மறையாக அணுகுவது. அதாவது, எந்தெந்தத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால், அதன் மூலம் எந்தத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பதை எளிதில் அடையாளம் காணலாம்.

இப்போதைக்கு சுற்றுலாத் துறை மற்றும் அது சார்ந்த விமானப் போக்குவரத்து, ஹோட்டல்கள், வாகனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, எலெக்ட்ரானிக்ஸ் & மொபைல் போன்கள் மற்றும் மருந்துத் தயாரிப்புத் துறைகளை முதலீட்டிலிருந்து விலக்கிவைக்கலாம். மாறாக, வங்கிகள் & நிதிச் சேவை, ஐ.டி., ஆடைகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப் பொருள்கள், மின்சாதனங்கள், எரிசக்தி உற்பத்தி & விநியோகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்.

- இத்துடன் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பரிந்துரைக்கும் பங்குகள் விவரத்தை நாணயம் விகடன் இதழில் அறிய > தொடர்ந்து இறக்கத்தில் பங்குச் சந்தை... ஏறும் வாய்ப்புள்ள பங்குகள்! https://www.vikatan.com/news/share-market/shares-to-watch-out-for-in-this-crisis-time

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு