Published:Updated:

WFH `ரிமோட்+' - சொந்த ஊரில் வேலை... ஐ.டி நிறுவனத்தின் புதிய திட்டம்!

வீட்டிலிருந்து
வேலை
வீட்டிலிருந்து வேலை

ஊரிலிருந்து வேலை பார்ப்பது போன்ற வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் `ரிமோட்+' என்ற திட்டம்

சென்னை டைடல் பார்க்கில் இயங்கிவருகிறது சாஸ் (SaaS) நிறுவனமான கிஷ்ஃப்ளோ. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், `ரிமோட்+' என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது பற்றி அவருடன் பேசினோம்.

''ஐ.டி தொடர்பான வேலைகளைச் சென்னையிலிருந்துதான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்டர்நெட் வசதியுள்ள எந்த ஊரிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். இந்த வேலையை கான்கிரீட் ஜங்கிளான சென்னையிலிருந்து செய்வதைவிட தங்களது சொந்த ஊர்களிலிருந்து செய்ய பலரும் விரும்புகிறார்கள்.

எனவே, எங்கள் ஊழியர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து வேலை பார்ப்பது போன்ற வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் `ரிமோட்+' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம். இந்தத் திட்டத்தின்படி, ஒருவர் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்கலாம்; அல்லது சொந்த ஊரிலிருந்து வேலை பார்க்கலாம். சொந்த ஊரில் செலவைக் குறைத்து, சொந்தபந்தங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறோம்.

எந்த ஊரிலிருந்து வேலை பார்த்தாலும், ஓர் ஊழியர் / ஊழியர் குழு மாதத்துக்கு ஒரு வாரம் தலைமை அலுவலகத்துக்கு வந்து எல்லோருடனும் இணைந்து பணியாற்ற வேண்டும். சென்னையில் தேவைப்படும் போக்குவரத்து வசதி, தங்கும் இடவசதியை நாங்களே ஏற்பாடு செய்துவிடுவோம்.

வீட்டிலிருந்து
வேலை
வீட்டிலிருந்து வேலை

அலுவலகக் குழுக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த மாதந்தோறும் கூட்டம் நடத்துவோம். காலாண்டுக்கு ஒரு முறை அனைவரும் ஓரிடத்தில் கூடி, தாங்கள் செய்த சாதனைகள் பற்றி மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்லலாம். இதன் மூலம் ஊழியர் குழுக்களிடையே ஆரோக்கியமான போட்டி உருவாகும்.

ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை எல்லோரும் நேரில் சந்திக்கிற மாதிரி ஒரு சுற்றுலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்வோம். ஊழியர்களின் உற்பத்தித்திறனை தினப்படி செய்யும் வேலைகளைவைத்து முடிவு செய்யாமல், அவர் தனது வேலையை மொத்தமாக எப்படி முடித்துத் தருகிறார் என்பதைவைத்து முடிவு செய்வோம்.

இந்த முறையில் நாங்கள் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து எங்கள் ஊழியர்களின் உற்பத்தித்திறன் 30% அதிகரித்திருக்கிறது. சிறிய ஊர்களில் தங்கி பணிபுரிவதன் மூலம் மாதமொன்றுக்கு ரூ.20,000 செலவு குறைகிறது. வீட்டிலிருக்கும் வயதான தாத்தா-பாட்டி, பெற்றோர்களை கவனித்துக்கொள்ள முடிகிறது.

முக்கியமாக, குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க முடிகிறது. இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கியவுடன் பலரும் இதை பாசிட்டிவ்வாகப் பார்த்து, பேசத் தொடங்கியிருக்கிறார்கள். நாங்கள் செயல்படுவதுபோலவே எல்லோரும் செயல்பட வேண்டுமென்பதில்லை. எல்லோரும் தங்களுக்கேற்ற மாதிரி விதிமுறைகளை வகுத்துக்கொள்ளலாம்'' என்றார்.

"அலுவலகம் இல்லை... வீட்டிலிருந்து வேலை..." - புதிய பாதை காட்டும் சி.கே.ஆர்..! https://bit.ly/3g7TUsL

வீட்டிலிருந்து பணிபுரிதல்
வீட்டிலிருந்து பணிபுரிதல்

- இதுவரை இல்லாத பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது கொரோனாநோய்த் தொற்று. இன்றைக்குப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் அலுவலக இடப்பரப்பைக் குறைத்துவரும் வேளையில், `இனி அலுவலகமே வேண்டாம்' என்று முடிவெடுத்து, எல்லோரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார் கவின்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன்.

சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் செனடாப் ரோட்டில் 40,000 சதுர அடிப் பரப்பில் இருக்கிறது கவின்கேர் அலுவலகம். நான்கு மாடிகள்கொண்ட இந்த கார்ப்பரேட் அலுவலகத்தை தற்போது லீஸ் முறையில் வாடகைக்குவிட முடிவு செய்திருக்கிறார் சி.கே.ஆர். அவரது இந்த முடிவைக் கேட்டுவிட்டு, அவரைத் தொடர்புகொண்டோம். தனது இந்த முடிவைப் பற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

இதுதொடர்பான சிறப்புப் பேட்டிக் கட்டுரையை நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > "அலுவலகம் இல்லை... வீட்டிலிருந்து வேலை..." - புதிய பாதை காட்டும் சி.கே.ஆர்..! https://bit.ly/3g7TUsL

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு