Published:Updated:

முதலீட்டாளர்கள் மூன்று வகை... நீங்கள் எந்த வகை..? - நீங்களே அறிந்துகொள்ளுங்கள்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால் இன்றே தொடங்குங்கள் என்பதுதான் சிறந்த முதலீட்டாளரின் வாதம்!

முதலீட்டாளர்கள் மூன்று வகை... நீங்கள் எந்த வகை..? - நீங்களே அறிந்துகொள்ளுங்கள்!

முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால் இன்றே தொடங்குங்கள் என்பதுதான் சிறந்த முதலீட்டாளரின் வாதம்!

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு
லகின் எந்த மூலையில் வசிக்கிற மனிதர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். தன் முதலீட்டைச் சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர்களே பணக்காரர் ஆகியிருக்கிறார்கள் என்ற உண்மை விளங்கும். முதலீட்டைக் கையாளும் கலைக்கு அவ்வளவு சிறப்புள்ளது. நம்மைச் சுற்றியுள்ள முதலீட்டாளர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

சராசரி முதலீட்டாளர்கள்!

இவர்கள், முதலீட்டின் மீதான அதிக பலனை விரும்புவார்கள். ஆனாலும், ரிஸ்க் அதிகம் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாததால், குறுகியகால பலன்களால் ஈர்க்கப்படுவார்கள். இதனால் பல நேரங்களில் தங்களுக்குப் பொருத்தம் இல்லாத, எதிர்கால வளர்ச்சி இல்லாத ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, தனக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரில் மனைகள் வாங்கிப் போடுவார்கள். அந்த இடங்களின் மதிப்பானது, உயர்வதற்கு எவ்வளவு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆராய மாட்டார்கள். தன்னிடம் உள்ள மொத்தப் பணத்தையும் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து, ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குக்கு மாற்றம் செய்ததையே பெரிய சாதனையாகச் சொல்வார்கள்.

முதலீட்டாளர்கள் மூன்று வகை... நீங்கள் எந்த வகை..? - நீங்களே அறிந்துகொள்ளுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவர்களில் சிலர், பெரும்பாலானவற்றில் முதலீடு செய்வார்கள். ஆனால், அவர்களின் வேலைப்பளு அல்லது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற குணத்தால் முதலீட்டைக் கவனிக்கத் தவறிவிடுவார்கள். ஒரு முதலீட்டாளர் தான் செய்த முதலீட்டைக் கையாளும் விதம், மிகவும் பலவீனமாக இருந்தால் அவரது முதலீடு நஷ்டமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இவர்கள் முதலீடுகளை லாவகமாக கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். முதல்படியாக, அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வலுவான முதலீட்டுத் தளத்தை உருவாக்க முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நல்ல முதலீட்டாளர்கள்..!

சராசரி முதலீட்டாளர்களைவிட கொஞ்சம் கூடுதலாகச் சிந்திப்பவர்கள் இவர்கள். சம்பாதிக்கும் பணத்தைச் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக எடுத்து வைத்துக்கொண்டு அதன்பின்னே செலவு செய்ய ஆரம்பிப்பார்கள். சம்பளம் பெறும் காலத்திலேயே இரண்டாவது வருமானத்துக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டால், பின்னாளில் நிதிச் சிக்கல் ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும் என்ற நம்பிக்கை உடையவர்கள். ஆனாலும், இவர்கள் முதலீடு செய்த பணம் முழுமையாக வளர்ச்சி பெற்று, அவை அள்ளித் தரும் வருமானத்தை அனுபவிக்காதவர்கள். ஏனென்றால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் முதலீட்டுத் திட்டங்களை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்.

முதலீடு
முதலீடு

நல்ல முதலீட்டாளர்கள், சிறந்த முதலீட்டாளர்களாக முதலீட்டு முறைகளில் சில மாற்றங்களைச் செய்துகொண்டால் போதும். நீண்டகால முதலீட்டின் பலன்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.

சிறந்த முதலீட்டாளர்கள்!

இவர்கள் முதலீட்டைக் கையாளும் முறையானது அனைவரும் பாராட்டும்படி இருக்கும். உதாரணமாக, இவர்கள் தங்கம், மனை, சொத்து, நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்வார்கள். எந்த வகை முதலீடுகளாக இருந்தாலும், அவை உள்ளார்ந்து சில ரிஸ்குகளைக் கொண்டிருக்கும். அதிலிருந்து செல்வத்தைப் பாதுகாக்க முதலீட்டை லாபகரமாக மாற்ற பல்வகைப்படுத்தல் (Diversification) முறை மட்டும்தான் உதவுமென்பதை அறிந்தவர்கள். வருமானத்தை உயர்த்த நம் பணத்தை உழைக்க வைக்க வேண்டுமே தவிர, நம் பணிச்சுமையைக் கூடுதலாக்கிக் கொள்ளக் கூடாது என்ற தெளிவு உடையவர்கள். இவர்கள் எதிலாவது முதலீடு செய்ய முடிவெடுத்த பின் அதற்கென சரியான நேரத்துக்காகக் காத்திருக்க மாட்டார்கள். நீண்டகாலத்தில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்தக் காத்திருத்தல் தேவையற்றது என்பது இவர்களின் எண்ணமாக இருக்கும். முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால் இன்றே தொடங்குங்கள் என்பதுதான் இவர்களின் வாதம்.

சிறந்த முதலீட்டாளர்கள் தன் முதலீட்டின் நெளிவுசுளிவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு, செய்திருக்கும் முதலீட்டில் மேலும் தொகையை அதிகப்படுத்துவார்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பே முதலீட்டைத் தொடங்கியிருந்தால், எப்படி இருக்கும் என்று கற்பனைக் குதிரையில் பயணிக்க மாட்டார்கள். இப்போது முதலீட்டை ஆரம்பித்து அடுத்த 10 வருடங்களில் அவற்றின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று நேர்மறையான சிந்தனை செய்வார்கள். மேலும், இவர்கள் செய்துள்ள முதலீடு நீண்ட காலத்துக்கானது என்பது தேவை இல்லாமல் பதற்றம் அடைய மாட்டார்கள். செய்திருக்கும் எந்தவித முதலீட்டையும், அடுத்த 10 வருடங்களுக்குள் விற்க மாட்டார்கள். தெரியாத அல்லது விரும்பாத துறைகளில் முதலீடு செய்வதே இல்லை. தான் தெரிந்துகொண்ட அல்லது விரும்பும் துறைகளில் உள்ள நீண்டகால வாய்ப்புகளை முழுமையாக அறிந்துகொண்டு அவற்றில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

முதலீடு
முதலீடு

தன் முதலீட்டின் நெளிவுசுளிவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு, செய்திருக்கும் முதலீட்டில் மேலும் தொகையை அதிகப்படுத்துவார்கள். சராசரி (Average) செய்வதால் ஏற்படும் பலனை அதிகமுறை அறுவடை செய்ததும், அதன் மூலமே தன் செல்வ வளத்தை உயர்த்திக்கொண்டதும் இந்த வகை முதலீட்டாளர்கள் மட்டும்தான். சரியான திட்டமிடுதலும், அதை முறையாக நீண்ட காலத்துக்குச் செயல்படுத்துதலுமே முதலீட்டைக் கையாளுவதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்பதை, இந்த வகை முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் நமக்கு விளக்குகின்றன.

இப்போது நீங்கள் எந்த வகை முதலீட்டாளர் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism