Published:Updated:

அட்சய திரிதியை: மக்களை ஏமாற்றும் போலி விற்பனைகள்; தங்கம் வாங்கும்போது இதையெல்லாம் கவனியுங்க மக்களே!

தங்கம்

இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள்.

அட்சய திரிதியை: மக்களை ஏமாற்றும் போலி விற்பனைகள்; தங்கம் வாங்கும்போது இதையெல்லாம் கவனியுங்க மக்களே!

இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள்.

Published:Updated:
தங்கம்

தங்கம் வாங்குவதற்கென்றே இருக்கும் ஒரு திருவிழா என்றால் அது அட்சய திருதியைதான். மே 3-ம் தேதியான நாளை, அட்சயதிருதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்.

அட்சய திருதியை தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரத்தில் குறைந்துகொண்டே வந்த தங்கம் விலை, மே 1-ம் தேதி திடீரென அதிகரித்து ரூ.39,224 என்கிற நிலையில் வர்த்தகமானது. மே-2ம் தேதியான இன்று ஒரு பவுனுக்கு ரூ.384 குறைந்து ரூ.38,840-க்கு வர்த்தகமாகிறது.

தங்கம் விலை ஏறினாலும் சரி, இறங்கினாலும் சரி அட்சய திருதியை தினத்தன்று கண்டிப்பாக தங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அட்சய திருதியை
அட்சய திருதியை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இந்த நேரத்தில் மக்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நியூ இயர் ஆஃபர், ஆடி ஆஃபர் மாதிரியான விழாக்கால சலுகைகளில் பித்தலாட்டங்கள் நடப்பது போல, அட்சய திருதியை தினத்தில் சில நகைக்கடைக்காரர்கள் போலி தங்க நகைகள் அல்லது தரம் குறைந்த தங்க நகைகளை விற்பனை செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், அட்சய திருதியை மாதிரியான தினங்களில், தங்கம் வாங்கும்போது, எப்போதும் இருக்கும் கவனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கட்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடிப்படையே ஹால்மார்க்தான்!

`ஹால்மார்க்’ முத்திரை என்பது தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் முத்திரை. வாடிக்கையாளர்கள், தரமற்றவற்றை வாங்காமல் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட முத்திரை (BIS) என்பதால், ஹால்மார்க் முத்திரை தங்கத்தின் தரத்திற்கான முன்னிலைப்படுத்தப்படுகிறது. 22 காரட் (916) தங்கமாக இருந்தாலும், 8 கிராம் ஆபரணத்தில், 7.328 மில்லி கிராம்தான் தூய்மையான தங்கம் இருக்கிறது. மீதம் 0.672 மில்லி கிராம் செப்பு அல்லது வேறு உலோகங்கள் கலக்கப்படுகின்றன.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash

இது தங்கத்தை ஆபரணங்களாக மாற்றுவதற்காகச் செய்யப்படுவது. ஹால்மார்க் முத்திரை பெறாத மற்றும் மக்களை ஏமாற்றுவதற்கென்றே இருக்கும் நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் இந்தக் கலப்படத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். இத்தகைய கலப்பட தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர்களும், `916 தங்கம்’ எனப்படும் தங்கத்துக்கு தரும் பணத்தையே கொடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் இனி ஜாக்கிரதையாக இருங்கள். சமீபத்தில் இந்திய அரசாங்கம் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கியுள்ளது. அதனால் அந்த முத்திரை இருக்கும் தங்க நகைகளை மட்டுமே வாங்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எடையில் ஏமாற்றம்!

இந்தியாவில் தங்கத்தை, ஆபரணங்களாக மாற்றும்போது நகைக்கடைக்காரர், இடைத்தரகர் என ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சுரண்டப்படுகிறது. தங்க நகை சேதாரம் மூலமாகவும் பெரும் கொள்ளை நடக்கிறது. நகைகள் வாங்கும்போது 6.78 கிராம் எடை இருந்தால், ரவுண்டாக 7 கிராம் என்று சொல்வார்கள். நகை எடை பார்க்கும் மெஷினில் ஸ்பெஷல் கீ எனப்படும் சாம்பிள் பட்டனை அழுத்தியவுடன் எடையை ரவுண்டாக மாற்றிவிடும். இப்படி சில கடைகளில் மில்லி கிராம் தங்கம் அளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் எடையைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

அட்சய திருதியை தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
அட்சய திருதியை தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கண்டுபிடிக்கும் வழிகள்!

நகைகளில் BIS என்ற குறியீடு முக்கோண வடிவில் இருக்க வேண்டும். எவ்வளவு சுத்தமான தங்கம் என்ற அளவு இருக்க வேண்டும். உதாரணமாக, தங்கத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும் எண் 958 என்று இருந்தால் அது 23 காரட் தங்கம் என்று அர்த்தம். அதுவே 916 என்றால் - 22 காரட் தங்கம், 875 என்றால் - 21 காரட் தங்கம் என்று அர்த்தம். தங்கத்தின் மதிப்பீடும், ஹால் மார்க் சென்டரின் அடையாள குறியீடும் இருக்க வேண்டும். எந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிட்டிருக்க வேண்டும். உதாரணமாக, `A’ என இருந்தால், அந்தத் தங்கம் 2000-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம். `B’ - 2001, ‘C’ - 2002, ‘D’ - 2003, ‘E’ - 2004, ‘F’ - 2005, ‘G’ - 2006, ‘H’ - 2007, ‘J’ - 2008. இதுபோல் தொடர்ந்து கணக்கிட்டுக்கொள்ளவும். ‘X’ என இருந்தால் 2022-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தங்கம் என்று அர்த்தம். மேலும் நகை வியாபாரிக்குரிய அடையாள குறியீடு இருக்க வேண்டும்.

எக்ஸ்ஆர்எஃப் மெஷின்!

தங்கத்தின் தன்மையை ஆராய பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று எக்ஸ்.ஆர்.எஃப் (XRF: x-ray-fluorescence). இதன் மூலமாக ஆபரணத்தில் எவ்வளவு சதவிகிதம் தங்கம், காப்பர், சில்வர் உள்ளது என்பது போன்ற அனைத்துத் தகவல்களும் துல்லியமாகக் கிடைக்கும்.

பெரிய கடைகளில் இந்த மெஷின் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களுக்குத் தெரிவதில்லை, சொல்லப்படுவதுமில்லை. நீங்கள் வாங்கும் தங்கத்தை எக்ஸ்.ஆர்.எஃப் மெசினில் வைத்துப் பரிசோதித்த பிறகு வாங்குவது நல்லது.

தங்கம்
தங்கம்

புகார் செய்யுங்கள்!

தங்க நகை வாங்கும்போதோ, வாங்கிய பின்னரோ தரத்திலோ, எடையிலோ, வேறு எந்தக் குறைபாடோ வாடிக்கையாளருக்கு ஏற்பட்டால், இந்தியத் தர நிர்ணய ஆணையத்திடம் complaints@bis.gov.in என்ற இ-மெயில் முகவரியில் புகார் செய்யலாம். நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், தங்களுக்கு அருகில் உள்ள நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.

ஆக, இந்த அட்சய திருதியையில் தங்கத்தை வாங்கும் போது மேலே சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு தங்கம் வாங்குங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism