Published:Updated:

பணத்துக்கு எஜமானர் ஆவது எப்படி? - பணம் சேர்க்க ஏழு வழிகள்..!

பணம் சேர்க்க ஏழு வழிகள்
பிரீமியம் ஸ்டோரி
பணம் சேர்க்க ஏழு வழிகள்

எந்தெந்த நோக்கத்துக்கு, எவ்வளவு தேவை என்பதைத் தீர்மானம் செய்து முதலீடு செய்ய வேண்டும்.

பணத்துக்கு எஜமானர் ஆவது எப்படி? - பணம் சேர்க்க ஏழு வழிகள்..!

எந்தெந்த நோக்கத்துக்கு, எவ்வளவு தேவை என்பதைத் தீர்மானம் செய்து முதலீடு செய்ய வேண்டும்.

Published:Updated:
பணம் சேர்க்க ஏழு வழிகள்
பிரீமியம் ஸ்டோரி
பணம் சேர்க்க ஏழு வழிகள்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல, பணத்தின் அருமை இந்த ‘உலகடங்கு’ நேரத்தில் அனைவருக்கும் குறிப்பாக, நடுத்தர நிலையிலிருக்கும் குடும்பத்தினருக்குத் தெரிந்திருக்கும்.

வியாபார மந்தம், வேலை இழப்பு, வருமான பாதிப்பு எனப் பல சிரமங்களை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம். மழைக் காலத்துக்குச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் ‘மூளை’யின் ஒரு ‘மூலை’யில் இருந்தாலும், சமூக அந்தஸ்து கருதி தேவையில்லாத செலவுகளைக் கடன் வாங்கிச் செய்திருப்போம். ஒரு வீட்டுக்கு இரண்டு வீடாகக் கடன் வாங்கி வாங்கினோம். பண விஷயத்தில் இனியாவது அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் அமைந்த புத்தகம்தான் அபிஷேக் குமார் எழுதிய ‘மாஸ்டர் யுவர் மணி, மாஸ்டர் யுவர் லைஃப்’ (Master Your Money, Master Your Life). ‘விஸ்டம் ட்ரீ’ பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

பணத்துக்கு எஜமானர் ஆவது எப்படி? - பணம் சேர்க்க ஏழு வழிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேமிப்பை விதையுங்கள்!

“விதை விதைத்து அறுவடை செய்வது வரை என்னென்ன நடவடிக்கைகளை ஒரு விவசாயி செய்வாரோ, அவற்றைப்போல நாம் பணத்தைப் பெருக்குவதற்கான விதையை நட்டு, ‘கடன்’ என்ற ‘பூச்சி’களைக் கொன்று, பயிரைச் செழிக்க வைக்கத் தண்ணீர், உரம் இடுவதுபோல பணத்தைப் பெருக்கத் தேவையானவற்றைச் செய்து... ‘பழம்’ என்ற பலனை அனுபவிக்க வேண்டும்” என்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

இங்கு `விதை’ என அவர் குறிப்பிடுவது நம்முடைய நோக்கங்கள். ``எந்தெந்த நோக்கங்களுக்கு எப்போது, எவ்வளவு தேவை என்பதை நன்கு தீர்மானம் செய்துகொண்டு அதற்கேற்ப சேமிப்புகளையும் முதலீடுகளையும் செய்ய வேண்டும்’’ என்கிறார்.

முதலீடு
முதலீடு

பத்து மடங்கு வித்தியாசம்!

“1979-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்களிடம், ‘எதிர்காலத்துக்கென்று ஏதாவது நோக்கங்களும் அதை அடைவதற்கான திட்டமும் இருக்கிறதா?’ என்று கேட்டபோது, 3% மாணவர்கள் மட்டுமே ‘ஆம்’ என்று பதில் சொன்னார்கள். அதே மாணவர்களிடம் பத்து வருடங்கள் கழித்து ஆய்வு செய்தபோது, அவர்களின் வருமானம் அவர்களுடன் படித்த மற்ற மாணவர்களின் வருமானத்தைவிட பத்து மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து நிதி சார்ந்த திட்டமிடல் எந்த அளவுக்கு முக்கியம் என்பது புரியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஐந்து நிதிச் சூத்திரங்கள்..!

பணம் சேர்க்க விரும்புபவர்களுக்கு ‘ஃபைவ் ஃபண்ட்ஸ் ஃபண்டா (Five Funds Funda)’ என்ற ஐந்து நிதிச் சூத்திரங்கள் அவசியம். மாதந்தோறும் சம்பளம் வாங்கியவுடன் முதலீடு, சேமிப்புக்கென்று ஒரு வங்கிக் கணக்குத் திறந்து நிகர வருமானத்தில் 10 சதவிகித்தைப் போட்டு வைத்துவிட வேண்டும். இரண்டாவதாக, நெருக்கடிநிலையைச் சமாளிக்கும் பொருட்டு ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் 10% போட்டு வைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, அதிக விலையுள்ள பொருள்கள் (கார், பைக், ரெஃப்ரிஜிரேட்டர் போன்றவை) வாங்குவதற்கு என்று ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கி, அதில் ஒரு 10% பணத்தைப் போட்டு வைத்துவிட வேண்டும். நான்காவதாக, குதூகலச் செலவுகளுக்கென்று ஒரு கணக்குத் தொடங்கி அதில் ஒரு 10 சதவிகிதமும், இறுதியாக அத்தியாவசியத் தேவைகளுக்கென்று மீதமுள்ள 60 சதவிகிதத்தையும் ஒதுக்கி அதை அந்தந்தத் தேவைகளுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்” என்று சொல்லும் ஆசிரியர், இது எப்படிச் சாத்தியம் என்பதைப் பல்வேறு உதாரணங்கள் மூலம் எடுத்துச் சொல்கிறார்.

முதலீடு
முதலீடு

“அத்தியாவசியக் கணக்கிலிருக்கும் 60 சதவிகிதத் தொகையை மாதாந்தர பலசரக்கு, மாதத் தவணை, எரிபொருள், கல்விக் கட்டணம், மின்சாரம், வீட்டு வரி/தண்ணீர் வரி செலுத்துவது போன்ற செலவுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு ஏதாவது ஒரு கணக்கில் பணம் அதிகமிருக்கிறது என நினைத்தால், அதைச் சேமிப்பு/முதலீட்டுக் கணக்கில் போடலாம். வேறு எந்தவொரு காரணத்துக்காகவும்/தேவைக்காகவும் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கென ஒதுக்கிவைத்திருக்கும் பணத்தில் கண்ணையும் கையையும் வைக்கக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறும் ஆசிரியர், இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிடுகிறார்.

எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

அவை... 1. கடன் அட்டையைப் (கிரெடிட் கார்டு) பயன்படுத்துவதை அறவே தவிர்த்து, டெபிட் கார்டை உபயோகிக்கலாம். ஏனெனில், நாம் செலவு செய்யும் தொகை நமது கணக்கிலிருந்து உடனடியாக எடுக்கப்பட்டுவிடுவதால், நமக்கு அந்தக் கணக்கில் இருக்கக்கூடிய இருப்பு உடனடியாகத் தெரியவரும். இதனால் செலவழிப்பதில் கட்டுப்பாடு இருக்கும். ‘இல்லை, என்னால் செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்’ என்பவர்கள் கடன் அட்டையைப் பயன்படுத்தலாம். (இருக்கும் கடன்களிலேயே அதிக வட்டி விகிதம் வசூலிக்கும் கடன், கடன் அட்டைக் கடன்தான்!)

2. ஒரு வீட்டுக்கான மாதத் தவணை செலுத்தி வரும்போது முதலீட்டுக்கென்று வேறொரு வீட்டை வாங்க, கடன் வாங்குவது கூடவே கூடாது. அதில் கிடைக்கும் வாடகை அந்த வீட்டுக்கான மாதந்தர தவணை செலுத்தவே போதாது என்பதுடன், வீட்டுக் கடன்களில் ஆரம்ப மாதங்களில் நாம் செலுத்தும் தவணைத் தொகையில் அதிக தொகை வட்டிக்கென்று எடுத்துக் கொள்ளப்படும். எனவே, சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதி வட்டியாகவே செலவழிந்துவிடும்.

3. முதல் வீடு வாங்கும்போதுகூட முன்தொகை (Down Payment) அதிகம் கொடுத்து, சிறிதளவு கடன் வாங்குவது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஷூரன்ஸ் சேமிப்பல்ல!

4. இன்ஷூரன்ஸை முதலீடு, வரிச் சேமிப்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கவசமாகக் கருதி (`நமக்கு ஏதாவது விபத்து நேர்ந்தால், குடும்பத்தினருக்குப் பயன்படும்’ என்ற எண்ணத்தில் மட்டும்) ‘டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. அப்படி எடுக்கும்போது 65-70 வயது வரை இருக்கும்படி எடுத்துக்கொள்ளலாம்.

முதலீடு
முதலீடு

5. மேற்சொன்ன கணக்குகளில் முதல் கணக்கில் சேரும் பணத்தை பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், பி.பி.எஃப் போன்றவற்றிலும், இரண்டாவது, மூன்றாவது கணக்குகளில் சேரும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட்டிலும், நான்காவது, ஐந்தாவது கணக்கில் இருக்கும் பணத்தை சேமிப்புக் கணக்கிலும் வைத்துக் கொள்ளலாம் (காரணம், இவையிரண்டும்தான் அடிக்கடி பயன்படுத்தப்படக்கூடியதவை).

6. போனஸ் கிடைக்கும்பட்சத்தில் தேவையில்லாத செலவுகளைச் செய்யாமல் அதைக்கொண்டு அதிக வட்டி விகிதமுள்ள கடனை அடைக்க முயலுங்கள்.

7. ஓய்வு பெறும்போது ‘எனக்கு இவ்வளவு தேவை’ என்று முடிவு செய்து நிதிநிலைத் திட்டத்தை வகுப்பதைவிட, ‘இப்போது என்னால் எவ்வளவு சம்பாதிக்க முடியும்’ என்பதிலிருந்து உங்களுடைய நிதிநிலைத் திட்டத்தை வகுக்க வேண்டும். இதுதான் ‘Pay Yourself First’ கொள்கை.

கோவிட்-19 நமக்குப் புகட்டும் பாடங்களில் இந்த நிதி மேலாண்மை முக்கியமானது. இதற்கான யோசனைகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அவசியம் எல்லோரும் படிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism