பிரீமியம் ஸ்டோரி

பட்ஜெட் 2021

எதிர்வரும் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சம்பளதாரர்களின் கவனத்தை ஈர்த்த அறிவிப்பு என்றால், பிராவிடன்ட் ஃபண்டில் (பி.எஃப்) ஓர் ஊழியர் ஒரு நிதி ஆண்டில் செலுத்தும் தொகை ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால் அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி உண்டு என்ற அறிவிப்புதான்.

ப.முகைதீன் 
சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

நான்கு வகை பி.எஃப்...

பி.எஃப் சட்டபூர்வ பி.எஃப் (Statutory PF), அங்கீகரிக்கப்பட்ட பி.எஃப் (Recognised PF), அங்கீகாரமற்ற பி.எஃப் (Non recognised PF) மற்றும் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF) என நான்கு வகைப்படும். இதில் இரண்டாவது வகையான அங்கீகரிக்கப்பட்ட பி.எஃப் மூலம் கிடைக்கும் வட்டிக்கு தற்போது வரி விதிக்கப்பட்டுள்ளது.

பி.எஃப்
பி.எஃப்

அங்கீகரிக்கப்பட்ட பி.எஃப்...

வருமான வரித்துறை ஆணையத்தின் (Ccommionarate of Income Tax) அங்கீகாரம் பெற்று தொடங்கப்படுவதால், இது அங்கீ கரிக்கப்பட்ட பி.எஃப்பாக உள்ளது. அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள், சுரங்கத் தொழிலகங்கள், பண்ணைகள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் இ.பி.எஃப் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாதம்தோறும் செலுத்தும் 12% கட்டாய சந்தா மற்றும் விருப்பச் சந்தா (Voluntary PF) ஆகிய இரண்டின் கூட்டுத் தொகை ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும்பட்சத்தில் அதற்கான வட்டி வரிக்கு உட்படும் என்பதே தற்போதைய அறிவிப்பு.

பி.எஃப் கணக்கை தாமே நிர்வகிக்கும் (Exempted establishment) நிறுவன ஊழியர்களின் பி.எஃப் சந்தாவுக்கும் தற்போதைய வட்டிக்கு வரி என்கிற அறிவிப்பு பொருந்தும்.ஆனால், ஜி.பி.எஃப், சி.பி.எஃப் போன்ற பிராவிடன்ட் ஃபண்டு களுக்கு தற்போதைய வட்டிக்கு வரி அறிவிப்பு பொருந்தாது.

இது புதிதல்ல...

இப்போது வந்திருக்கும் அறிவிப்புக்குப் பிறகுதான் இ.பி.எஃப் வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது என்று நினைக்க வேண்டாம். இ.பி.எஃப் வட்டிக்கு வரி உண்டு என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாமல் உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பிராவிடன்ட் ஃபண்டுக்கு அதாவது, இ.பி.எஃப்க்கு அனுமதிக்கப்படும் வட்டி விகிதம் 12 சதவிகிதத்துக்கு மேற்பட்டால் வட்டிக்கு வரி கட்ட வேண்டும் என்பது 31.08.2010 வரை இருந்து வந்த விதி. ஆனால், வட்டி விகிதம் அந்த அளவுக்கு உயரவே இல்லை. எனவே, வட்டி கட்ட வேண்டிய அவசியம் கடந்த காலத்தில் ஏற்படவில்லை.

ஆனால், 1.10.2010 முதல் வட்டிக்கான விதி மாற்றப்பட்டது. அதன்படி, இ.பி.எஃப்-கான வட்டி விகிதம் 9.5 சதவிகிதத்துக்கு மேற்பட்டால் அந்த வட்டி சம்பள வருமானமாகக் கணக்கிடப்படும். வரிக்கு உட்படும் என்ற விதி இன்றைய தேதி வரை நடைமுறையில் உள்ளது. ஆனால், வட்டி விகிதம் உயரவே இல்லை. எனவே, வரிக்கான வரம்பை வட்டி விகிதத்தின்மேல் நிர்ணயிக் காமல் செலுத்தப்படும் சந்தாவுக்கான வரம்பு மீது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதியின்படி, கட்டாய சந்தா மற்றும் விரும்பிச் செலுத்தும் வி.பி.எஃப் இரண்டின் கூட்டுத் தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.20,833 என்ற வரம்பைத் தாண்டுவோரின் வட்டி மட்டுமே வரிக்கு உட்படும். இதைவிடக் குறைவாகச் செலுத்துபவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

மாற்று வழி

இ.பி.எஃப்பில் 12% சந்தா கட்டாயம். எனவே, தவிர்க்க முடியாது. அதே சமயம், இ.பி.எஃப் மட்டுமே ஓய்வுக் காலத்துக்குப் போதுமானதாக இருக்காது. எனவே, வி.பி.எஃப் செலுத்த முடிந்தவர்கள் அந்தத் தொகையை பி.பி.எஃப் கணக்கில் செலுத்த ஆரம்பிப்பது மாற்று வழியாக அமையும். ஆனால், இதில் வட்டி வருமானம் சிறிது குறைவாக இருக்கும். வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு