Published:Updated:

இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

small cap investments
பிரீமியம் ஸ்டோரி
News
small cap investments

மியூச்சுவல் ஃபண்ட்

ஸ்மால்கேப் ஃபண்டுகளின் என்.ஏ.வி 7% முதல் 20% வரை இறக்கம் கண்டுள்ளன. இந்த ஃபண்டுகளில் ஒரேமுறை முதலீடு செய்தவர் களின் முதலீட்டு மதிப்பும் எஸ்.ஐ.பி மூலம் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறவர்களின் முதலீட்டு மதிப்பும் குறையவே செய்துள்ளன. இந்த நிலையில், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்கள் இனி என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்.

சந்தை மதிப்பு சுமாராக ரூ.10,000 கோடிக்கும் கீழ் உள்ள நிறுவனப் பங்குகளில் ஸ்மால்கேப் ஃபண்டுகள் முதலீடு செய்கின்றன. அதாவது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை, சந்தை மதிப்பின்கீழ் வரிசைப்படுத்தும்போது (பெரிதிலிருந்து சிறிதாக), 251-வது ரேங்கிற்குமேல் உள்ள நிறுவனங்களை ஸ்மால்கேப் நிறுவனங்கள் என அழைக்கிறோம். ஸ்மால்கேப் ஃபண்டுகள் தங்களது 65 சதவிகிதத்திற்கு அதிகமான முதலீட்டை இந்த வகை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது செபியின் விதிமுறை ஆகும்.

இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

பத்து ஆண்டுகள் முதலீடு

ஸ்மால்கேப் நிறுவனங்கள் அதீத வளர்ச்சி தரக்கூடியவை என்றாலும், எதிர்பார்த்த வளர்ச்சியைத் தராமல் போகக்கூடிய அளவுக்கு ரிஸ்க் கொண்ட நிறுவனங்களும் அதிகம். அதேசமயம், கீழே விழுந்தாலும் வேகமாக மேலெழுந்து வரக்கூடிய நிறுவனங் களும் ஸ்மால்கேப்பில் பல உள்ளன. இந்த வகை நிறுவனங்களும் சரி, அதனால் இந்த வகை ஃபண்டுகளும் சரி, நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை என்றாலும், இடைப்பட்ட காலங்களில் ஏற்ற இறக்கத்தை அதிகமாகக்கொண்டிருக்கும். ஆகவே, இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, முதலீட்டுக் காலத்தைக் குறைந்தபட்சம் 10 ஆண்டு களாக வைத்துக்கொள்வது நன்மைப் பயக்கும்.

சந்தை ஏறுமுகத்தில் இருக்கும்போது, இந்த வகை ஃபண்டுகள் வருமானத்தை அள்ளித் தரும். அதேசமயம், சந்தை இறங்குமுகமாக இருக்கும் போது, இந்த வகை ஃபண்டுகளில் ஏற்படும் நஷ்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே, இந்த வகை ஃபண்டுகளில், இதுபோன்ற கரடிச் சந்தையில் முதலீடு செய்வது உத்தமம். அல்லது நீண்ட காலத்துக்கு இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்ததாக அமையும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு

நிஃப்டி ஸ்மால்கேப் 100 (டி.ஆர்.ஐ) குறியீடு 7-1-2008-ம் ஆண்டு உச்சத்தில் 6,408-ஐ தொட்டுள்ளது. அதே குறியீடு தொடர்ந்துவந்த கரடிச் சந்தையில் 1465 (09-03-2009-ல்) என்ற லெவலுக்குக் குறைந்தது. உச்ச நிலையிலிருந்து இது சுமார் 77% வீழ்ச்சி ஆகும். அதே குறியீடு பல ஏற்றங்களுக்குப் பிறகு 15-1-2018-ல் 11521 என்ற உச்சத்தைத் தொட்டது. இது கிட்டத்தட்ட 10 வருடங்களில் 686% வளர்ச்சி ஆகும். இந்தக் குறியீடு தற்போது (17-9-2019) 6737 என்ற அளவில் உள்ளது. இது உச்சநிலையிலிருந்து கிட்டத்தட்ட 42% வீழ்ச்சி ஆகும். (பார்க்க, நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு வரைபடம்) இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பெரும்பாலான ஸ்மால்கேப் ஃபண்டுகள் ஸ்மால்கேப் குறியீட்டைவிடக் குறையும்போது குறைவாகக் குறைந்துள்ளன. அதேசமயம், ஏறும் போது குறியீட்டைவிட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளன. இது ஸ்மால்கேப் ஃபண்டுகளின் சிறப்பான ஃபண்ட் மேலாண்மையைக் காண்பிக்கிறது.

இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

வருமான ஒப்பீடு

நாம் அட்டவணை-1-ல் ஸ்மால்கேப் ஃபண்டு களின் ஒரு முறை முதலீட்டின் வருமானத்தைக் கொடுத்துள்ளோம். 10 ஆண்டுக் காலகட்டத்தில் சிறப்பான வருமானத்தை இந்தக் கரடிச் சந்தை யிலும் கொடுத்துள்ளன. 5 ஆண்டுக் காலகட்டத்திலும் பல ஃபண்டுகள் நல்ல வருவாயைக் கொடுத்துள்ளன. ஆனால், கடந்த ஓராண்டில் ஒரு ஃபண்டைத் தவிர (ஆக்ஸிஸ் ஸ்மால்கேப்) அனைத்து ஃபண்டுகளும் நெகட்டிவ் வருமானத்தைக் கொடுத்துள்ளன. இதுவே சந்தை ஏறும்போது, அனைத்துக் காலகட்டங்களிலும் இந்த வகை ஃபண்டுகளின் வருமானம் பிரமாதமாக இருக்கும். குறிப்பிட்ட ஆண்டுகளில்/ கால கட்டங்களில் (காளைச் சந்தையில்) 3 இலக்க வருமானத்தைக்கூட இந்த வகை ஃபண்டுகள் தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அட்டவணையில் கொடுத்துள்ள சில ஃபண்டுகள் செபி விதிமுறைகளின்படி, சமீப காலத்தில்தான் ஸ்மால்கேப் ஃபண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

ஸ்மால்கேப் ஃபண்டுகளின் கடந்தகால எஸ்.ஐ.பி வருமானம் அட்டவணை-2-ல் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களாக எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து வருபவர் களுக்குக்கூட வருமானம் தற்போது திருப்திகரமாக இல்லை என்பதுதான் உண்மை. 10 வருட எஸ்.ஐ.பி வருமானம் சிறப்பாக உள்ளது. அடுத்த ஓரிரண்டு ஆண்டுகளில் ஸ்மால்கேப் குறியீடு மேலெழும்பி வரும்போது, இந்த நஷ்டம்/ குறைவான வருமானம் அனைத்தையும் சேர்த்து இந்தவித ஃபண்டுகள் கொடுத்துவிடும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.

இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

ஸ்மால்கேப் ஃபண்டுகளில் தற்போது முதலீடு செய்துள்ள / செய்துவரும் முதலீட்டாளர்கள் என்ன செய்யவேண்டும்? இந்த வகை ஃபண்டுகள் அதிக ரிஸ்க் மற்றும் ரிவார்டு உள்ளவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். நீண்டகால நோக்கங்களுக்காகத்தான் (10 வருடங்களுக்கு மேல்) ஒருவர் இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்திருப்பார். தற்போது ஸ்மால்கேப் குறியீடு நாம் மேலே கண்டதுபோல, 42% வீழ்ச்சியில் உள்ளது. ஆகவே, இந்தத் தருணத்தில் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருவதே நல்லது. முடிந்தால் அவ்வப்போது கூடுதல் முதலீடு செய்து டாப்-அப் செய்து கொள்வது நல்லது. மொத்த முதலீடு செய்யும்போது எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்யலாம்.

கரடிச் சந்தையில் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது நாம் அதிகமாகப் பயப்படத் தேவையில்லை. அடுத்த ஓரிரு வருடங்களில் நமது பொருளாதாரம் மேலெழும்பி வருகையில் இந்த வகை ஃபண்டுகள் அதீத வருமானத்தைத் தரும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. தற்போது ஏற்பட்டுள்ள பேப்பர் நஷ்டத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். இதுபோன்ற நஷ்டங்கள் இந்த வகை ஃபண்டுகளில் சகஜம். எனவே, கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ரிஸ்க் எடுக்க அஞ்சுபவர்கள், குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், மீடியம் ரிஸ்க்கை நாடுபவர்கள், நிரந்தர வருமானத்தைத் தேடுபவர்கள், சீனியர் சிட்டிசன்ஸ் போன்றோர் இந்த வகை ஃபண்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

முதலீட்டிற்கு உகந்த சில ஸ்மால்கேப் ஃபண்டு களைப் பற்றிய சிறு குறிப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்

கடந்த ஒரு வருட காலத்தில் பாசிட்டிவ் வருமானத்தைக் கொடுத்துள்ள ஒரே ஃபண்ட் இதுதான். இதன் ஃபண்ட் மேனேஜர் அனுபவம் திவாரி ஆவார். இது ஆரம்பத்தில் குளோஸ் எண்டட் ஃபண்டாக இருந்து, பிறகு ஓப்பன் எண்டட் திட்டமாக மாற்றப்பட்டது. என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ், சிட்டி யூனியன் பேங்க், மாஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இந்த ஃபண்ட் கச்சிதமாக 34 பங்குகளில் மட்டுமே தனது முதலீட்டை வைத்துள்ளது. ஃபைனான்ஸ், கன்ஸ்ட்ரக் ஷன் மற்றும் கெமிக்கல்ஸ் இதன் டாப் துறை சார்ந்த முதலீடுகளாகும். நவம்பர் 2013-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், ஆரம்பத் தேதியிலிருந்து இதுவரை ஆண்டிற்கு (சி.ஏ.ஜி.ஆர்) 20 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானத்தைக் கூட்டு வளர்ச்சி அடிப்படையில் கொடுத்துள்ளது.

மொத்த கேட்டகிரியும் கரடிகளின் பிடியில் இருக்கும்போது, தொடர்ந்து முதலீட்டைத் தக்க வைத்துக்கொள்வது தான் சிறந்தது. மேலும், உபரியாக கையில் பணம் இருந்தால், அதையும் டாப்-அப் முதலீடு செய்துகொள்ளலாம்.

எல் அண்டு டி எமர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட்

இதன் ஃபண்ட் மேனேஜர் சௌமேந்திரநாத் லாஹிரி ஆவார். இவரே இந்த நிறுவனத்தின் சி.ஐ.ஓ-வும் ஆவார். மே 2014-ல் இந்த ஃபண்ட் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை 15.70% சி.ஏ.ஜி.ஆர் வருமானம் கிடைத்துள்ளது. 83 பங்குகளைத் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. கன்ஸ்ட்ரக் ஷன், இன்ஜினீயரிங் மற்றும் சர்வீசஸ் இதன் டாப் ஹோல்டிங்ஸ் ஆகும். மஹாநகர் கேஸ், வி.எஸ்.டி இண்டஸ்ட்ரீஸ், ஸனோஃபி இந்தியா, சோபா டெவலப்பர்ஸ், கிரைண்ட்வெல் நார்ட்டன் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்

2010-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், ஆரம்பிக்கும்போது முதலீடு செய்தவர்களுக்கு இதுவரை 15.42% சி.ஏ.ஜி.ஆர் வருமானத்தைக் கொடுத்துள்ளது. தீபக் நைட்ரைட், ஸைடஸ் வெல்னெஸ், நவீன் ஃப்ளோரின், ஓரியன்ட் எலெக்ட்ரிக் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. தனது போர்ட் ஃபோலியோவில் 117 பங்குகளை வைத்துள்ளது. கெமிக்கல்ஸ், இன்ஜினீயரிங், ஃபைனான்ஸ், எஃப்.எம்.சி.ஜி போன்ற துறைகளில் அதிக வெயிட்டேஜைக் கொண்டுள்ளது. சமீர் ரச் இந்த ஃபண்டை நிர்வகித்து வருகிறார்.

இறக்கத்தில் ஸ்மால்கேப் ஃபண்டுகள்... என்ன செய்யலாம் முதலீட்டாளர்கள்?

டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட்

2007-ல் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது தொடங்கப்பட்ட ஃபண்ட் இது. தொடங்கப்பட்ட போது முதலீடு செய்தவர்களுக்கு சி.ஏ.ஜி.ஆர் வருமானம் 13.95 சதவிகிதத்தை இதுவரை கொடுத்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர் வினீத் சாம்ரே மற்றும் ரேஷம் ஜெயின் ஆவார்கள்.மொத்தம் 75 பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், ஃபைனான்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக் ஷன் இதன் டாப் துறை சார்ந்த முதலீடு களாகும். இப்கா லேப்ஸ், டி.சி.பி பேங்க், அதுல், எஸ்.ஆர்.எஃப் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன.

ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்

2006-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், தொடங்கியபோது முதலீடு செய்தவர்களுக்கு சி.ஏ.ஜி.ஆர் வருமானமாக 12.07 சதவிகிதத்தைக் கொடுத்துள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் ஆர்.ஜானகிராமன் மற்றும் ஹரி ஷியாம் சுந்தர் ஆவார்கள். ஹெச்.டி.எஃப்.சி பேங்க், பிரிகேட் என்டர்பிரைசஸ், வோல்டாஸ், தீபக் நைட்ரைட் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. இதன் டாப் துறை சார்ந்த முதலீடுகள் ஃபைனான்ஸ், கன்ஸ்ட்ரக் ஷன் மற்றும் கெமிக்கல்ஸ் ஆகும்.

ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட்

முன்னர் மார்கன் ஸ்டான்லி நிறுவன ஃபண்டாக இருந்தது; அந்த நிறுவன ஃபண்டுகளை ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கிய பிறகு பெயர் மற்றும் கேட்டகிரி மாற்றப்பட்டு, ஸ்மால்கேப் ஃபண்டாக மாறியுள்ளது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் சிராக் சேத்தல்வத் மற்றும் அமர் கல்குண்ட்ரிகர் ஆவார்கள். சர்வீசஸ், கெமிக்கல்ஸ் மற்றும் ஃபைனான்ஸ் இதன் டாப் துறை சார்ந்த முதலீடு களாகும். என்.ஐ.ஐ.டி டெக்னாலஜீஸ், டி.சி.பி பேங்க், சொனாட்டா சாஃப்ட்வேர் போன்ற பங்குகள் இதன் டாப் ஹோல்டிங்ஸாகும்.

நாம் மேலே பரிந்துரை செய்த ஃபண்டுகள் தவிர வேறு பல ஸ்மால்கேப் ஃபண்டுகளிலும், சமீபத்தில் வெளிவந்த ஸ்மால்கேப் ஃபண்ட் என்.எஃப்.ஓ-க்களி லும் பலரும் முதலீடு செய்திருப்பார்கள். அவ்வாறு முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். மொத்த கேட்டகிரியும் கரடிகளின் பிடியில் இருக்கும்போது, தொடர்ந்து முதலீட்டைத் தக்கவைத்துக் கொள்வதுதான் சிறந்தது. மேலும், உபரியாக கையில் பணம் இருந்தால், அதையும் டாப்-அப் முதலீடு செய்துகொள்ளலாம். உங்கள் முதலீடு எதிர்காலத்தில் லாபகரமாக மாறட்டும்!