அஸெட் அலோகேஷன் பற்றி, தொடர்ந்து ஏழாவது வருடமாக நாணயம் விகடன் வாசகர்களுடன் பகிர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டுக்கான அஸெட் அலோகேஷன் பற்றிச் சொன்னபோது சில விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். அவை...

ஆபரணத் தங்கத்துக்கான தேவை குறைந்துகொண்டிருந்தாலும், ஆபரணம் அல்லாத தங்கத்துக்கான தேவை அதிகரித்துவருகிறது. எனவே, தங்கத்தில் சிறிது முதலீடு செய்வது நல்லது. மேலும் கிரெடிட் ரிஸ்க் இல்லாத கடன் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் நீண்டகால வட்டி விகிதக் குறைவுக்கு இடையே இருக்கிறோம். இதனால் கடன் திட்டங்களின் மதிப்பு உயர வாய்ப்பிருக்கிறது. ரியல் எஸ்டேட் நீண்டகாலமாகவே இறக்கத்தில்தான் இருந்துகொண்டிருக்கிறது. இதற்கு, பெரிய அளவில் டிமாண்ட் இல்லாதது, ரெரா உள்ளிட்ட விதிமுறைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்காத நெருக்கடி நிலை போன்றவை காரணங்கள்.

பங்குச் சந்தையில் லார்ஜ்கேப் குறியீடுகள் மதிப்பளவில் பெரிய இறக்கம் அடையவில்லை என்றாலும், மொத்தமாகப் பார்க்கும்போது இந்தியப் பங்குச் சந்தை இறக்கத்தை அடைந்திருக்கிறது. நுகர்வு அதிகரிப்பதன் காரணமாகப் கன்ஸ்யூமர் டியூரபிள், சரக்குப் போக்குவரத்து, அழகுசாதனங்கள், ரீடெயில், பொழுதுபோக்கு, ஹோட்டல்கள், ஆரோக்கியப் பராமரிப்பு ஆகியவை பலனடையும் துறைகளாக இருக்கின்றன என்று கூறியிருந்தேன்.

பெரும்பாலும் 2019-ம் ஆண்டு குறித்து கணித்தவை நடந்திருக்கின்றன. லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருந்தாலும், பங்குச் சந்தையின் பிற பகுதி இறக்கத்தைச் சந்தித்திருப்பது உட்பட. அதேபோல், `கவனிக்கலாம்’ என்று சொல்லப்பட்ட துறைகளும் சந்தைச் சவால்களுக்கு மத்தியிலும் நன்றாகச் செயலாற்றியிருக்கின்றன.

பல கேள்விகள்

இப்போது அடுத்த மூன்றாண்டுகளுக்கான அஸெட் அலொகேஷன் பரிந்துரைகள் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு பெரும்பாலான முதலீட்டாளர்களிடம் எழும் கேள்விகளைப் பார்க்கலாம்.

`சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் வரலாறு காணாத உச்சத்தில் இருந்தாலும், போர்ட்ஃபோலியோ ஏன் இறக்கத்தில் இருக்கிறது... சந்தை ஒரு சில பங்குகளின் ஏற்றத்தால் உச்சம்கண்டிருக்கிறதே தவிர, பெரும்பாலான பங்குகள் இறக்கத்தில் உள்ளன. இந்தப் போக்கு தொடருமா?’

`தற்போது இந்தியாவில் அனைத்துத் துறைகளுமே மந்தநிலையைச் சந்தித்திருப்பதை ஜி.டி.பி வளர்ச்சி குறைவதன் மூலம் அறிய முடிகிறது. இந்த மந்தநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்... நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக்கொள்ளலாமா... பெரும்பாலான சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை வெகுவாகக் குறைத்துள்ளன; பல நாடுகளில் வட்டி விகிதம் எதிர்மறையாக உள்ளது; ஆனால், இந்தியாவில் வட்டி விகிதம் எதிர்பார்த்த அளவுக்குக் குறையவில்லை. இதனால் கடன் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா?’

`ரியல் எஸ்டேட்துறை விலை குறைந்துள்ளது; பரிவர்த்தனை அளவும் வெகுவாகச் சரிந்துள்ளது. இப்போது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாமா அல்லது இந்த இறக்கம் தொடரும் பட்சத்தில் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கலாமா... தங்கத்தில் முதலீட்டை அதிகரிக்கலாமா...’ இப்படிப் பல கேள்விகள். அவற்றுக்கான பதில்களை இனி விரிவாகப் பார்ப்போம்.

தங்கம்

2012-13 காலகட்டத்தில் உச்சத்தை அடைந்த தங்கம், பின்னர் சர்வதேச அளவில் 20% வரை வீழ்ச்சிகண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவிழந்ததால் தங்கத்தின் விலை குறைய ஆரம்பித்தது. ஆனால், அண்மையில் சற்று ஏற்றம் கண்டிருக்கிறது.

தற்போது சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், குறிப்பாக அமெரிக்கா போன்ற முக்கியப் பொருளாதார நாடுகளில் குறிப்பிடத்தக்க பற்றாக் குறையும், முதலீட்டாளர் களிடையே நிதிசார் சொத்துகள் மீதான பயமும் அதிகரித்துள்ளது. நிதிச் சந்தைகள் நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கும் போது அந்த இடத்தைத் தங்கம் நிரப்புகிறது. எனவே, சர்வதேசச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தங்கத்துக்கான தேவை முதலீட்டாளர் களிடையே அதிகரிக்கும். இதனால் 10 - 15% முதலீட்டைத் தங்கத்தில் வைத்திருக்கலாம். இதில் கிடைக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், தங்கத்திலிருக்கும் முதலீடு போர்ட்ஃபோலியோவை நிலையாக வைத்திருக்க உதவும்.

கடன் ஃபண்டுகள்

கடன் ஃபண்டுகள் இரண்டு வகைகளில் வருமானம் ஈட்டித் தருகின்றன. ஒன்று, பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம். இரண்டு, வட்டிவிகிதம் குறையும்போது பத்திரங்களில் ஏற்படும் விலை உயர்வு தரும் வருமானம். பத்திரங்களின் விலை வட்டி விகிதத்துக்கு மாறாக இயங்குவதால், வட்டி விகிதம் உயரும்போது கடன் பத்திரங்களின் விலை குறையும்.

ஆனால், இந்தத் திட்டங்களில் குறுகியகால முதலீடுகளை மேற்கொண்டால் அவை ரிஸ்க்காக மாறலாம். வட்டி விகித உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய அரசு அதிகமாகக் கடன் வாங்குவது, பணவீக்கம் உயர்வது ஆகியவை. இவை பெரும்பாலும் நடக்க வாய்ப்பில்லை ஏனெனில், வரும் ஆண்டுகளில் இவை கட்டுப்படுத்தப் படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள், பொருளாதார மந்தநிலை ஆகியவை அரசின் வரி வருவாயை பாதித்துள்ளன. இது குறுகியகாலத்துக்கே இருக்கும் என நம்புகிறோம். நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் அதிகரிக்கும்போது வரி வருவாய் உயரும். டிஜிட்டல்மயமாக்கப்பட்ட மானிய முறையும் சாதகமான முடிவுகளை அரசுக்குத் தர ஆரம்பித்திருக்கிறது. வரிச் சலுகைகள் ஆரம்பத்தில் அரசின் வருவாயை பாதித்தாலும், பொருளாதாரச் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் அளவுக்கு வரி வருவாய் உயர்ந்தால், நிலைமை சரிசெய்யப்படும். எனவே, கட்டமைப்புரீதியில் குறைவான பணவீக்கம்கொண்ட நாடாக இந்தியா நீண்டகாலம் தொடர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட்டி விகிதம் குறைக்கப் படுவதற்கான சாதகமான சூழலும் உள்ளது.

ஐ.டி துறையில் தொடர்ச்சியான வருமான வளர்ச்சி இருப்பதால் அவற்றின் நிறுவனப் பங்குகளின் விலையும் ஏற்றத்தில் இருந்துவருகின்றன.

ரியல் எஸ்டேட்

பெரும்பாலான நகரங்களில் ரியல் எஸ்டேட் விலை கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 15 - 20% வரை குறைந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டிருக்கும் சரிவு அதீத சப்ளையாலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாலும், ரெரா உள்ளிட்ட சட்டங்கள் கடுமையானதாலும் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தத் துறையிலுள்ள நெருக்கடி நீண்டகாலத்துக்குத் தொடரும் வாய்ப்பு அதிகம். எனவே, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய சிறிது காலம் பொறுத்திருந்து முடிவு செய்யுங்கள்.

நிறுவனப் பங்குகள்

2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு அதற்கு முந்தைய 20 ஆண்டு களில் செய்யப்பட்ட முதலீடுகளைவிட அதிகம். இந்தக் காலகட்டத்தில் பெரிய அளவில் முதலீடு வந்த நிலையில் ஃபண்ட் மேனேஜர்கள் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என அனைத்திலும் முதலீடு செய்தனர். லார்ஜ்கேப் குறியீட்டு சென்செக்ஸ் இந்தக் காலத்தில் 60% உயர்ந்தது. மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 100% மற்றும் 200% என்ற அளவில் உயர்ந்தன. இது போன்ற அதிக அளவிலான முதலீடுகள் செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த செபி குறிப்பிட்ட சில விதிமுறைகளை லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் தொடர்பாக கொண்டு வந்தது. ஒவ்வொரு வகை ஃபண்டுக்கும் சில வழிகாட்டுதலையும் வழங்கியது. இதனால் லார்ஜ்கேப் ஃபண்டுகள், ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளில் குறிப்பிட்ட வரம்புக்குள் மேல் முதலீடு செய்வதைத் தடுத்தது.

மொத்தப் பங்குச் சந்தையின் மதிப்பில் லார்ஜ்கேப் மட்டுமே 75% பங்குவகிக்கிறது. மற்ற மிட் மற்றும் ஸ்மால்கேப் என வரையறுக்கப் பட்டுள்ள 400 நிறுவனங் கள் 20% சந்தை மதிப்புக்கு பங்குவகிக்கின்றன. மீதமுள்ள நிறுவனங்கள் 5 சதவிகிதத்துக்கும் குறைவாகவே மொத்தச் சந்தை மதிப்பில் பங்கு வகிக்கின்றன. செபி கொண்டு வந்த விதிமுறைகளுக்குப் பிறகு, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை விற்று, லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

மேலும், பொருளாதாரச் செயல்பாடுகள் பங்குச் சந்தை நகர்வுகளில் ஏற்படுத்திய தாக்கத்தையும் காணலாம். நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார நிலை மோசமாக இருந்த நிலையிலும் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தன. இந்தக் குழப்பமான போக்கு முதலீட்டாளர்களிடம், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் சுமையால் செயல்பாடுகளில் அழுத்தத்தைச் சந்தித்துவரும் நிலையில், தனியார் வங்கிகள் தொழில்நுட்பம் மற்றும் தொடர் முதலீடு மூலம் தங்களின் கடன் வழங்கும் செயல்பாடுகளை ஊக்குவித்து தங்களின் சந்தைப் பங்களிப்பை அதிகரித்துவருகின்றன. இதனால் வங்கிசார் வணிகம் பொதுத்துறையிடமிருந்து தனியார் துறைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் ஜி.டி.பியில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்றாலும், தனியார்துறையில் அதிக பங்களிப்பைக் கொண்ட குறியீடுகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல, ஐ.டி துறையில் தொடர்ச்சியான வருமான வளர்ச்சி இருப்பதால் அவற்றின் நிறுவனப் பங்குகளின் விலையும் ஏற்றத்தில் இருந்துவருகின்றன. ஏனெனில், ஐ.டி துறை இந்தியப் பொருளா தாரத்தைச் சார்ந்ததாக அல்லாமல் சர்வதேசப் பொருளாதாரத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அதிக வேலை வாய்ப்பு களைக் கொண்டிருக்கும் துறைகளான டெக்ஸ் டைல், கட்டுமானம், ஆட்டோமொபைல் ஆகியவற்றில் மந்தநிலை ஏற்பட்டாலும், அவை சார்ந்த பங்குகளின் வெயிட்டேஜ் குறைவாக இருப்பதால் அவற்றின் செயல்பாடுகள் பங்குச் சந்தையில் பிரதிபலிப்பதில்லை. இதனால்தான் மோசமான பொருளாதார நிலையிலும், பங்குச் சந்தை உச்சத்தை நோக்கி நகர்கிறது.

வரும் ஆண்டுகளில் முறைப்படுத்தப்படாமல் இருந்த பல துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். இது பேரியல் பொருளாதாரத்தை (Macro Economic) எதிர்மறையாகப் பாதிக்கலாம். இந்தப் போக்கு மேலும் விரிவடையவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தத் துறை சார்ந்த தொழில்களில் ஏற்படும் தாக்கம், தனியார் நிதி நிறுவனங்கள், ஐ.டி மற்றும் கன்ஸ்யூமர் பொருள்கள் ஆகிய துறைகளில் அதிக பங்களிப்புக்கொண்ட சந்தைக் குறியீடு களில் தாக்கத்தை ஏற்படுத்துவது குறைவு.

ஜனவரி 2018-க்குப் பிறகு மொத்தச் சந்தையும் சரிவைச் சந்தித்த நிலையிலும், கவனிக்கத்தக்க ஒரு பாசிட்டிவ் போக்கு என்னவென்றால் புரொமோட்டர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இந்தியாவில் பங்குதாரர்களில் அதிக ஆதிக்கம் கொண்டவர்களான புரொமோட்டர்கள் சந்தை நகர்வுகளுக்கு முரண்பட்டவர்களாகவே இருப்பார்கள். 2015-2017 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சந்தை மிகச் சிறப்பாகச் செயலாற்றியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு புரொமோட்டர்கள் நிறுவனங்களில் தங்களின் பங்குகளைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்தனர்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 100-க்கும் மேலான நிறுவனங்களின் புரொமோட்டர்கள் தங்களின் பங்குகளை உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள். காரணம், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்கு விலைகள் குறைந்திருப்பது. எனவே, புரொமோட்டர்கள் தங்களின் பங்குகளை உயர்த்திக்கொண்டால், பங்கு விலை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது என நம்பலாம். எனவே, இவற்றில் முதலீடுகளை அதிகப்படுத்திக்கொள்வது முரண்பாடான உத்தி அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகிறது.

முதலீட்டாளர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழில்: திவ்யா