Published:Updated:

`ஃப்ளெக்ஸி வீட்டுக் கடன்' திட்டத்தை எந்தச் சூழலில் தேர்வு செய்யலாம்?

வீட்டுக் கடன் தொகை, திட்டச் செலவு மற்றும் கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது

சென்னை நகருக்குள் குறைந்தபட்சம் எத்தனை சதுர அடி மனையிருந்தால் வீடு கட்ட கடன் கிடைக்கும்?

- எல்.மோகன், சென்னை–17

"சென்னை பெருநகரப் பகுதிக்குள் கட்டுமானத்துக்காகக் குறைந்தபட்சம் 800 சதுர அடி பரப்பளவு மனையை (`இரண்டாவது மாஸ்டர் திட்டம்' தொகுதி- II, சென்னை பெருநகரப் பகுதி 2,026, பக்கம் 22, பாரா 25-ஐ பார்க்கவும்) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பரிந்துரைத்துள்ளது. வீட்டுக் கடன்களை அனுமதிக்கும்போது வங்கிகள் மேற்கண்ட விதிமுறைகளை கவனத்தில் கொள்ளும்.''

என் சம்பளத்துக்கு ரூ.20 லட்சம்தான் வீட்டுக் கடன் கிடைக்கும் என்கிறார்கள். எனக்கு ரூ.25 லட்சம் கடன் தேவை. இதைப் பெற வேறு ஏதாவது வழியிருக்கிறதா?

- ச.விஜயகுமார், குற்றாலம்

"வீட்டுக் கடன் தொகை, திட்டச் செலவு மற்றும் கடன் வாங்குபவரின் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. கடனை உங்கள் தகுதிக்கேற்ப வாங்குவது நல்லது. உங்கள் மனைவியும் சம்பாதிக்கிறாரென்றால், அவருடைய வருமானமும் கடன் தகுதிக்கு வருவதாகக் கணக்கிடப்படலாம். உங்களிடம் வேறு வருமான ஆதாரங்கள் இருந்தால், அதைக் கடன் வரம்புக்குக் கணக்கிட எடுத்துக்கொள்ளலாம்.

`ஃப்ளெக்ஸி வீட்டுக் கடன்' திட்டத்தை எந்தச் சூழலில் தேர்வு செய்யலாம்?

நீங்கள் `ஃப்ளெக்ஸி வீட்டுக் கடன்' (Flexi Home Loan) என்று அழைக்கப்படும் கடன் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அதில் உங்கள் தகுதிக் கடன் தொகையில் 1.2 மடங்கு கடன் கிடைக்கும். ஆரம்ப ஆண்டுகளில் குறைந்த இ.எம்.ஐ-களைச் செலுத்திவரலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக இ.எம்.ஐ செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ், 45 வயதுக்கு மிகாத மாதச் சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு மட்டுமே கடன் கிடைக்கும்.

எங்கள் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், ரியாலிட்டி தங்கக் கடனை (Realty Gold Loan) வழங்குகின்றன. அதற்கு வரிச் சலுகையும் கிடைக்கிறது. அதை நீங்கள் கருத்தில்கொள்ளலாம். தற்போது ரியாலிட்டி தங்கக் கடன் திட்டத்துக்கு எஸ்.பி.ஐ ஆண்டுக்கு 7.25% வட்டி வசூலிக்கிறது. இது மாற்றத்துக்கு உட்பட்டது."

நான் வீட்டு வசதி நிறுவனம் ஒன்றில் வீட்டுக் கடன் வாங்கவிருக்கிறேன். `கடன் தொகைக்கு இணையாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்' என்கிறார்கள். இந்த இன்ஷூரன்ஸை வாங்கித்தான் ஆக வேண்டுமா?

- விக்டர் ராஜ், கோட்டயம்

"வீட்டுக் கடன் காப்பீடு என்பது கடன் வாங்குபவர்களின் விருப்பத்தைப் பொறுத்து பெரும்பாலான வங்கிகளில் தரப்படுகிறது. மேலும், இது உங்கள் கடன் அனுமதி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்தும் இருக்கும். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி அல்லது வீட்டுக் கடன் காப்பீட்டு பாலிசியை எடுத்து கடனைப் பாதுகாப்பது எப்போதும் நல்லது."

- வீட்டுக் கடன் குறித்து நாணயம் விகடன் வாசகர்களின் மேலும் பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), சென்னை தலைமை அலுவலகத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுவசதி வாணிபப் பிரிவின் துணைப் பொது மேலாளர் பா.மணிவாசகம் பதிலளிக்கிறார். முழுமையான பகுதி இங்கே க்ளிக் செய்க... > வீட்டுக் கடன்... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம் https://bit.ly/3e7yV95

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு