ஆதரவளிக்கும் ஆயுள் காப்பீடு பாலிசி. எப்படி?

குடும்பத்தினருக்குக் கடனில்லா வாழ்க்கை!

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் குடும்பத் தேவைகளுக்காக வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் எனப் பல்வேறு கடன்களைக் வாங்கியிருப்பார். அவரின் எதிர்பாராத மறைவுக்குப் பின்னர் குடும்பத்தினரைக் கடன் சுமை பாதிக்காமலிருக்க ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க வேண்டியது அவசியம்.

பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணச் செலவு!

பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைக்கவும், அவர்களின் கல்யாணத்தை ஊரே பிரமிக்கும் வகையில் நடத்தவும் நினைத்திருப்பார்கள். இதற்கு எந்த பாதிப்பும் வராமலிருக்க, வருமானம் ஈட்டும் நபர் பெயரில் ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணையின் ஓய்வுக்காலம் துன்பமில்லாமலிருக்க...

குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, பிள்ளைகள் திருமணமாகித் தனியாகச் சென்றுவிடுவார்கள். அப்போது வாழ்க்கைத்துணையின் செலவுகளை ஈடுகட்டத் தேவையான தொகைக்கு ஆயுள் காப்பீடு எடுத்து வைத்திருப்பது நல்லது.

வருமான வரிச் சலுகை பெற...

ஆயுள் காப்பீடு பாலிசிக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தும் பிரீமியத்தில் வரிச் சலுகை கிடைக்கும். தவிர, கிடைக்கும் இழப்பீட்டுத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.