வாகனக் காப்பீட்டில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மூன்றாம் நபர் வாகனக் காப்பீடு என்பது வாகனம் வைத்திருப்பவர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய காப்பீடு. சாலையில் வாகனத்தில் செல்லும்போது உங்களால் மூன்றாம் நபர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை ஈடுசெய்வதற்குத்தான் இந்த மூன்றாம் நபர் காப்பீடு.

திட்டம் என்ன சொல்கிறது?

இதுவரை, இதன் க்ளெய்ம்களுக்கு எந்த அதிகபட்ச வரம்பும் கொடுக்காத நிலையே இருந்தது. தற்போது இதற்கு 10 லட்ச ரூபாய் எனும் வரம்பை வைக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறார்கள்.

அண்மையில் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சிலும் மத்திய நெடுஞ்சாலைத்துறையும் நடத்திய சந்திப்பில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

`மூன்றாம் நபர் காப்பீட்டு க்ளெய்மில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அதிகபட்சம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் தரத் தேவையில்லை’ என்றும், `மீதமிருக்கும் தொகையை மத்திய அரசின் மோட்டார் வாகன விபத்து நிதியிலிருந்து எடுத்துக் கொடுக்கலாம்’ என்றும் சொல்கிறது இந்தத் திட்டம்.

`விபத்து நிதியிலிருந்து கொடுக்கப்படும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக விபத்துக்குப் பொறுப்பான நபரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்’ என்றும் இந்தத் திட்டம் கூறுகிறது. இதனால், மோட்டார் வாகன விபத்து நிதியில் அரசுக்கு ஏற்படும் இழப்பை பெட்ரோல் மற்றும் டீசல்மீது செஸ் வரியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இதில் சொல்லப்படுகிறது.

விபத்து என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

ஓர் உதாரணம்!

உதாரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில், தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர் ஒருவர் பாதிக்கப்படுவதாகக்கொள்வோம். அந்த விபத்துக்கான நஷ்ட ஈடு 20 லட்சம் என மதிப்பிடப்படுகிறது. அந்தத் தொகையை மொத்தமாக இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விபத்து ஏற்பட்டவருக்கு /அவரின் குடும்பத்தினருக்குக் கொடுக்க வேண்டும். இது பழைய நடைமுறை.

தற்போது முன்மொழியப் பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, முதலில் 10 லட்ச ரூபாய் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொடுத்துவிடும். மீதமுள்ள 10 லட்ச ரூபாய் தொகையை அரசு நிதியின் மூலம் வாங்கிக்கொள்ளலாம். அந்தத் தொகையை விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரிடமிருந்து அரசு வசூல் செய்துகொள்ளும்.

மக்களுக்கு பாதிப்பா?

`இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதுதானா?’ என்று மோட்டார் வாகனக் காப்பீட்டுத் துறையில் வழக்கறிஞராக இருக்கும் வி.எஸ்.சுரேஷிடம் கேட்டோம்.

“இந்தத் திட்டம் நிறைய குழப்பங்களை உருவாக்கும். ஒரு வாடகை கார் ஓட்டுநர், டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் வாகனத்தை இடித்துவிட்டார் என்றால் வாடகை கார் டிரைவருக்கு அந்த இழப்பை ஈடு செய்யும் திறன் இருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இதனால் விபத்து நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். அது மட்டுமல்ல, இந்தப் புதிய ஃபார்முலா டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

விபத்து என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது. ஏற்கெனவே இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்காக ஒரு பெரும் தொகையைச் செலவிடும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், ஒவ்வொரு விபத்தின்போதும் நஷ்ட ஈடு செலுத்த வேண்டுமென்றால் எப்படி தொழில் செய்வது?

நம் நாட்டிலுள்ள சாலைகள் 100 சதவிகிதம் தரமானவையோ, பாதுகாப்பானவையோ கிடையாது. ஒரு சிறிய மழைக்குக்கூட சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோல் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்யாமல் சாதாரண மக்களிடமிருந்து எப்படி 100 சதவிகித ஒழுங்கை எதிர்பார்க்க முடியும்?

தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய விபத்துகளுக்கு நஷ்டஈடு கொடுப்பதேயில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தவிர்த்துவிடுகின்றன.

தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய விபத்துகளுக்கு நஷ்டஈடு கொடுப்பதேயில்லை. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தவிர்த்துவிடுகின்றன. பெரும்பாலும் நீதிமன்றத்துக்குச் சென்றே நஷ்டஈடு வாங்க வேண்டியதாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தப் புதிய ஃபார்முலா காப்பீடு நிறுவனங்களுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம். இதனால் மக்களுக்குப் பாதகம்தான்” என்றார்.

நடைமுறைக்கு வருமா?

`10 லட்ச ரூபாய் என்பது கட்டாயத் தொகை; அதற்கு அதிகமான மூன்றாம் நபர் காப்பீடு தேவை என்பவர்கள் அதிக பிரீமியம் செலுத்தி கூடுதலாகப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று ஜெனரல் இன்ஷூரன்ஸ் கவுன்சில் முன்வைக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்தப் புதிய திட்டத்துக்கு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இது நடைமுறைக்கு வருமா, வராதா என்பதைத் தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பு முடிவு செய்யும். அப்போது அது சாதாரண மக்களின் நிதி நிலையையும் மனதில்கொள்ளும் என நாம் எதிர்பார்க்கலாம்.