Published:Updated:

GOLD: `இந்தியாவில் தங்கத்தின் தேவை 79% உயர்ந்துள்ளது!' - என்ன சொல்கிறது உலக தங்க கவுன்சில்?

Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

லாக்டௌனின்போது முடக்கப்பட்ட திருமணங்கள், விழாக்களுக்காக, மக்கள் தளர்வின்போது அதிக அளவில் தங்கத்தை வாங்கினர். பல சில்லறை விற்பனையாளர்கள் மக்களின் தேவையை அறிந்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

GOLD: `இந்தியாவில் தங்கத்தின் தேவை 79% உயர்ந்துள்ளது!' - என்ன சொல்கிறது உலக தங்க கவுன்சில்?

லாக்டௌனின்போது முடக்கப்பட்ட திருமணங்கள், விழாக்களுக்காக, மக்கள் தளர்வின்போது அதிக அளவில் தங்கத்தை வாங்கினர். பல சில்லறை விற்பனையாளர்கள் மக்களின் தேவையை அறிந்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

Published:Updated:
Gold ( Photo by vaibhav nagare on Unsplash )

உலக தங்க கவுன்சில் (WGC), 2021-ம் ஆண்டின் தங்கத்தின் மதிப்பைக் குறித்த ஜூம் சந்திப்பு இன்று நடந்தது. அதில் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம், ``உலக அளவில் தங்கத்தின் தேவை 10% அதிகரித்து 4,021 டன்னாக உயர்ந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

தங்கம்
தங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இந்தியாவின் மொத்த தங்க தேவை 2021-ம் ஆண்டில் 797.3 டன்னாக உயர்ந்துள்ளது. 2020-ம் ஆண்டில் 446.4 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை, இந்த ஆண்டு 79 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட நான்காவது காலாண்டில் தங்கத்தின் தேவை மக்களிடையே கணிசமாக அதிகரித்ததை அடுத்து, தங்கத்தின் மொத்த தேவை மற்ற மூன்று காலாண்டுகளைவிட இறுதி காலாண்டில் அதிகரித்தது. அதாவது, ஆண்டின் பாதியில் லாக்டௌன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது, தடுப்பூசித் திட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவை நுகர்வோரின் உணர்வைக் கணிசமாக மாற்றியுள்ளதாகவும் கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாக்டௌனின்போது முடக்கப்பட்ட திருமணங்கள், விழாக்களுக்காக, மக்கள் தளர்வின்போது அதிக அளவில் தங்கத்தை வாங்கினர். பல சில்லறை விற்பனையாளர்கள் மக்களின் தேவையை அறிந்து தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 2020-ல் 349.5 டன்னாக இருந்த நிலையில், 2021-ல் 924.6 டன்னாக உயர்ந்தது.

வரும் ஆண்டுகளில் தங்கம் மிகவும் முக்கியமான சொத்தாக மாறலாம்; கொரோனா நோய்த்தொற்று, பொது முடக்கம் போன்ற இடையூறுகள் இல்லாமல் இருந்திருந்தால் தங்கத்தின் மொத்த தேவை கிட்டத்தட்ட 800 - 850 டன்னாக இருந்திருக்கும்.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash

மதிப்பின் அடிப்படையில் 2020-ல் 1,33,260 கோடி ரூபாயாக இருந்த தங்கத்தின் தேவை 96% அதிகரித்து, 2021-ல் ரூபாய் 2,61,140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் தங்க சேமிப்பும் மக்களிடையே அதிகரித்துள்ளது என்று அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

நம் மக்களின் தங்கத் தாகம் என்றுமே குறையாது என்பதற்கு உலக தங்க கவுன்சில் அதிகாரி சொன்ன புள்ளிவிவரங்களே போதும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism