இன்று மாலை ஜெயலலிதா உடல் நல்லடக்கம்

உடல்நலக்குறைவால் செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு 11.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், அவரது உடல் போயஸ் கார்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
பின்னர், அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!