ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

செல்வி ஜெ ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உடல் பலத்த பாதுகாப்புடன், கோட்டைக்குச் செல்லும் கடற்கரை சாலை வழியாக, ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் மல்க, நீண்ட வரிசையில் நின்று, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!