வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (07/12/2016)

கடைசி தொடர்பு:13:24 (07/12/2016)

ஜெ.வுக்கு புகழாரம் சூட்டிய கேரள அரசின் விளம்பரம்!

மறைந்த ஜெயலலிதாவுக்கு திருக்குறள் மூலம் புகழாரம் சூட்டியுள்ளது கேரள அரசு.

கடந்த 5-ம் தேதி மறைந்த ஜெயலலிதா உடலுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரளா முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், கர்நாடக அரசு ஒருநாள் துக்கம் அனுசரித்தது. இந்தநிலையில், ஜெயலலிதாவுக்கு கேரளா அரசு புகழாரம் சூட்டியுள்ளது. தமிழக பத்திரிகை ஒன்றில் திருக்குறளுடன் தமிழில் கேரள அரசு விளம்பரம் செய்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க