போயஸ் கார்டன் வீடு இனி யாருக்கு சொந்தம்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது அ.தி.மு.க லகானை கையில் எடுத்துவிட்டார் என்று பேசிக்கொள்ளுகிறார்கள். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிற்கு முதல் மரியாதை தராமல் அவரை பின்னுக்குத் தள்ளி இவரே கவனித்தார். முறைப்படி, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தும் அவரது ரத்த உறவுமுறை வாரிசான மறைந்த அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக்... இருவருக்கும்தான் சேர வேண்டும். இதை வலியுறுத்த ஆரம்பித்திருக்கும் ஜெயலலிதாவின் உறவு முறைகள் மீடியாக்களிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

"போயஸ் கார்டன் வீடான "வேதா நிலையம்" ஜெயலலிதாவின் தாயார் சந்தியா விலைக்கு வாங்கியது. ஆக, பூர்வீகச் சொத்து. எனவே, ஜெயக்குமார் வாரிசுகளுக்குத்தான் போக வேண்டும். இதில் சசிகலாவுக்கு உரிமை இல்லை. இதற்காகத்தான் தீபக்கிற்கு சில சலுகைகளை வழங்கி தன் கஸ்டடியில் வைத்திருக்கிறார் சசிகலா. ஆனால், தீபா அப்படியல்ல..! தனது போயஸ்கார்டனில் உள்ள தன் பங்கை விட்டுதரமாட்டார்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

- ஆர்.பி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!