Published:Updated:

`ஃப்ரெண்ட்ஸ பாக்கணும்; ஸ்கூல திறக்கச் சொல்லுங்க!' - பொதுநல வழக்காக மாறிய 10 வயது மாணவனின் கடிதம்

நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை என்றும், பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு மும்பையை சேர்ந்த 10 வயது சிறுவன் கடிதம் எழுதி இருக்கிறார். அதனை கோர்ட் வழக்காக ஏற்றுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனால் குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்போதுதான் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மும்பையை சேர்ந்த 10 வயது மாணவன் கபீர், பள்ளி நண்பர்களை ஆன்லைனில் மட்டுமே சந்திக்க முடிகிறது, எப்போது பள்ளி திறக்கும் என்று தன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.

CJI N V Ramana
CJI N V Ramana
https://main.sci.gov.in/

மேலும் இது தொடர்பாக, 5-வது வகுப்பு படிக்கும் கபீர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரமணாவிற்குக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ``இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14-ன் கீழ் `அனைவருக்கும் உரிமைகள் சமமானவை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என் அம்மாவும் இந்த சட்டப்பிரிவு குறித்து என்னிடம் தெரிவித்திருக்கிறார். சலூன்கள், ரெஸ்டாரன்ட்கள் உள்ளிட்ட பல இடங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எங்களால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள, என் நண்பர்கள் உட்பட ஏராளமான மாணவர்களிடம் நல்ல ஸ்மார்ட் போன் இருப்பதில்லை'' என்று மாணவர் கபீர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சிறுவன் கபீர், இரண்டாம் வகுப்புப் படித்தபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கடிதத்திற்கு பதில் வரவில்லை.

என் மகன், மொபைலில் நிறைய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதால் பாதிப்புகள் ஏற்படுமா? | Doubt of Common Man

இந்தக் கடிதத்திற்கும் பதில் வராமல் போய்விடுமோ என்று கபீர் நினைத்திருந்த நிலையில், அவருக்கு பதில் வந்துள்ளது.

மாணவர் கபீரின் கடிதம் தொடர்பாக, அவர் அம்மாவுக்கு மெசேஜ் வந்துள்ளது. கபீர் அனுப்பிய கடிதத்தை பொதுநல மனுவாக ஏற்றுக்கொண்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர் கபீர் கூறுகையில், ``ஆன்லைனில் இரண்டு மணி நேரம்தான் வகுப்புகள் நடக்கிறது. பள்ளி நிர்வாகம் அதிக நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதில்லை. மேலும் பள்ளி நண்பர்களைப் நேரில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதேபோல கம்ப்யூட்டரில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. கம்ப்யூட்டரில் ஹோம் ஒர்க் செய்து கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது" என்றார்.

சிறுவன் கபீர் எழுதிய கடிதம்
சிறுவன் கபீர் எழுதிய கடிதம்
Fact Check: மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் NMMS உதவித்தொகை; வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதிய யோசனை பற்றி கபீர் பேசியபோது, ``பள்ளிக்குப் போகமுடியாமல் இருந்ததால் மிகவும் கவலையில் இருந்தேன். எனவே என் அம்மாதான், சுப்ரீட் கோர்ட் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதும்படி கூறினார். கோர்ட், அரசுக்கு உத்தரவிட முடியும் என்று என் அம்மா தெரிவித்தார். எனவேதான் இக்கடிதத்தை எழுதினேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு