Published:Updated:

'கறுப்பு பணம்: வழக்குப் பதிவுக்குப் பிறகு பெயர்ப் பட்டியல் வெளியீடு'

'கறுப்பு பணம்: வழக்குப் பதிவுக்குப் பிறகு பெயர்ப் பட்டியல் வெளியீடு'

புதுடெல்லி, பிப்.10,2011

'கறுப்பு பணம்: வழக்குப் பதிவுக்குப் பிறகு பெயர்ப் பட்டியல் வெளியீடு'

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று உறுதியளித்தது. ##~~##

சுவிஸ், ஜெர்மெனி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி, பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. கில், நாடாளுமன்ற முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கில், ஜெர்மெனியின் லீச்டென்ஸ்டீன் வங்கியில் இருந்து 26 பேரின் கணக்குகளை விவரம் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கறுப்புப் பணம் வைத்துள்ளவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் கறுப்பு பணம் போட்டு வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு, பெயர் விவரங்கள் மக்கள் மத்தியில் வெளியிடப்படும்," என்றார் கோபால் சுப்ரமணியம்.

அதைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கான் இந்தியாவை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் கேட்டுக் கொண்டது.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், இந்தியாவில் தான் ஹசன் அலி கான் இருப்பதாகவும், அவருக்கு எதிராக உரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முன்னதாக, சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 17 பேருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு