Published:Updated:

பினாயக் சென்னின் ஜாமீன் மனு நிராகரிப்பு

பினாயக் சென்னின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சத்தீஸ்கர், பிப்.10,2011

தேசத்துரோக குற்றச்சாட்டுக்காகவும், மாவோயிஸ்டுகளுடன் உள்ள தொடர்புக்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.##~~##

நாட்டுக்கு எதிராக சதி செய்தாக கூறி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 124ஏ, 120பி ஆகியவற்றின் கீழ் டாக்டர் பினாயக் சென், நாராயண் சன்யால், பியூஸ் குஹா ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்த ராய்ப்பூர் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, பினாயக் சென்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.பி.ஷர்மா, ஆர்.எல். ஜன்வர் ஆகியோர் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாகத் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும், அங்கேனும் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் பினாயக் சென் தாயார் அனுசுயா தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு