Published:Updated:

`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா?’ - உயர் நீதிமன்றம் கண்டனம்

`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா?’ - உயர் நீதிமன்றம் கண்டனம்
News
`தீர்ப்பை விமர்சிக்கலாம்; நீதிபதியை விமர்சிப்பதா?’ - உயர் நீதிமன்றம் கண்டனம்

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சித்தவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சித்தவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்  ஆளுநரிடம் புகார் அளித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குப் பரிந்துரை செய்தார். இதையடுத்து ஆளுநரிடம் கடிதம் வழங்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வெளியாகியது. இதில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர்.

இதனால் இந்த வழக்கு 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை விமர்சனம் செய்தவர்கள்மீது, காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதேபோல அமைச்சர்கள், முதல்வர் மீது விமர்சனம் செய்தால் நடவடிக்கை எடுக்காமலிருப்பீர்களா என்று தொடர் கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். மேலும், தலைமை நீதிபதிமீது விமர்சனம் செய்தவர்கள் குறித்து புகார் ஏதும் உள்ளதா. அப்படியில்லையெனில், காவல்துறையே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.