Published:Updated:

போலீஸுக்கு வார விடுமுறை - உள்துறைச் செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர் பதிலளிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவலர்கள் வீட்டில் ஆடர்லியாக உள்ளவர்களின் விவரம் குறித்து பதிலளிக்க நீதிபதி கிருபாகரன் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் `காவலர்கள், காவல்துறையில் உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியமர்த்தப்படுவதில்லை. தற்போது ஆட்சியில் உள்ளவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் ஆகியோரின் வீடுகளில் ஆடர்லி முறையில் எந்தக் காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவதில்லை. சென்னையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு ஏ, பி, சி என சிப்ட் முறையில் பணி வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள காவலர்களுக்குப் பணிடத்துக்குத் தகுந்தவாறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது' எனப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் மனு குறித்து பேசிய நீதிபதி கிருபாகரன். `காவல்துறையின் மீது ரவுடிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

பொதுமக்களும் பிரச்னை ஏற்படும்போது காவல்துறையில் புகார் அளிக்கின்றனர். ஆனால், காவலர்களுக்கே பிரச்னை ஏற்படும்போது என்ன செய்வது; திட்டமிட்டு நடைபெறும் கொலை சம்பவங்களை நிறுத்தினால் மட்டுமே காவலர்கள் மீதான தாக்குதலைக் குறைக்க முடியும். மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலத்தில் உள்ளதுபோல் காவலர்கள் மீது தாக்குதலை தடுக்க ஏன் தமிழகத்தில் சிறப்பு சட்டங்கள் அமல்படுத்த கூடாது' என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாகத் தமிழக உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.