Published:Updated:

ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன்! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணப்பட இயக்குநரும் வழக்கறிஞருமான திவ்யபாரதி மீது நீலகிரி மாவட்டம் கூடலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த காலத்திலிருந்து பொதுப்பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தி காவல்துறையின் கண்காணிப்புக்கு உள்ளானவர் திவ்யபாரதி. சமூக செயற்பாட்டாளராக இயங்கி வந்தவர் கடந்த வருடம் `கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கினார். துப்பரவுத் தொழிலாளிகளின் பிரச்னைகளை வைத்து எடுக்கப்பட்டது அந்தப் படம். அப்படம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பற்றி `ஒருத்தரும் வரலே' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், இவர் வீட்டில் வெளியூர் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதேபோல் நீதிமன்ற வளாகத்திலிருந்த திவ்யபாரதியை சம்மன் இல்லாமல் விசாரணைக்கு அழைத்தனர். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச் சென்றனர். 

இந்தநிலையில்தான் ``தன்னை காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்ய முயற்சி செய்வதாகவும், தனக்கு முன்ஜாமீன் வேண்டும்" என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். `ஒருத்தரும் வரலே' பட டீஸரில் தேசியக்கொடியை அவமதித்துள்ளதால் கூடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திவ்யபாரதியைக் கைது செய்ய  மதுரை உயர் நீதிமன்றம் இன்றுவரை தடை போடப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , கூடலூரில் ஒருவாரம் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி திவ்யபாரதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்காக த.மு.எ.க.ச. துணைத்தலைவரும் வழக்கறிஞருமான செந்தில்நாதன் ஆஜரானார்.